28.1 C
Chennai
Sunday, Dec 22, 2024
wdbnj
ஆரோக்கிய உணவு

இந்த பொருட்களை தானமாக கொடுத்தால்..!!ஐஸ்வர்யம் பெருகுமாம்

இறைக்க இறைக்கத்தான் கிணற்றில் நீர் ஊரும் என்று பெரியவர்கள் சொல்வார்கள்.

நாம் கற்ற கல்வியை பிறருக்கு சொல்லிக்கொடுத்தால் நம்முடைய அறிவு விருத்தி அடையும் அதுபோல நாம் சில பொருட்களை தானமாக கொடுத்தால் நம்முடைய செல்வம் விருத்தி அடையும்.

தானம் கொடுப்பவர்களை இறைவனுக்கு மிகவும் பிடிக்குமாம் எனவேதான் தானம் செய்பவர்களின் வீட்டில் செல்வம் மேலும் மேலும் பெருகுகிறது.

பெண்கள் கையால் செய்யக்கூடிய காரியம் விருத்தி அடையும் என்பது நம்பிக்கை.

 

இதனால் தான் எந்த ஒரு நல்ல காரியமாக இருந்தாலும் அதை வீட்டில் இருக்கும் பெண்கள் கையால் செய்ய வேண்டும் என்று சொல்லுவார்கள்.

பெண்கள் மகாலட்சுமியின் அம்சம் எனவே தான் வீட்டு பெண்களின் கைகளில் இருந்து தினம் ஒரு ரூபாயாவது ஆண்கள் வாங்கிக் கொண்டு செல்ல வேண்டும் என்று சொல்வார்கள்.

அப்படி செய்வதன் மூலம் வருமானம் அதிகரிக்கும் என்றும் கூறுவார்கள்.

மேஷ ராசியில் பிறந்த பெண்கள் தங்க நிறத்தில் உள்ள பொருட்களை தானமாக தருவது நல்லது. மஞ்சள், கடலைப்பருப்பு, சுண்டல் போன்றவைகளை தானமாக தருவதன் மூலம் செல்வ வளம் பெருகும்.
மாற்றுத் திறனாளிகளுக்கு தேவையான பொருட்களை தானம் செய்தால் விரைவில் செல்வம் சேரும்.

ரிஷப ராசிக்காரர்கள் தேனை தானமாக தரலாம்.

செவ்வாய் கிழமைகளில் சாம்பார் சாதம் தானம் செய்வதன் மூலம் செல்வம் பெருகும்.

ஏழை பெண்களின் திருமணத்துக்கு முடிந்த பொருட்களை தானம் செய்வதன் மூலம் தடையில்லாத முன்னேற்றம் ஏற்படும்.

மிதுன ராசிக்காரர்கள் வெண் பொங்கல் சமைத்து முடிந்த அளவுக்கு ஏழைகளுக்கு தானம் கொடுங்கள்.
அனைத்து விதமான செல்வமும் தேடி வரும்.

ஏழை மாணவர்களுக்கு கல்விக்கு பணம் தானம் கொடுப்பதும் நன்மை தரும்.

சிம்ம ராசிக்காரர்கள் ஞாயிறு கிழமைகளில் தாமிரம், கோதுமை தானமாக தரலாம்.

ஏழை எளியோர்களுக்கு அடிக்கடி தயிர் சாதம் தானம் செய்ய வேண்டும்.

மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையானதை கேட்டு வாங்கிக்கொடுக்க நிம்மதியும் சந்தோஷமும் அதிகரிக்கும்.
கன்னி ராசிக்காரர்கள் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு கோதுமையால் ஆன இனிப்பு மற்றும் உணவு பொருட்களை தானம் செய்ய வேண்டும்.

ஏழை மாணவர்களுக்கு கொப்பி, பென்சில், பேனா வாங்கிக் கொடுக்க முன்னேற்றம் அதிகரிக்கும்.

துலாம் ராசிக்காரர்கள் பசு நெய்யை தானமாக வாங்கிக் கொடுக்கலாம்.

ஆதரவற்ற இல்லங்களில் தங்கி படிக்கும் மாணவ மாணவிகளுக்கு படிப்பு உதவித்தொகை தானமாக கொடுப்பது உங்கள் வீட்டு வாரிசுகளுக்கு நல்லது.

தனுசு ராசிக்காரர்கள் செவ்வாய்க் கிழமைகளில் முருகனை வழிபட்டு சாம்பார் சாதம் தானம் செய்தால் வாழ்வு செழிக்கும்.

வயதான பெண்களுக்கு கொண்டைக்கடலையால் செய்த உணவு தானம் செய்தால் நல்லது.

மஞ்சள் தானமாக தர நன்மைகள் நடைபெறும்.

சீப்பு, முகம் பார்க்கும் கண்ணாடி, மஞ்சள் கயிறு, மை டப்பா, குங்குமம், மஞ்சள் என்று ஒரு செட்டாக போட்டு சிறிய கவரில் பேக் செய்து இப்போது நமக்கு கிடைக்கிறது.

இந்த பொருட்களை வாங்கி வெற்றிலை பாக்கின் மேல் வைத்து அப்படியே சுமங்கலி பெண்ணுக்கு தானமாக கொடுக்க வேண்டும்.

எத்தனை பேருக்கு வேண்டும் என்றாலும் கொடுக்கலாம்.

மகரம் மற்றும் கும்ப ராசியில் பிறந்த பெண்கள் ஏழை பெண்களின் திருமணத்துக்கு உங்களால் முடிந்ததை தானமாக கொடுக்க வேண்டும்.

வாயில்லா ஜீவன்களுக்கு தீவனம் வாங்கி தரலாம்.

ஏழைகளுக்கு செருப்பு தானமாக வாங்கி தர வீட்டில் லட்சுமி கடாட்சம் உண்டாகும்.

செல்வ வளம் பெருகும்.

ஏழைகளுக்கு கதம்ப உணவை அடிக்கடி தானமாக கொடுக்க வேண்டும்.

இதனால் உங்களுக்கு வரும் பண வரவு இரட்டிப்பாகும்.

ஏழை நோயாளிகளுக் மருந்து மாத்திரை வாங்கி கொடுக்கலாம்.

மீன ராசியில் பிறந்த பெண்கள் வெல்லம் தானமாக கொடுக்கலாம்.

ஏழை மாற்றுத்திறனாளிகளுக்கு உதவினால் புண்ணியம் அதிகரிக்கும்.

பொதுவாக அனைத்து ராசிக்கார பெண்களும் தங்களின் கைகளால் நெல்லிக்காய் தானத்தை செய்வது வீட்டிற்கு லக்ஷ்மி கடாட்சத்தை கொண்டு வரும்.

முடிந்த அளவு வாங்கலாம் குறைந்த பட்சம் 11 நெல்லிக்காய்கள் வாங்கினால் கூட போதும்.

அந்த நெல்லிக்காய்களை அருகில் இருக்கும் கோவிலுக்கு எடுத்துச் சென்று அங்கு வரக்கூடிய பக்தர்களுக்கு இந்த நெல்லிக்காய் தானத்தை செய்யுங்கள்.

வெள்ளிக்கிழமை இந்த தானத்தை செய்வது மிகவும் சிறப்பு.

வரலட்சுமி நோன்பு கடைபிடிக்கப்படும் தினத்தில் அருகில் உள்ள கோவிலுக்கு சென்று நெல்லிக்காய்களை தானமாக வாங்கிக் கொடுங்கள்.

சகல செல்வங்களும் உங்கள் வீடு தேடி வரும்

Related posts

வேகமான உலகத்தில் நேரத்தையும் சேமித்திட சில அதிமுக்கிய சமையலறை ரகசியங்கள்!!!

nathan

நீரிழிவு நோயாளிகள் ஒரு நாளைக்கு எத்தனை பேரிச்சை பழம் சாப்பிடலாம்?

nathan

7 நாள் எலுமிச்சை ஜூஸ் தோலோடு குடிச்சா என்ன ஆகும்னு தெரியுமா? சூப்பர் டிப்ஸ்…

nathan

நான்ஸ்டிக் பொருட்களினால் பெண்களுக்கு பாதிப்பு

nathan

நின்னுக்கிட்டே சாப்பிட்டா என்னென்ன ஆபத்து! மோசமான குறைபாட்டை சந்திக்கலாம்.

nathan

உங்களுக்கு தெரியுமா உணவில் உப்பை அளவாக சேர்த்துக் கொள்வதால் பெறும் நன்மைகள்

nathan

உடலை குளிர்ச்சியாக்கும் சப்ஜா

nathan

எதிர்ப்பு சக்தி நிறைந்த முந்திரிபழம்!

nathan

அதிர்ச்சியூட்டும் உண்மை தகவல்கள் – by ,தினேஷ் (பாஸ்ட் புட் கடை வைத்து இருந்தவர்)

nathan