பொதுவாக ஒரு நாளைக்கு 4-5 முறை சிறுநீர் கழிப்பது இயல்பானது. இதுவே 8 தடவைக்கு மேல் நடந்தால் எச்சரிக்கையாக இருப்பது அவசியம்.
அது சிறுநீர்ப் பாதையில் ஏற்படும் அழற்சியின் வெளிப்பாடாக இருக்கலாம் இதுபோன்ற சிக்கலைத் தடுக்க, சில உணவுகளை எடுத்துக் கொள்வது அவசியம்.
உங்களுக்கு அடிக்கடி சிறுநீர் கழிப்பு பிரச்சினை இருந்தால் கீழே குறிப்பிடப்பட்டுள்ள சில வீட்டு வைத்திய முறைகளை பின்பற்றி வரலாம். தற்போது அவை என்னென்ன என்பதை பார்ப்போம்.
அடிக்கடி சிறுநீர் கழிக்கும் பிரச்சினை
மாதுளை தோலை எடுத்து பேஸ்ட்டாக்கி அதில் கொஞ்சம் தண்ணீர் சேர்த்து ஒரு நாளைக்கு இரண்டு முறை என குடித்து வாருங்கள். இதை நீங்கள் 5 நாட்கள் தொடர்ந்து செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
சில கொள்ளு தானியங்களை எடுத்து வெல்லத்துடன் சேர்த்து தினமும் காலையில் மருந்து மாதிரி சாப்பிட்டு வாருங்கள். இது சிறுநீரக பிரச்சினையை களைய உதவுகிறது. அடிக்கடி சிறுநீர் கழிப்பதை போக்க உதவுகிறது.
சர்க்கரை வியாதி இல்லாமலே அடிக்கடி சிறுநீர் வருதா?… இதோ உங்களுக்கான வீட்டு வைத்தியம் | Home Remedies Frequent Urination
எள் விதைகளை சிறிது எடுத்து கேரம் விதைகளுடன் வெல்லம் சேர்த்து கலந்து சாப்பிடுங்கள். இது அடிக்கடி சிறுநீர் கழிப்பதை போக்க உதவுகிறது.
ஒரு ஸ்பூன் தேன் 3-4 துளசி இலைகள் என காலையில் வெறும் வயிற்றில் எடுத்து வாருங்கள். இதை தினசரி எடுத்து வரும் போது ஒரு நல்ல பலன் கிடைக்கும்.
யோகார்ட் அடிக்கடி சிறுநீர் கழிப்பதை போக்க உதவுகிறது. ஒவ்வொரு நாளும் உணவின் போது யோகார்ட்டை எடுத்து வாருங்கள்.
உலர்ந்த இஞ்சி மற்றும் தேன் அல்லது தண்ணீருடன் வெந்தய விதைகளுக்கான பவுடரை எடுத்துக் கொள்ளுங்கள். ஒரு நாளைக்கு இரண்டு முறை இதை தவறாமல் விரைவில் உங்களுக்கு பலன் கிடைக்கும்.
சந்தன எண்ணெய், பிராங்கின்ஷென்ஸ் எண்ணெய், ஜூனிபெர் எண்ணெய், டீ ட்ரி ஆயில் மற்றும் பெர்கமோட் போன்ற எண்ணெய்யை உங்க அந்தரங்க பகுதியில் தடவி வாருங்கள். இது எரியும் உணர்வை போக்கும்.
1/2 ஸ்பூன் பேக்கிங் சோடாவை 8 அவுன்ஸ் தண்ணீரில் கலந்து குடித்து வாருங்கள். இது உங்களுக்கு நன்மை அளிக்கும். ஒரு நாளைக்கு 3 லிட்டர் தண்ணீர் வரையாவது எடுத்து வாருங்கள். நன்மை கிடைக்கும்.