25.6 C
Chennai
Wednesday, Jan 22, 2025
11
ஆரோக்கிய உணவு

வெற்றிலையில் உள்ள ஆச்சரியமான விஷயம்

வெற்றிலைக்கு “நாகவல்லி மெல்லடகு’ என்று ஒரு பெயரும் உண்டு.

வெற்றிலையின் காம்பே பல நோய்களை குணமாக்கக் கூடியது.

குழந்தைகளுக்கு சீரண சக்தி பெற வெற்றிலைச் சாறை கொடுப்பர்.

இந்த வெற்றிலைச் சாறானது பசியை தூண்டக் கூடியது.

கபம், சீதளம், வாதம், பித்தம் நீக்கும்.

வெற்றிலையை எண்ணெயில் முக்கி, விளக்கில் காட்டி நெஞ்சில் போட்டால், கபத்தால் உண்டான இருமல், மூச்சுமுட்டல், மூச்சு சிரமம் நீங்கும்.

தீக்காயங்களுக்கும், வீக்கத்திற்கும் வெற்றிலையை வைத்துக் கட்டலாம்.

தலைக்கனம், நீர் ஏற்றம், பசிமந்தம், தொண்டைக் கம்மல் நீங்கும்.

மனிதன் தோன்றிய காலத்தில் இருந்தே வெற்றிலை பயன்பாட்டில் இருந்து வருகிறது.

வெற்றிலையில் கல்சியம், இரும்புச்சத்து ஆகியன அதிகம் உள்ளது.

இது தவிர வெற்றிலையைப் பயன்படுத்தி பல நோய்களையும் குணப்படுத்தலாம்.

அரைடம்ளர் தேங்காய் எண்ணெயில் 5 வெற்றிலையை போட்டு கொதிக்க விடவும்.

இலை நன்கு சிவந்ததும் வடிகட்டி போத்தலில் அடைத்து வைத்துக் கொண்டு சொறி, சிரங்கு, படைக்கு தடவி வந்தால் நல்ல குணம் கிடைக்கும்.

இரண்டு தேக்கரண்டியளவு சீரகத்தினை மைபோல் அரைத்து மூன்று தேக்கரண்டி வெண்ணெயில் போட்டு கலக்கி 5 வெற்றிலையை எடுத்து அதன் பின் புறத்தில் இந்தக்கலவையை கனமாக தடவி, மருந்து தடவிய பாகத்தை சட்டியில் படும்படி வைத்து வதக்க வேண்டும்.

ஒவ்வொரு வெற்றிலையையும் வதக்கிய பின் ஒரு டம்ளர் தண்ணீரை விட்டு நன்றாக கொதிக்க வைத்து இறக்கி வடிகட்டி அந்த கசாயத்தை ஒரு வேளை மட்டும் சாப்பிட்டால் வயிற்றுவலி நீங்கி விடும்.

வெற்றிலையைக் கசக்கிக் சாறு எடுத்து அந்த சாற்றில் சிறிதளவு கற்பூரத்தைச் சேர்த்துக் குழப்பி வலியுள்ள இடத்தில் தடவினால் தலை வலி உடனே குணமாகும்.

 

இரண்டு வெற்றிலையை எடுத்து அதில் ஒன்பது மிளகை மடித்து வாயில் போட்டு நன்றாக மென்று விழுங்கி தேங்காய் துண்டுகள் சிலவற்றினையும் மென்று தின்றால் தேள் விஷம் உடனே முறியும்.

சர்க்கரை வியாதி உள்ளவர்கள் இரண்டு வெற்றிலையுடன் வேப்பிலை ஒரு கைப் பிடியளவும் அருகம்புல் ஒரு கைப்பிடியளவும் ஒரு சட்டியில் போட்டு 500 மிலி தண்ணீர் விட்டு நன்றாக கொதிக்க விடவும்.

தண்ணீரின் அளவு 150 மிலி ஆக குறையும் வரை கொதிக்க விட்டு, பின்பு வடிகட்டி ஆற வைத்து வேளைக்கு 50 மிலி வீதம் மூன்று வேளை உணவுக்கு முன்பு சாப்பிடவும்.

அல்சர் உள்ளவர்கள் இரண்டு வெற்றிலையுடன் அத்தி இலை 1 கைப்பிடி வேப்பிலை 5 ஆகியவற்றை மேலே உள்ள முறைப்படி கசாயம் தயாரித்து மூன்று வேளை அருந்தி வரவும்.

முற்றின வெற்றிலையைச் சாறு பிழிந்து அதில் இரண்டு அவுன்ஸ் சாற்றுடன் 3 மிளகு அதே அளவு சுக்கு ஆகியவற்றை ஒரு தேக்கரண்டி தேனுடன் கொடுத்தால் இரைப்பு மூச்சுத் திணறல் குணமாகும்.

Related posts

சத்து மாவு உருண்டை

nathan

உடல் எடையை குறைக்கும் கொள்ளு இட்லி

nathan

டயட்டில் இருப்போர் அதிகம் பயன்படுத்தும் ஓட்ஸ் கொழுக்கட்டை

nathan

இது பெண்மைக்கு மட்டுமல்ல ஆண்மைக்கும் ஆபத்து!…

sangika

தெரிஞ்சிக்கங்க…பலரும் கேள்விப்பட்டிராத ஆரோக்கிய நன்மைகளை உள்ளடக்கிய பழங்களின் தோல்கள்!!!

nathan

கண்டிப்பாக வாசியுங்க….ஆரோக்கிய உணவுகளை அதிகம் உட்கொள்வதால் உடலில் ஏற்படும் பாதிப்புகள் பற்றி தெரியுமா?

nathan

பால் பருகும் முன் இந்த உணவுகளை சாப்பிடாதீங்க! ஆபத்தாம்

nathan

சுவையான பேபி கார்ன் ப்ரோக்கோலி சாலட்

nathan

சூப்பரான … வெஜ் பர்கர்

nathan