சைவ உணவுகளை விட அசைவ உணவுகளை அதிகம் விரும்பி சாப்பிடுபவர்களே ஏராளம்.
அவ்வாறு அசைவ உணவுகளை வெளுத்துக்கட்டும் அசைவ பிரியர்களுக்கு சில டிப்ஸ் இதோ,
ஈரமான பாத்திரத்தில் முட்டையை உடைத்து ஊற்றி கலக்கினால் வெள்ளைக்கரு பாத்திரத்தில் ஒட்டி வீணாவதைத் தவிர்க்கலாம்.
சில முட்டையை உடைத்து ஊற்றும்போது மஞ்சள், வெள்ளைக் கருவுடன் சிவப்பு நிறத்தில் இரத்தம் போன்று கலந்து இருக்கும். அப்படியிருந்தால் உபயோகிக்கக்கூடாது.
முட்டை தயார் செய்த பாத்திரங்களை குளிர்ந்த தண்ணீரில் ஊறப்போட்டு உடனே கழுவ வேண்டும்.
மஞ்சள் நிறம் கொண்ட எண்ணெய் மயமான கொழுப்புடையதும், உளம் ஊதா நிறம் கொண்ட மாமிசத்தையும் வாங்கக் கூடாது.
ஆற்று மீனின் சேற்று வாடை போவதற்கு மீனை உப்புப் போட்ட தண்ணீரில் ஊற வைக்க வேண்டும்.
உலர்த்திய மீனை சமைப்பதற்கு முன் நன்றாக கழுவி சில மணி நேரம் குளிர்ந்த தண்ணீரில் ஊற வைக்கவும்.
மீனை கனமான துண்டுகளாக வெட்டி மிளகு, எலுமிச்ச பழச்சாறு, உப்பு சேர்த்து சுத்தமான காகிதத்தில் டால்டா தடவி அதில் மீனைச் சுற்றி இட்லிப்பானை ஆவியில் வேகவைத்து வெந்ததும் சூடாக சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.
ஆட்டிறைச்சி புதியதாக இருந்தால் உறைந்த பாலாடை போன்ற கொழுப்போடும், இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும். உடைந்த எலும்பின் உட்பாகம் வெண்மையாக இருக்கும்.
கடினமான சமைக்காத கறியை எலுமிச்சம் பழச்சாறு சேர்த்து ஊறவைத்தால் மிருதுவாகிவிடும்.
அசைவ சாப்பாடு சாப்பிட்ட பிறகு எலுமிச்சம் பழச்சாறு குடித்தால் எளிதில் ஜீரணமாகும்.