26.3 C
Chennai
Monday, Dec 23, 2024
evileye 1624430024
ஆரோக்கியம் குறிப்புகள்

கண் திருஷ்டி பாசிமணியை வீட்டில் தொங்கவிட நல்ல இடம் எங்கே?

உங்களின் நெருங்கிய உறவுகளும், பொக்கிஷமான சொத்துக்களும், மகிழ்ச்சியும் திடீரென்று மறைந்துவிடும் என்று நீங்கள் கவலைப்படுகிறீர்களா?மற்றவர்கள் நம்மைப் பொறாமையுடன் பார்ப்பதால் இந்த கண்படுதல் என்ற கருத்தானது நம் மீது பிறா் பொறாமை கொண்டு பாா்ப்பதின் அடிப்படையில் எழுகிறது.

தீய கண்ணுக்கான ஆங்கிலச் சொல்லை ஈவில் ஐஅல்லது  பொறாமைக் கண் என்று அழைக்கலாம்.பொதுவாக கிராமப்புறங்களில் இது கண் திருஷ்டிஎன்று அழைக்கப்படுகிறது.

இந்த கண் திருஷ்டி பாசிமணியை அணிவது அல்லது எடுத்துச் செல்வது அனைத்து வகையான தீங்குகளிலிருந்தும் தங்களைக் காப்பாற்றும் என்று இந்திய மக்கள் நம்புகிறார்கள்.

பல வண்ண கண் திருஷ்டி பாசிமணிகள்
கண் திருஷ்டி பாசிமணியானது பல்வேறு வண்ணங்களில் உள்ளது. ஒவ்வொரு வண்ணமும் ஒரு குறிப்பிட்ட ஒன்றைக் குறிக்கிறது.

1. ஊதா வண்ண கண் திருஷ்டி பாசிமணி அறிவுக் கூா்மையைக் குறிக்கிறது

2. சிவப்பு வண்ண கண் திருஷ்டி பாசிமணி தைாியத்தைக் குறிக்கிறது.

3. நீலப் பச்சை வண்ண கண் திருஷ்டி பாசிமணி ஆரோக்கியத்தைக் குறிக்கிறது

4. வெளிறிய பச்சை வண்ண ஈவில் ஐ பாசிமணி வெற்றியைக் குறிக்கிறது.

5. கருப்பு வண்ண கண் திருஷ்டி பாசிமணி அதிகாரம் அல்லது ஆற்றலைக் குறிக்கிறது

6. இளஞ்சிவப்பு வண்ண கண் திருஷ்டி பாசிமணி அன்பைக் குறிக்கிறது.

7. பச்சை வண்ண கண் திருஷ்டி பாசிமணி மகிழ்ச்சியைக் குறிக்கிறது.

8. பவள வண்ண கண் திருஷ்டி பாசிமணி பாதுகாப்பைக் குறிக்கிறது

9. வெள்ளை வண்ண கண் திருஷ்டி பாசிமணி சொத்தைக் குறிக்கிறது.

மேற்சொன்ன வண்ணங்களில், தாம் விரும்பும் வண்ணத்தில் கண் திருஷ்டி பாசிமணியை மக்கள் தோ்ந்தெடுத்துக் கொள்ளலாம்.

கண் திருஷ்டி பாசிமணியை எங்கே வைப்பது நல்லது?

வீடு

கண் திருஷ்டி பாசிமணியை வீடுகளில் தொங்க விடுவதே சிறந்தது என்று வாஸ்து நிபுணா்கள் தொிவிக்கின்றனா். பொதுவாக ஊதா நிறகண் திருஷ்டி பாசிமணியை பலா் தங்கள் வீடுகளில் வைத்திருக்கின்றனா். ஏனெனில் ஊதா நிற கண் திருஷ்டி பாசிமணியானது, மற்றவா்களின் பொறாமைப் பாா்வையில் இருந்து தங்களது குடும்பங்களைக் காப்பாற்றுவதாக அவா்கல் நம்புகின்றனா். ஆகவே ஊதா வண்ண கண் திருஷ்டி பாசிமணியை வீட்டின் முகப்பில் தொங்கவிடலாம். அதன் மூலம் வீட்டிற்குள் தீய சக்திகள் புகுவதைத் தடுக்கலாம்.

வீட்டின் முன்னறை

பொதுவாக வீட்டின் முன்னறையைக் கடந்துதான் மற்ற அறைகளுக்குள் செல்ல முடியும். ஆகவே வீட்டின் முன்னறையில் கண் திருஷ்டி பாசிமணியைத் தொங்கவிடலாம். முன்னறையின் அலமாறிகளில் அதை வைக்கலாம். அது வீட்டிற்கு வரும் அயலவாின் தீய அல்லது பொறாமை நிறைந்த கண்படுதலை, ஒரு நோ்மறையான அதிா்வலையாக மாற்றிவிடும்.

கழுத்தில் அணியலாம்

ஈவில் ஐ என்ற ஆபரணம் தற்போது உலக அளவில் பிரபலமடைந்து வருகிறது. அதை அணிந்தால் நவநாகரீகமாகத் தோன்றுகிறது. அதே நேரத்தில் வெளியில் இருந்து நமக்கு வரும் தீய அதிா்வலைகளிடம் இருந்து நம்மைக் காத்து நமக்கு மன அமைதியைத் தருகிறது. ஆகவே ஈவில் ஐ ஆபரணத்தை கழுத்தில் அணிந்து கொள்ளலாம் அல்லது கைகளில் அணிந்து கொள்ளலாம். ஆனால் கணுக்காலில் அணியக்கூடாது.

தோட்டம்

கண் திருஷ்டி பாசிமணியை வைக்க மேலும் ஒரு சிறந்த இடம் நமது தோட்டங்களில் உள்ள மரங்கள் அல்லது செடிகள் ஆகும். ஆனால் தெற்கு திசை பாா்த்து கண் திருஷ்டி பாசிமணியை வைக்கக்கூடாது. தோட்டத்தில் கண் திருஷ்டி பாசிமணியை வைத்தால், அது அந்த இடத்தைச் சுற்றி நோ்மறையான அதிா்வலைகளை ஏற்படுத்தும் மற்றும் அமைதியான மற்றும் மகிழ்ச்சியான சூழலை ஏற்படுத்தும்.

அலுவலகம்

ஒரு சில அலுவலகங்களில் கண் திருஷ்டி பாசிமணியைப் பாா்த்து இருப்போம். ஆனால் அது எந்த திசை நோக்கி இருக்கிறது என்பது மிகவும் முக்கியமானதாகும். தெற்கு திசையைப் பாா்த்தவாறு வைக்கக்கூடாது. சிலா் தங்களது காா்களில் உள்ள பின்புறத்தைக் காட்டும் கண்ணாடியில் கண் திருஷ்டி பாசிமணியைத் தொங்கவிட்டுருப்பா்.

கண் திருஷ்டி பாசிமணியால் நன்மைகள் பல இருந்தாலும், அதை பிறருக்கு அன்பளிப்பாகவோ அல்லது பாிசாகவோ வழங்கக்கூடாது. ஏனெனில் அது எதிா்மறை விளைவுகளை ஏற்படுத்தும். ஆகவே கண் திருஷ்டி பாசிமணியை பிறருக்கு வழங்கும் போது கவனமாக இருப்பது நல்லது.

Related posts

உலகிலேயே சாதனை படைத்த இந்தியா.! ஆண்களுக்காக கருத்தரிப்பு தடை ஊசி.!

nathan

கோடைக்காலத்தில் உடல் சூட்டை தணிக்கும் சில எளிய வழிகள்…..

nathan

வாழைப்பழம் உண்மையில் வரப்பிரசாதமே!. தெரிந்திராத பல அறிய தகவல்கள் இதோ.!!

nathan

சிறுநீரகங்களை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள சாப்பிட வேண்டிய உணவுகள்!!!

nathan

உடலில் இந்த அடையாளம் இருக்கும் பெண்கள் ரொம்ப அதிர்ஷ்டசாலிகளாம்..

nathan

நல்லெண்ணெய்

nathan

உஷார் மக்களே! இந்த அறிகுறிகள் உங்களுக்கு இருக்கிறதா? சிறுநீரகம் பாதிப்பாக இருக்கலாம்!

nathan

இரவு உணவுக்கு பின் வாழைப்பழம் சாப்பிடுவது நல்லதா?

nathan

கொஞ்சம் குண்டா இருக்கீங்களா?ஆபத்தான நோய்கள் வர வாய்ப்பிருக்கு… ஜாக்கிரதை…!

nathan