29.7 C
Chennai
Sunday, Dec 22, 2024
honey
மருத்துவ குறிப்பு

ஆஸ்துமாவை குணமாக்கும் தேன்

நாம் நினைத்திருப்போம் மலர்களிலிருந்து தேனை உறிஞ்சிக்கொண்டு வந்து தேன்கூட்டில் அடைகிறது என்று. ஆனால் உண்மை அதுவல்ல. மலர்களிலிருக்கும் குளுக்கோஸை உணவாக அருந்திய பிறகு, தேனீயின் வயிற்றிலிருந்து சுரக்கும் ஒரு வித திரவமே தேன். இது அறிவியல் பூர்வ உண்மை. சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் தேனை பருகலாம். நோய் தீர்க்கும் மருந்து தான் தேன். அந்த காலங்களில் மூலிகை மருத்துவத்தில் தேனை தான் அதிகம் பயன்படுத்தியிருக்கின்றனர். கொடுக்கப்படும் மருந்தை உடலுக்கு ஏற்றவாறு மாற்றி அமைப்பதில் தேனின் பங்கு அதிகம். இதனால்தான் தோனோடு மற்ற மருந்துகளை உண்ணக்கொடுத்து வருகின்றனர்.

தேனில் உள்ள சத்துக்கள்

இயற்கையாகவே சத்தும் சுவையும் உள்ள உணவு தேன். தேனில் வைட்டமின் B2,B6 H(biotin), K மற்றும் சிட்ரிக் அமிலம், டார்டாரிக் அமிலம், அக்ஸாலிக் அமிலம், குளுக்கோஸ், பாஸ்பரஸ், கந்தகம், இரும்புச்சத்து, உப்புச்சத்து, மக்னீசியம், கால்சியம், அயோடின், பொட்டாசியம், குளோரின் போன்ற அனைத்து சத்துக்களும் நிறைந்துள்ளன.

200கிராம் தேனில் 1 1/4 லிட்டர் பால் மற்றும் 1 1/2 கிலோ மாமிசம் ஆகியவற்றில் எத்தனை சத்துப்பொருள்கள் உள்ளனவோ அதற்கு இணையான சத்துப்பொருள் தேனில் உள்ளது. தேன் வெளிப்படையாக இனிப்புச் சுவை உடையதாயினும் உடலுக்கு அது கசப்பு சுவையைத் தருகிறது. கசப்புச்சுவை நரம்புகளுக்கு பலம் தருபவை. எனவே தேனை உண்டால் நரம்புகள் பலம் பெறுகின்றன.

மருத்துவம்

தேன் மூலம் பெரும்பாலான நோய்களை குணப்படுத்த முடியும். பித்தப்பை மற்றும் ஈரல் நோய்கள் அனைத்திற்கும் மருந்தாக உள்ளது. தினமும் வெறும் வயிற்றில் காலை அல்லது இரவு நேரத்தில் உணவு உண்ணும் முன் சுத்தமான தேனை ஒன்று முதல் 3 தேக்காரண்டி எடுத்து கொண்டு ஆறிய சுடுநீருடன் கலந்து குடித்து வந்தால் இரைப்பை அழற்சி, ஈரல், வயிற்று புண், பித்தப்பை நோய்கள் குணமாகும். எலுமிச்சை பழம் சாறுடன் தேனை கலந்து குடித்தால் குமட்டல், வாந்தி மற்றும் தலைவலி சரியாகும்.

குடல் புண்கள், காய்ச்சல், இருமல், இருதய நோய்கள் போன்றவை குணமடைகிறது. மேலும் அஜீரணம் சீதபேதி போன்ற நோய்களுக்கு இது அருமருந்தாகும். இதில் உள்ள பொட்டாஷியம் மூட்டு வலியை போக்குகிறது.

வயதான பெரியவர்கள் அளவுடன் தேனை சாப்பிட்டு வர நீண்ட காலம் உடல்நலக் கோளாறில்லாமல் வாழ முடியும். குழந்தைகளுக்கு தேனை இரண்டு டீஸ்பூன் அளவுக்கு உணவில் கலந்து கொடுப்பதால் அவர்களுக்கு ஏற்படும் மலச்சிக்கல் வயிற்று உபாதைகளை அனைத்தும் நீங்கிவிடும்.

தூக்கம் வரும்

குழந்தைகளுக்கு இரவில் படுக்கப்போகும் முன் ஒரு டீஸ்பூன் அளவு தேனைக் கொடுத்தால், அதுவே தூக்கத்தை தூண்டும் மருந்தாகவும் செயல்படுகிறது. இதனால் குழந்தையின் வளர்ச்சி அதிகரிக்கும். இருதயம், நுரையீரல் இரைப்பை ஆகிய உறுப்புகளை வலுப்படுத்தும். தோடு ரத்த நாளங்களிலும், குடலிலும் சேருகின்ற அழுக்குகளை அகற்றி கழிவுகளாக வெளியேற்றும் ஆற்றல் கொண்டது.

பழமும் தேனும்

தேனை பழச்சாறுடன் கலந்து சாப்பிட்டால் நல்ல சக்தி கிடைக்கும். மாதுளம் பழச்சாறுடன் தேன் கலந்து சாப்பிடும் போது புது ரத்தம் உருவாகும். எலுமிச்சை சாறுடன் தேன் கலந்து சாப்பிட இருமல் குணமாகும். இஞ்சியுடன் தேன் கலந்து சாப்பிட பித்தம் தீரும். ஆரஞ்சு பழத்துடன் தேன் கலந்து சாப்பிட நல்ல தூக்கம் வரும். ரோஜாப்பூ குல்கந்தில் தேன் கலந்து சாப்பிட உடல் சூடு தணியும். நெல்லிக்காயுடன் தேன் கலந்து சாப்பிட ரத்த சோகை நீங்கும்.

கண் பார்வைக்கு

கண் பார்வை பிரகாசமாக தெரிய தேனுடன் வெங்காய சாரை கலந்து சாப்பிட்டு வர வேண்டும். தேனை கேரட் சாறுடன் கலந்து காலை ஆகாரத்திற்கு ஒரு மணி நேரத்திற்கு முன் பருகினால் கண் பார்வை விருத்தியடையும்.

இருமல்

இரவி்ல் தூங்கவிடாமல் தொடர்ந்து வரும் இருமலுக்கு மிளகு பொடியில் தேன் கலந்து சாப்பிட்டால் இருமல் வெகுவாக குறைந்து நிம்மதியாக தூக்கலாம்.

சரியளவு தேன் மற்றும் இஞ்சி சாறு கலந்து அருந்தினால் இருமல் தொண்டை வலி, மார்பு சளி, மூக்கடைப்பு போன்ற உபாதைகளில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.

ஆஸ்துமா

அரை கிராம் கருப்பு மிளகை பொடிசெய்து சரியளவு தேன் மற்றும் இஞ்சி சாறுடன் கலந்து தொடர்ந்து குடித்து வந்தால் ஆஸ்துமா குணமாகும்.

ரத்தகொதிப்பு

ஒரு தேக்கரண்டடி அளவு பூண்டு சாறுடன் இரண்டு தேக்கரண்டி தேன் சேர்த்து தினமும் இருவேளை சாப்பிடுவது இரத்த கொதிப்புக்கு சிறந்த மருந்தாகும்.

கொழுப்பு குறைப்பு

ஒரு டம்ளரில் மிதமான சூடுள்ள நீரில் ஒன்று அல்லது இரண்டு தேக்கரண்டி தேனும் ஒரு தேக்கரண்டி எலுமிச்சை சாறும் கலந்து தினமும் காலை பருகவும். இது ரத்த சுத்திகரிப்பிற்கும், உடல் கொழுப்பை குறைப்பதற்கும், மற்றும் வயிற்றை சுத்தமாக்கவும் உதவும்.

தீப்புண்கள்

தீக்காயம் ஏற்பட்டால் உடனடியாக தீக்காயத்தின் மீது சிறிது தேனைத் தடவவேண்டும். தேனுக்கு காயத்தை ஆற்றும் தன்மையும், கிருமிநாசினித் தன்மையும் உண்டு. இதன் காரணமாக தீப்புண் எளிதில் ஆறுவதோடு, தீக்காயத்தால் உண்டாகம் தழும்புகளும் வழக்கத்தை விட குறைவான அளவில் இருக்கும்.honey

Related posts

45 வயதை கடக்கும் பெண்களுக்கு ஏற்படும் உடல் உபாதைகள்

nathan

ஆண்களே தெரிஞ்சிக்கங்க…கர்ப்பமாக இருக்கும் உங்கள் மனைவியிடம் சொல்லக்கூடாத 12 விஷயங்கள்!!!

nathan

உங்க பற்களின் வடிவம் உங்கள் விதியை எப்படி நிர்ணயிக்கிறது தெரியுமா? தெரிந்துகொள்ளுங்கள் !

nathan

உங்கள் எலும்புகள் பலவீனமாகி பெரிய ஆபத்தில் உள்ளது என்பதை உணர்த்தும் அறிகுறிகள்!

nathan

உயர் ரத்த அழுத்த நோய் தீர ஆயுர்வேத மருத்துவம்

nathan

பெண்களே உங்களுக்கு ஆரோக்கியமான வழியில் உடல் எடையை குறைக்க ஆசையா?

nathan

அதிகளவில் சிசேரியன் நடக்க காரணம் என்ன?

nathan

உங்களுக்கு தெரியுமா கொட்டை கரந்தையின் மருத்துவ குணங்கள்…!

nathan

சிந்தனைகளை செதுக்குங்கள்… வெற்றி நிச்சயம்

nathan