1453364683 1317
சைவம்

தேங்காய் பால் பப்பாளிகறி

தேங்காய் பால் சேர்த்து பச்சையான பப்பாளிகாயை வைத்து ஒரு சுவையான, காரமில்லாத சமையலை செய்வது எவ்வாறு என்பதனை பார்க்கலாம். இவை ஆப்பம், இட்ட்லி, தோசை போன்றவற்றோடு சாப்பிட சிறந்தது.

தேவையான பொருட்கள்:

பச்சை பப்பாளிக்காய் – 1 கப்
தேங்காய் – 1/2 கப் துருவியது
வெங்காயம் – 1 நறுக்கியது
பச்சை மிளகாய் – 3
இஞ்சி – 1/4 டீஸ்பூன்
கடுகு – தேவையான அளவு
சீரகம் – 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிதளவு
எண்ணெய் – 2 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
பால் – 1/2
ப்ரஷ் கிரீம் – 3 டீஸ்பூன்

செய்முறை:
1453364683 1317
முதலில் பாதியளவு தேங்காயை பால் எடுத்து கொள்ளவும். மீதியுள்ள தேங்காயை சீரகம் சேர்த்து அரைத்து கொள்ளவும்.

ப்பபாளிக்காயை தோல் நீக்கி நறுக்கி வைத்து கொள்ள வேண்டும்.

கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, வெங்காயம், கறிவேப்பிலை போட்டு தாளித்து பிறகு பச்சை மிளகாய், துருவிய இஞ்சியை சேர்க்கவும். நன்கு வதக்கவும். நன்கு வதங்கிய பிறகு பப்பாளி துண்டுகளை சேர்த்து வதக்கவும். 5 நிமிடம் கழித்து உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்க்கவும். பச்சை வாசனை போனதும்.

அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுதை சேர்க்கவும். நன்கு வெந்து வந்ததும் அனலை குறைத்து தேங்காய் பால் சேர்க்கவும். பிறகு அடுப்பை அனைத்து விட்டு ப்ரஷ் கிரீம் செர்க்கவும். மேலே கொத்தமல்லி தூவி இறக்கவும்.

Related posts

சூப்பரான மாங்காய் – பருப்பு ரசம்

nathan

வீட்டில் எளியமுறையில் செய்யக்கூடிய வாழைக்காய் சிப்ஸ்

nathan

செட்டிநாடு ஸ்டைல் உருளைக்கிழங்கு வறுவல்

nathan

பேச்சுலர்களுக்கான… சிம்பிளான தவா மஸ்ரூம்

nathan

சப்பாத்திக்கு சூப்பரான பன்னீர் குருமா

nathan

கத்தரிக்காய் – முருங்கைக்காய் சாப்ஸ் செய்யும் முறைகள்

nathan

சேனைக்கிழங்கு அவியல்

nathan

வாழைக்காய் கூட்டு

nathan

வேர்க்கடலை குழம்பு செய்வது எப்படி

nathan