25.6 C
Chennai
Wednesday, Jan 22, 2025
papaya
ஆரோக்கிய உணவு

பப்பாளி பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது!

நாம் சாப்பிடக்கூடிய பல வகையான பழங்கள் மற்றும் காய்கறிகள் உள்ளன. ஆனால் சில சமயங்களில் எதைச் சாப்பிடலாம், எதைச் சாப்பிடக்கூடாது என்பதில் குழப்பம் ஏற்படும். பல பழங்கள் பல பக்கவிளைவுகளைக் கொண்டிருக்கின்றன, எனவே ஏற்கனவே உடல்நலப் பிரச்சினைகள் உள்ளவர்கள் பழங்களை சாப்பிட பயப்படுகிறார்கள்.

இது போன்ற பல கட்டுக்கதைகளைக் கொண்ட பழங்களில் ஒன்று பப்பாளி. வருடம் முழுவதும் சாப்பிடக்கூடிய சுவையான பழம். இருப்பினும், சில கட்டுக்கதைகளால், பப்பாளி பழம் சிலருக்கு ஆரோக்கியமற்ற உணவாக கூறப்படுகிறது.சத்துக்கள் மற்றும் மருத்துவ குணங்கள் நிறைந்த பப்பாளி பற்றிய சில கட்டுக்கதைகள் மற்றும் உண்மைகளைப் பார்ப்போம்.

பப்பாளியின் விதைகளை சாப்பிடக்கூடாது
உண்மை: அனைவராலும் விரும்பி சாப்பிடப்படும் பழம் தான் பப்பாளி. இந்த பப்பாளியின் விதைகள் ஆரோக்கியமற்றவை என்று கூறப்படுவதால், அவை தூக்கி எறியப்படுகின்றன. இருப்பினும், இது ஒரு தவறான கருத்து. ஏனெனில் பப்பாளியின் விதைகளில் பல முக்கியமான நுண்ணூட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. ஆய்வுகளில் கூட, இது புற்றுநோயைத் தடுக்கவும், சிறுநீரகத்தின் ஆரோக்கியத்திற்கும் நன்மை அளிப்பதாக தெரிய வந்துள்ளது. இருந்தாலும், இவற்றை அளவாக மட்டுமே உட்கொள்ள வேண்டும் என்பதை மட்டும் நினைவில் கொள்ளுங்கள்.

கட்டுக்கதை: குறைவான ஊட்டச்சத்துக்களைக் கொண்டது

உண்மை: பப்பாளியில் நார்ச்சத்து, வைட்டமின் சி, ஃபோலேட் மற்றும் ஆன்டி-ஆக்சிடன்ட்டுகள் போன்ற முக்கியமான சத்துக்கள் உள்ளதால், இது ஏராளமான ஆரோக்கிய நன்மைகளை அளிக்கும். தொற்றுநோய் காலத்தில் உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வைட்டமின் சி உதவும். மேலும் இதில் உள்ள லைகோபைன் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும்.

கட்டுக்கதை: கர்ப்பிணிகள் பப்பாளியைத் தவிர்க்க வேண்டும்

உண்மை: இது பப்பாளி குறித்த பொதுவான கட்டுக்கதைகளில் ஒன்றாகும். உண்மை என்னவென்றால், கனிந்த அல்லது பழுத்த பப்பாளி கர்ப்பிணிப் பெண்களுக்கு ஆரோக்கியமானதாகும். இருப்பினும் பப்பாளியானது நன்கு கனிந்து இருக்க வேண்டும். பழுக்காத பப்பாளியில் லேடெக்ஸ் உள்ளது. இது கர்ப்பிணி பெண்களுக்கு ஆபத்தானது. ஏனெனில் இது கருப்பையில் சுருக்கங்களைத் தூண்டிவிட்டு, கருக்கலைப்பை ஏற்படுத்தும். இருப்பினும், கர்ப்பிணிகள் பப்பாளி சாப்பிடுவது குறித்து மருத்துவரிடம் கேட்டுக் கொள்வதே நல்லது.

கட்டுக்கதை: பப்பாளி அழற்சியை ஏற்படுத்தும்
கட்டுக்கதை: பப்பாளி அழற்சியை ஏற்படுத்தும்
உண்மை: லேடெக்ஸ் அழற்சி ஒரு பொதுவான நிகழ்வாகும். பழுக்காத பப்பாளியில் லேடெக்ஸ் உள்ளது. இது லேடெக்ஸ் அழற்சி உள்ளவர்களுக்கு அழற்சியை ஏற்படுத்தும். இருப்பினும், இத்தகையவர்கள் கனிந்த பப்பாளி சாப்பிடுவது பாதுகாப்பானது மற்றும் இது ஆரோக்கியமான உணவும் கூட.

கட்டுக்கதை: பப்பாளியை வெறும் வயிற்றில் சாப்பிடக்கூடாது
கட்டுக்கதை: பப்பாளியை வெறும் வயிற்றில் சாப்பிடக்கூடாது
உண்மை: பப்பாளி செரிமான ஆரோக்கியத்திற்கு மிகவும் சிறந்தது. ஏனெனில் இதில் பாப்பைன் எனப்படும் நொதி உள்ளது. வயிற்று உப்புசம், மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளைக் கொண்டவர்கள் பப்பாளியை சாப்பிட்டால், இதில் இருந்து விடுபடலாம். அதுவும் பப்பாளியை காலையில் வெறும் வயிற்றில் உண்பது செரிமான பிரச்சனைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து, உடல் செயல்பாட்டை சிறப்பாகவும், ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்ள உதவும்.

Related posts

உடல் எடையை குறைக்கும் கொள்ளு – கம்பு புட்டு

nathan

கார்ப்போஹைட்ரேட் நிறைந்த உணவுகள் இரவில் சாப்பிட்டால் உடல் எடை அதிகரிக்கும் என பலரும் கருதுகிறார்கள். நமது உடலின் செயல்முறைகள் மற்றும் வளர்சிதை மாற்றங்கள் இவற்றை தடுப்பதாக ஊட்டச்சத்து நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

nathan

சுவர் டிப்ஸ் !மூட்டு வலியை போக்கும் முடவாட்டுக்கால் கிழங்கு சூப்!

nathan

அதிர்ச்சியூட்டும் உண்மை தகவல்கள் – by ,தினேஷ் (பாஸ்ட் புட் கடை வைத்து இருந்தவர்)

nathan

அதிக நட்ஸ் சாப்பிட்டால் ஆபத்தா?

nathan

தெரிஞ்சிக்கங்க…30 வயதிற்கு மேல் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ சாப்பிட வேண்டிய உணவுகள்!

nathan

செரிமான மண்டலத்தை சுத்தம் செய்ய உதவும் பழங்கள்!!!

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…கருவளத்தை மேம்படுத்தும் அற்புத ஜூஸ்!

nathan

புதினா அனைத்து நோய்க்கும் தீர்வு தரும் காயகல்பம் என்பது தெரியுமா ?அற்புதமான எளிய தீர்வு

nathan