27.3 C
Chennai
Wednesday, Jan 28, 2026
3 gingerlemont
ஆரோக்கிய உணவு

வெறும் வயிற்றில் இஞ்சி ஜூஸை குடிப்பதனால் இத்தனை நன்மைகள்

இன்றைய காலத்தில் பலர் இஞ்சியைக் கொண்டு ஜூஸ் தயாரித்துக் குடிக்கிறார்கள்.

அதுவும் உடல் ஆரோக்கியத்திற்காக பலரும் காலையில் எழுந்ததும் சில பானங்களைக் குடிக்கிறார்கள். இஞ்சி துண்டுகளை போட்டு அரைத்து, அதை வடிகட்டி சாறு எடுத்துக் கொள்ள வேண்டும்.

பின் அதில் எலுமிச்சை சாறு, சுவைக்கேற்ப தேன் மற்றும் மிளகுத் தூள் சேர்த்து கலந்தால், இஞ்சி ஜூஸ் தயார். ஒரு டம்ளர் இஞ்சி ஜூஸில் ஜிங்க், பாஸ்பரஸ், வைட்டமின் பி, பி3, பி6, புரோட்டீன்கள் மற்றும் டயட்டரி நார்ச்சத்துக்கள் போன்றவை நிறைந்துள்ளன.

இஞ்சி ஜூஸை காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் குடிப்பதால் பெறும் நன்மைகள் என்னவென்பதைப் பார்க்கலாம்.

கர்ப்பிணிப் பெண்கள் காலையில் குமட்டல் உணர்வை அதிகம் சந்திப்பவராயின், இந்த இஞ்சி ஜூஸைக் குடிக்கலாம். இது வயிற்றில் வளரும் குழந்தைக்கும் நல்லது மற்றும் பாதுகாப்பானது.

உங்களுக்கு மாதவிடாய் காலத்தில் அதிக வயிற்று வலி ஏற்படுமானால், இந்த இஞ்சி ஜூஸை தினமும் குடியுங்கள்.

இஞ்சி ஜூஸ் ஆர்த்ரிடிஸ் நோயாளிகள் சந்திக்கும் கடுமையான மூட்டு வலியில் இருந்து நிவாரணம் அளிக்கும்.

அடிக்கடி தலைவலியை சந்திப்பவர்களுக்கும் இந்த இஞ்சி ஜூஸ் நல்லது.

தினமும் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் குடியுங்கள். இது உடலுக்கு ஆற்றலை வழங்குவதோடு, உடலில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தும் மற்றும் உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றும்.

தினமும் காலையில் வெறும் வயிற்றில் இஞ்சி ஜூஸை குடித்து வந்தால், செரிமான மண்டலத்தின் ஆரோக்கியம் மேம்படுவதோடு, உடலின் மெட்டபாலிசமும் மேம்படும்.

சர்க்கரை நோயாளிகள் தினமும் காலையில் வெறும் வயிற்றில் இஞ்சி ஜூஸை குடிப்பது மிகவும் நல்லது. ஏனெனில் இது இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தும்.

Related posts

ருசியான சிக்கன் போண்டா செய்ய…!!

nathan

பூசணிக்காயை விரும்பி சாப்பிட வேண்டும் என்பதற்கான காரணங்கள்

nathan

சளி, இருமலை விரட்டியடிக்கும் மிட்டாய்!

nathan

இந்த நேவி பீன்ஸ் சாப்பிட்டிருக்கீங்களா? வாரத்துல ரெண்டுநாள் கைப்பிடி அளவு சாப்பிட்டா புற்றுநோய் வராமல் தடுக்கிறது.

nathan

எப்போதும் இளமை வேண்டுமா?

nathan

உடல் சூட்டை தணிக்கும் தாமரைப்பூ

nathan

உணவை ஆரோக்கியமாக எப்படி சாப்பிடலாம்?

nathan

கர்ப்பிணிகளுக்கு உகந்த, கால்சியம் நிறைந்த தேங்காய் – பீட்ரூட் ஜூஸ்

nathan

ஆண் அல்லது பெண் குழந்தையை விரும்பும் பெண்களுக்கான உணவுகள்

nathan