23.2 C
Chennai
Wednesday, Jan 22, 2025
R 6
அழகு குறிப்புகள்

கும்ப ராசிக்கு இடம்மாறும் சனி!தலையெழுத்தே மாறப்போகும் ராசிக்காரர்கள்

சனிபகவான் மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு ஜனவரி மாதம் 17ஆம் திகதி தை மாதம் 3ஆம் திகதியன்று இடப்பெயர்ச்சி அடைகிறார். இந்த சனிப்பெயர்ச்சியால் சில ராசிக்காரர்களுக்கு ஏழரை சனி ஆரம்பிக்கிறது. சில ராசிக்காரர்கள் ஏழரை சனியின் பிடியில் இருந்து விடுபடுகிறார்கள். நிகழ இருக்கும் சனிப்பெயர்ச்சியால் ஏழரைச்சனி, கண்டச்சனி, அர்த்தாஷ்டம சனி, அஷ்டம சனியால் அவதிப்படபோகும் ராசிகள் யார் யார் என்று பார்க்கலாம்.

சனி பகவான் ஒருவரின் ராசிக்கு 3,5,6,9,10,11 ஆகிய இடங்களில் சஞ்சரிக்கும் கால கட்டத்தில் சங்கடங்கள் இல்லாத சந்தோஷங்களைத் தருவார். ஏழரை சனி காலத்தில் சனிபகவான் விரையசனி, ஜென்மசனி, பாதசனி என படிப்பினைகள் கொடுப்பார். அர்தாஷ்டம சனி, கண்டச்சனி, அஷ்டம சனி, என கஷ்டப்பட்டாலும் கடைசியில் நல்ல விஷயங்களை கற்றுக்கொடுப்பார்.

சனி பகவான் மந்தன். மெதுவாக நகரும் கிரகம் ஒரு ராசியில் இரண்டரை ஆண்டுகாலம் தங்கும் சனிபகவான் 12 ராசிகளையும் சுற்றி வர 30 ஆண்டுகாலம் எடுத்துக்கொள்கிறார் எனவேதான் 30 ஆண்டுகள் வாழ்ந்தாரும் இல்லை தாழ்ந்தாரும் இல்லை என்கின்றனர். சனி பகவான் தற்போது வக்ர கதியில் மகர ராசியில் பயணம் செய்கிறார். பின்னர் மீண்டும் நேர்கதியில் பயணம் செய்யும் சனிபகவான் மகரத்தில் இருந்து கும்ப ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைகிறார்.

சனிபகவானின் பார்வை 3,7,10ஆம் இடங்களின் மீது விழுகிறது. கும்ப ராசியில் இருந்து சனி பகவான் மூன்றாம் பார்வையாக மேஷம் ராசியையும், ஏழாம் பார்வையாக சிம்ம ராசியையும், 10ஆம் பார்வையாக விருச்சிக ராசியையும் பார்வையிடுகிறார். நிகழ இருக்கும் சனிப்பெயர்ச்சியால் ஏழரைச்சனி, கண்டச்சனி, அர்த்தாஷ்டம சனி, அஷ்டம சனியால் அவதிப்படபோகும் ராசிகள் யார் யார் என்று பார்க்கலாம். அதே நேரத்தில் கோடீஸ்வர யோகம், விபரீத ராஜயோகம் பெறும் ராசிக்காரர்கள் யார் யார் என்றும் பார்க்கலாம்.

மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு லாப சனி காலமாகும். செய்யும் தொழிலில் லாபமும், அபரிமிதமான வருமானமும் கிடைக்கும். திருமணமான தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். சனிபகவான் பார்வை உங்க ராசியின் மீது விழுவதும் கூடுதல் பலம். உங்களின் செல்வாக்கும் சொல்வாக்கும் உயரும். வெளிநாடு செல்வதற்கான யோகமும் கைகூடி வரப்போகிறது.

ரிஷபம்

சனி பகவான் ரிஷப ராசிக்கு பத்தாம் வீடான தொழில் ஸ்தானத்தில் அமரப்போவதால் செய்யும் தொழில் வளர்ச்சியடையும். ஆட்சி பெற்ற சனியால் சச யோகம் கிடைக்கப் போகிறது. சனியால் கொடுக்கும் பதவி, சொத்துக்களை யாராலும் அசைக்க முடியாது. திருமணம் நடக்கும், குழந்தை பாக்கியம் கிடைக்கும். கவுரவம் அந்தஸ்து அதிகரிக்கும். புது வேலை கிடைக்கும். பதவியில் புது உற்சாகம் கிடைக்கும்.

மிதுனம்

சனியால் கடந்த இரண்டரை ஆண்டுகாலமாக மிதுன ராசிக்காரர்கள் படாத பாடு பட்டிருப்பீர்கள். அஷ்டம சனி முடிந்து பாக்கிய சனி தொடங்குகிறது. சனியால் யோகங்கள் அதிகம் கிடைக்கும். பணவரவு அதிகரிக்கும். அசையும் அசையா சொத்துக்களை வாங்குவீர்கள். நிறைய தான தர்மங்களை செய்யுங்கள். ஏனெனில் இது தர்ம சனி காலம். வேலையில் சம்பள உயர்வு புரமோஷன் கிடைக்கும். தொழிலில் லாபம் அதிகரிக்கும். நகை, பொன் பொருள் சேர்க்கை அதிகரிக்கும்.

கடகம்

கடக ராசிக்காரர்களே..சனிபகவான் இதுநாள் வரை கண்டச்சனியாக இருந்து கஷ்டங்களைக் கொடுத்தார் இனி எட்டாம் வீட்டில் அஷ்டம சனியாக அமரப்போகிறார். இந்த கால கட்டத்தில் சில பிரச்சினைகளை எதிர்கொண்டாலும் அவை உங்களுக்கு சாதகமாகவே முடியும். எட்டாம் வீட்டு அதிபதி சனி எட்டில் ஆட்சி பெற்று அமர்வது விபரீத ராஜயோக காலமாகும். திடீர் பணவரவு வந்து திக்குமுக்காட வைக்கும்.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களே சனிபகவான் உங்கள் ராசிக்கு ஏழாம் வீட்டில் கண்டச்சனியாக அமரப்போகிறார். சனிபகவான் உங்க ராசியை பார்ப்பதால் கண்டச்சனியையும் கஷ்டமில்லாமல் கடந்துவிடுவீர்கள். வேலை மாற்றம் இடமாற்றத்திற்கு காத்திருப்பவர்களுக்கு வேலை கிடைக்கும். சனி பகவான் பார்வை உங்கள் ராசியின் மீது விழுகிறது. வெளிநாடு செல்ல விசா கிடைக்கும். சனியால் மிகப்பெரிய யோகம் தேடி வரப்போகிறது. வேலையில் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். தடைகளை தாண்டி திருமணம் நடைபெறும்.

கன்னி

சனி பகவான் ஆறாம் வீட்டில் அமர்ந்து முழு ராஜயோகத்தையும் தரப்போகிறார். சனி பகவான் தனது சொந்த வீட்டுக்கு வருவதால் நோய்கள் தீரும். கடன்கள் கட்டுப்படும். அசையா சொத்துக்களை வாங்குவீர்கள். திடீர் அதிர்ஷ்டங்கள் அமையும். புதிய தொழில்களை ஆரம்பிக்க லாபங்கள் கொட்டும். சனி ஆறாம் வீட்டு அதிபதி ஆறில் ஆட்சி பெற்று அமர்ந்து விபரீத ராஜயோகத்தை தரப்போகிறார். இனி இரண்டரை ஆண்டு காலம் உங்களுக்கு ராஜயோக காலம். செல்வமும் செல்வாக்கும் அதிகரிக்கும்.

துலாம்

கஷ்டங்களையும் நோய்களையும் அனுபவித்த உங்களுக்கு இனி நல்லது அதிகம் நடக்கும். சனி உங்களுடைய ராசிக்கு பூர்வ புண்ணிய ஸ்தானஅதிபதி என்பதால் நிறைய புண்ணியங்கள் கிடைக்கப்போகிறது. வேலையில் இல்லாதவர்களுக்கு புதிய வேலை கிடைக்கும். திருமண தடைகள் நீங்கும். வீடு, வாகனம் வாங்குவீர்கள். சிலருக்கு நன்மை தரும் இடமாற்றம் நடைபெறும். இந்த சனி பெயர்ச்சி பல நன்மைகளையும் யோகங்களையும் தரப்போகிறது. பணவரவு அதிகமாகவே இருக்கும். தொழில் வளர்ச்சி பெறும்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களே.. சனிபகவான் நான்காம் வீட்டு அதிபதி நான்கில் ஆட்சி பெற்று அமர்வதால் பாதிப்புகள் இருக்காது. சனி பகவானின் பத்தாவது பார்வை உங்கள் ராசியின் மீது விழுவதால் பிரச்சினைகள் முடிவுக்கு வரும். ஆசைகளை குறிக்கோள்களை சனி நிறைவேற்றுவார். வேலையில் இருப்பவர்களுக்கு புரமோஷன் கிடைக்கும். வீடு, கார் என வாங்குவீர்கள். பணவரவும் தனவரவும் அதிகரிக்கும். அர்த்தாஷ்டம சனி காலம் என்பதால் சற்றே கவனமாக இருப்பது அவசியம்.

தனுசு

ஏழரை ஆண்டுகாலமாக சனி பகவான் தனுசு ராசியை ஆட்டி படைத்தார். ஏழரை ஆண்டுகாலமாக துன்பப்பட்டு சாவின் கடைசி நுனிவரை பார்த்து விட்டு வந்திருப்பீர்கள். சனி விலகப்போவதால் இனி நன்மைகள் தேடி வரும் காலம். வராத பணம் தேடி வரும் முன்னேற்றத்திற்கு வழி கிடைக்கும். உங்களின் துன்பங்கள், துயரங்கள் நீங்கும் காலம் வந்து விட்டது. கொடுத்த கடன்கள் வசூலாகும். பயணங்கள் வெற்றியை கொடுக்கும். மன நிம்மதி கொடுக்கும். உடல் நலத்தினால் கஷ்டப்பட்டவர்களுக்கு பாதிப்புகள் குறையும்.

மகரம்

சனிப்பெயர்ச்சியால் அதிகம் கஷ்டப்பட்டுக்கொண்டிருக்கும் மகர ராசிக்காரர்களுக்கு ஏழரை சனியின் கடைசி இரண்டரை ஆண்டு காலம் பாத சனியாக தொடர்வதால் கொஞ்சம் கவனம் தேவை. தன வருமானமும் லாபமும் கிடைக்கும். சனியின் பார்வை உங்கள் ராசிக்கு நான்காம் வீடு, எட்டாம் வீடு,பதினொன்றாம் வீடுகளின் மீது விழுவதால் கஷ்டங்களை எளிதாக கடந்து விடலாம். கால்களில் அடிபடும் என்பதால் கூடுதல் கவனம் தேவைப்படும். விநாயகர் வழிபாடு, அனுமன் வழிபாடு சனியால் ஏற்படும் சங்கடத்தை போக்கும்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களே.. இரண்டரை ஆண்டு காலம் ஜென்மசனி நடைபெறுகிறது. சனி பகவான் தன்னுடைய ராசியில் ஆட்சி பெற்று அமரப்போகிறார். வேலை செய்யும் இடத்தில் நிம்மதியை தருவார். அனுபவங்களினால் பக்குவப்படுத்துவார். முதல் சுற்றில் உள்ளவர்களுக்கு ஜென்ம சனி மன அழுத்தம், தடுமாற்றங்களை தருவார். உங்கள் ராசிநாதன் என்பதால் அதிக சிரமங்கள் இருக்காது. இந்த சனிப்பெயர்ச்சியை எளிதாக கடந்து விடுவீர்கள். மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி செய்யுங்கள். முதியோர்களுக்கு தானம் கொடுப்பது பாதிப்பை குறைக்கும். சங்கடங்கள் நீங்கி சந்தோஷம் அதிகரிக்கும்.

மீனம்

2023 ஆம் ஆண்டு ஜனவரி முதல் மீன ராசிக்கு விரைய சனியாக ஏழரை சனி தொடங்குகிறது. விபரீத ராஜயோகத்தையும் தருகிறார் சனி. காரணம் சனி பகவான் உங்க ஆட்சிநாதன். சம்பாதித்த பணத்தை செலவு பண்ணும் காலம். சுப விரையத்திற்கு செலவு செய்வது நல்லது. இந்த கால கட்டத்தில் பணத்தை பணமாக வைத்திருக்காமல் சொத்துக்களில் முதலீடு செய்யலாம். ஏழரை சனி தொடங்குவதால் ஏழைகளுக்கும் முதியோர்களுக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கும் உதவி செய்வதன் மூலம் பாதிப்பை குறைக்கலாம்.

Related posts

சரணடையும் இராணுவ வீரர்கள்… பலர் தப்பி ஓட்டம்: திகைக்க வைக்கும் உக்ரைன்

nathan

மகனுடன் தற்கொலைக்கு முயன்ற தாய்-திக் நிமிடத்தின் திடீர் திருப்பம்

nathan

கால்களில் உள்ள கருமையைப் போக்க வீட்டிலேயே பெடிக்யூர் செய்யலாம்.

nathan

நடைபெற்ற கண்ணன் திருமணம்! பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் அதிர்ச்சி!

nathan

நகங்களின் பளபளப்பிற்கும் வளர்ச்சிக்கும்

nathan

முகத்தில் உள்ள ரோமங்கள் நீங்க

nathan

தனுஷ் தொடர்பான சில வீடியோ ஆதாரங்கள் சுசித்ராவிடம் -சைலன்ட் மோடில் இருக்கும் தனுஷ்..

nathan

என்ன ​கொடுமை இது? இப்படியா பண்ணும் இந்த பொண்ணு..??

nathan

விளக்கெண்ணெய் சருமத்தை ஈரப்பதமாக்கும், முகப்பருவை உண்டாக்கும் பாக்டீரியாக்களின் வளர்ச்சியை தடுக்கின்றன…

nathan