30.8 C
Chennai
Tuesday, Jun 2, 2026
மருத்துவ குறிப்பு

சர்க்கரை நோய் இருக்கா? அப்ப மறந்தும் இந்த உணவுகளை சாப்பிடாதீங்க..

 

நீரிழிவு என்பது ஒரு நாள்பட்ட நோயாகும், இது இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாக இருக்கும்போது ஏற்படும். கார்போஹைட்ரேட்டுகள், கொழுப்புகள், பதப்படுத்தப்பட்ட உணவுகள் மற்றும் இயற்கை சர்க்கரைகள் கூட இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கலாம். ஆனால் சர்க்கரை நோய் இருப்பதால் உணவுகளைத் தவிர்க்க வேண்டும் என்று அர்த்தமில்லை.

 

ஆரோக்கியமான, சரிவிகித உணவை உட்கொள்வதன் மூலம் நீரிழிவு நோயை நிர்வகிக்க முடியும், இது இதய நோய், சிறுநீரக நோய் மற்றும் பிற உடல்நலப் பிரச்சனைகளின் அபாயத்தைக் குறைக்க உதவுகிறது.

மேலும், இரத்தத்தில் சர்க்கரையின் அளவை உயர்த்தும் மற்றும் இன்சுலின் எதிர்ப்பை அதிகரிக்கும் உணவுகளைத் தவிர்ப்பது, நீரிழிவு நோயாளிகள் ஆரோக்கியமாக இருக்கவும், எதிர்காலத்தில் நீரிழிவு நோயை உருவாக்கும் அபாயத்தைக் குறைக்கவும் உதவும்.

பழச்சாறுகள்
பழங்கள் எந்த அளவிற்கு சர்க்கரை நோயாளிகளுக்கு நல்லதோ, அதே அளவில் பழச்சாறுகள் மோசமான விளைவை ஏற்படுத்தும். பழச்சாறுகளில் நார்ச்சத்துக்கள் நீக்கப்பட்டு, இரத்த சர்க்கரை அளவை உயர்த்தும் ஃபுருக்டோஸ் அதிகமாக நிறைந்திருக்கும். எனவே சர்க்கரை நோயாளிகள் பழச்சாறுகளைக் குடிப்பதை அறவே தவிர்க்க வேண்டும்.

சுத்திகரிக்கப்பட்ட மாவு உணவுகள்

வெள்ளை பிரட், வெள்ளை அரிசி, பாஸ்தா, பேக்கரி உணவுகள் மற்றும் ஸ்நாக்ஸ்கள் போன்ற உணவுகள் சுத்திகரிக்கப்பட்ட மாவில் இருந்து தயாரிக்கப்படுகின்றன. இம்மாதிரியான உணவுகளை சர்க்கரை நோயாளிகள் அறவே தொடக்கூடாது. இவற்றில் உயர் கிளைசீமிக் இன்டெக்ஸ் இருப்பதால், அவை இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கும் மற்றும் மூளை செயல்பாட்டைக் குறைத்து சர்க்கரை நோயாளிகளுக்கு மனநல பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். மிகச்சரியாக கூற வேண்டுமானால், நார்ச்சத்து தான் இரத்த ஓட்டத்தில் சர்க்கரை உறிஞ்சுவதைக் குறைக்க தேவைப்படும். சுத்திகரிக்கப்பட்ட மாவில் மிகக்குறைவான அளவிலேயே நார்ச்சத்து உள்ளது.

சுவையான யோகர்ட்

சுவைமிக்க யோகர்ட்டுகள் புரோபயோடிக்குகளின் சிறந்த ஆதாரமாக இருக்கும் என்று நாம் நினைக்கலாம். ஆனால் நாம் நினைக்கும் அளவில் அவை ஆரோக்கியமானவை அல்ல. தற்போது கடைகளில் விற்கப்படும் பெரும்பாலான யோகர்ட்டுகள் செயற்கை சுவையூட்டிகள் சேர்க்கப்பட்டுள்ளதுடன், அதிக சர்க்கரையையும் கொண்டுள்ளன. எனவே சர்க்கரை நிறைந்த இம்மாதிரியான யோகர்ட்டுகளை சர்க்கரை நோயாளிகள் சுவைத்துப் பார்க்கக்கூட ஆசைப்படக்கூடாது.

வறுத்த உணவுகள்

நன்கு எண்ணெயில் பொரிக்கப்பட்ட ஃபிரெஞ்சு பிரைஸ் போன்ற உணவுகளில் கார்போஹைட்ரேட்டுகள் அதிகம் இருக்கும். இந்த உணவுகள் இரத்த சர்க்கரை அளவை தூண்டிவிட்டு, உடல் ஆரோக்கியத்தை பல்வேறு வழிகளில் பாதிக்கும். எனவே எக்காரணம் கொண்டும் எண்ணெயில் பொரித்தெரிக்கும் உணவுகளை நீரிழிவு நோயாளிகள் சாப்பிடக்கூடாது.

முழு கொழுப்பு நிறைந்த பால்

பால் ஒரு முழுமையான உணவாகும். ஏனெனில் இதில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இருப்பினும், சர்க்கரை நோயாளிகள் கொழுப்பு நிறைந்த பால் குடிப்பதில் சிறிது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். முழு கொழுப்பு நிறைந்த பாலில் நிறைவுற்ற கொழுப்பு அதிகமாக இருப்பதால், அவை சர்க்கரை நோயாளிகளுக்கு நல்லதல்ல. ஏனெனில் நிறைவுற்ற கொழுப்புக்கள் இன்சுலின் எதிர்ப்பை மோசமாக்கும். அதற்கு பதிலாக, கொழுப்பு குறைவான பால் அல்லது கொழுப்பு நீக்கப்பட்ட பாலைக் குடிக்கலாம்.

குறிப்பு

சர்க்கரை நோய் இருக்கும் போது, உணவுகளை முற்றிலும் தவிர்ப்பது என்பது சில சமயங்களில் மிகவும் கடினமாக இருக்கும். இருப்பினும், அதற்கான உண்மையான காரணத்தைப் புரிந்து கொண்டால், எளிதில் தவிர்க்கலாம். ஆரோக்கியமற்ற கொழுப்புகள், சர்க்கரைகள், பதப்படுத்தப்பட்ட தானியங்கள் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட்டுகளைக் கொண்டுள்ள பிற உணவுகள் போன்றவற்றை சர்க்கரை நோயாளிகள் தவிர்த்தால், நீண்ட நாள் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழலாம்.

Related posts

மத்த குழந்தைகளை விட உங்க குழந்தை உயரமா இருக்காங்களா? உஷாரா இருங்க…

nathan

மரண வலையில் சுலபமாக விழும் மனிதர்கள்

nathan

பெண்களின் மாதவிடாய் கோளாறுகளை போக்கும் கருஞ்சீரகம்

nathan

நம்ம ஊரு வைத்தியம்.. கொத்தமல்லி.!

nathan

ஆண்கள் விந்தணு பரிசோதனை செய்வது எவ்வாறு?

nathan

பெண்களுக்கு செல்போன் தொந்தரவா?

nathan

உடலில் ஏற்படும் சூட்டை வெறும் 2 நிமிடத்தில் போக்கும் ரகசிய மற்றும் சக்தி வாய்ந்த எளிய வழி !

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…தொங்கும் மார்பகங்கள்: சரி செய்ய எளிய வழி

nathan

உங்களுக்கு அல்சர் இருக்க? அது விரைவில் குணமாக வேண்டுமா?இதோ அற்புதமான எளிய தீர்வு

nathan