23.2 C
Chennai
Wednesday, Jan 22, 2025
22 6300622bcbb30
ஆரோக்கியம் குறிப்புகள்

வெறும் வயிற்றில் சீரக தண்ணீர் குடித்தால் நடக்கும் அதிசயம்!

சீரகம் ஒரு குணப்படுத்தும் மூலிகை. இது நம் வாழ்வில் அத்தியாவசியமான மூலப்பொருட்களில் ஒன்றாகும்.

உடலுக்கு நன்மை செய்யும் உணவுகள் மற்றும் குடிநீரில் சீரகம் பயன்படுத்தப்படுகிறது. இது உடலில் பல்வேறு மருத்துவ விளைவுகளை ஏற்படுத்துகிறது.

எனவே வெறும் வயிற்றில் சீரக நீரை குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி பார்க்கலாம்.

சீரகத் தண்ணீரால் நிகழும் அதிசயம்
தண்ணீரில் சிறிது சீரகத்தைப் போட்டு கொதிக்க வைத்து காலையில் வெறும் வயிற்றில் குடித்து வர வயிற்றுக்கு மிகவும் நல்லது. அஜீரணத்தில் இருந்து நிவாரணம் அளிக்கும். வயிற்று வலிக்கும் தீர்வு தரும்.
கர்ப்பிணி பெண்களும் சீரக நீர் பருகலாம். அது கர்ப்பகாலத்தில் செரிமானத்தை மேம்படுத்த உதவும். கார்போஹைட்ரேட் மற்றும் கொழுப்புகளின் செரிமானத்திற்கு தேவையான நொதிகளைத் தூண்டும். பால் சுரப்பையும் ஊக்குவிக்கும்.
செரிமான பிரச்சனைகள் இருந்தால் சீரகத் தண்ணீரை குடிப்பதால் உடனடியான நிவாரணம் கிடைக்கும். சீரகத்தில் உள்ள நார்ச்சத்து மலச்சிக்கல் பிரச்சனையிலிருந்து விடுபட உதவுகிறது.
வெறும் வயிற்றில் சீரக தண்ணீர் குடித்தால் நடக்கும் அதிசயம்! ஏகப்பட்ட பிரச்சினைக்கு தீர்வு | Empty Stomach Cumin Water Drink Benefits

நோய் எதிர்ப்பு சக்தியை சீராக பராமரிக்க சீரக நீர் குடிக்க வேண்டியது அவசியம். உடலில் நோய் எதிர்ப்பாற்றலை அதிகப்படுத்தும். மேலும் ரத்தத்தில் சர்க்கரையின் அளவை குறைக்க வழிவகுக்கும். சீரக நீர் சுவாச கட்டமைப்புக்கும் நன்மை சேர்க்கும். சளியை குணப்படுத்தவும் உதவும்.
உயர் இரத்த அழுத்த பிரச்சனை உள்ளவர்கள் சீரக நீரை குடித்தால் அதில் உள்ள பொட்டாசியம் இரத்த அழுத்தத்தை சீராக வைத்திருக்க உதவுகிறது.
சீரகத்தில் பொட்டாசியம் அதிகமாக உள்ளது. அது ரத்த அழுத்தத்தை சீராக்க உதவுகிறது. வளர்சிதை மாற்றத்துக்கும் வலுசேர்க்கும். சீரக நீர் உடலில் இருந்து நச்சுகளை வெளியேற்றவும் உதவுகிறது. மற்றும் பித்தப்பைக்கும் பாதுகாப்பு அளிக்கும். கல்லீரலும் பலம் பெறும். உடல் ஆரோக்கியத்துக்கு இரும்பு சத்து மிக அவசியம்.
இரும்பு சத்து குறைபாட்டையும் சீரக நீர் சீர் செய்யும். மாதவிடாய் காலத்தில் வலி நிவாரணியாகவும் விளங்குகிறது. அந்த சமயத்தில் சீரக நீர் பருகுவதன் மூலம் வலி கட்டுப்படும்.
சரும பளபளப்புக்கும் சீரக நீரை பயன்படுத்தலாம். அதில் பொட்டாசியம் மட்டுமின்றி கால்சியம், செலினியம், மாங்கனீஸ் உள்ளிட்டவை இருக்கின்றன. அவை தோலுக்கு புத்துணர்ச்சி கொடுக்கிறது.
வெறும் வயிற்றில் சீரக தண்ணீர் குடித்தால் நடக்கும் அதிசயம்! ஏகப்பட்ட பிரச்சினைக்கு தீர்வு | Empty Stomach Cumin Water Drink Benefits

சீரகத்தில் உள்ள இரும்பு சத்து ஹீமோகுளோபின் அளவை அதிகரித்து உடலில் இரத்தசோகையை குணப்படுத்தும்.
சளி பிரச்சனை, சுவாசக் குழாயில் உள்ள நோய்க் கிருமிகள் அழிந்து சளி மற்றும் இருமலில் இருந்து உடனடி நிவாரணம் கிடைக்கும். தொடர்ந்து இந்த நீரைக் குடித்து வருவதால் ஞாபக சக்தி மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்யலாம்.
சீரக நீருடன் மஞ்சள் தூளை கலந்து முகத்தை கழுவினால், முகம் பளபளக்கும். சருமம் மென்மையாக, மிருதுவாகவும் இருக்கும். சீரகத்தில் உள்ள வைட்டமின் ஈ சத்து இளமையை தக்கவைக்க உதவும். இதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் கூந்தலை வலுவாக்குவதோடு. முடியின்வேர்கள் வளர்வதற்கு உதவும். முடி உதிர்தலை தடுக்கும்.

Related posts

உடலுக்கு அவசியமான 5 உணவுப்பொருட்கள்

nathan

உங்களுக்கு தெரியுமா பெண்களுக்கு இடுப்பு மடிப்பு ஏற்பட்டால்.. இந்த நோய்களும் வருமாம்.. தடுக்க என்ன செய்யலாம்..!

nathan

படுக்கையறையிலும் தாங்க முடியாத மூட்டைப்பூச்சி தொல்லையா?

nathan

உங்களுக்கு தெரியுமா ஆண்கள் அதிகமாக உயிரிழப்பதற்கு இவை தான் காரணமாக இருக்கிறதாம்!!!

nathan

ரமழான் நோன்பும் உடல் ஆரோக்கியமும் : முக்கிய குறிப்புகளுடன்,,,!

nathan

நீங்க பரம்பரை குண்டா ? அப்ப இத படியுங்க….

nathan

உங்களுக்கு தெரியுமா கையில் செம்பு காப்பு அணிவதால் உடலில் இத்தனை மாற்றங்கள் ஏற்படுமா…?

nathan

‘உலர் கண் நோய்’ எச்சரிக்கை “கணினி, செல்போன்களை இடைவிடாமல் பார்க்க வேண்டாம்”

nathan

தொரிந்து கொள்ளுங்கள்! மரணம் நிகழவிருப்பதை வெளிபடுத்தும் 10 அறிகுறிகள்…

nathan