25.6 C
Chennai
Wednesday, Jan 22, 2025
1 bp 16
மருத்துவ குறிப்பு

உயர் இரத்த அழுத்தம் இருந்தா இந்த உணவுகளை சாப்பிடாதீங்க..

சர்க்கரை நோய் போன்ற ரத்த அழுத்தப் பிரச்னைகளால் பாதிக்கப்பட்டவர்கள் உலகில் ஏராளம். இரத்த அழுத்தத்தில் இரண்டு வகைகள் உள்ளன. அவை உயர் இரத்த அழுத்தம் மற்றும் குறைந்த இரத்த அழுத்தம். உயர் இரத்த அழுத்தம் என்பது தமனி சுவரில் இரத்த அழுத்தம் அதிகமாக இருக்கும் ஒரு நிலை. 140/90 க்கு மேல் பொதுவாக உயர் இரத்த அழுத்தம் என வரையறுக்கப்படுகிறது. அழுத்தம் 180/120 ஆக இருந்தால், அது கடுமையானதாகக் கருதப்படுகிறது.

உயர் இரத்த அழுத்தத்திற்கு குறிப்பிட்ட அறிகுறிகள் எதுவும் இல்லை. மேலும், உயர் ரத்த அழுத்தத்திற்கு சிகிச்சை அளிக்காமல் இருந்தால், இதய நோய், பக்கவாதம் போன்ற பிரச்னைகள் ஏற்படும்.எனவே, உயர் ரத்த அழுத்த பிரச்னைகளை கண்டறிய, குறிப்பிட்ட வயதிற்கு மேல், ரத்த அழுத்தத்தை தொடர்ந்து பரிசோதிக்க வேண்டும். ஆரோக்கியமான உணவு முறை, தினசரி உடற்பயிற்சி மூலம் உயர் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தலாம்.

உணவில் முழு கவனம் செலுத்தவும்
இரத்த அழுத்த நோயாளிகள், தங்கள் உணவில் முழு கவனத்தை செலுத்த வேண்டும். நாம் என்ன சாப்பிடுகிறோமோ, அது அப்படியே இரத்த அழுத்தத்தை பாதிக்கும். உண்மையில், உயர் இரத்த அழுத்தம் உள்ள நோயாளிகள் தங்கள் இரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். இல்லாவிட்டால், அது மாரடைப்பு, பக்கவாதம் போன்றவற்றின் அபாயத்தை அதிகரித்து, உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தக்கூடும். இப்போது உயர் இரத்த அழுத்த நோயாளிகள் எந்த உணவுகளை சாப்பிடக்கூடாது என்பதைக் காண்போம்.

சர்க்கரை

சர்க்கரை என்ன தான் சுவையூட்டியாக இருந்தாலும், இது ஆரோக்கியமற்ற உணவுப் பொருள். சர்க்கரையால் தயாரிக்கப்பட்ட உணவுப் பொருட்கள் உண்பது இரத்த சர்க்கரை அளவை அதிகரிப்பதோடு மட்டுமின்றி, இரத்த அழுத்தத்தையும் அதிகரிக்கும். சர்க்கரையானது உடல் எடையை அதிகரிப்பதோடு, பிற நோய்களின் அபாயத்தையும் அதிகரிக்கிறது. ஆகவே உயர் இரத்த அழுத்த பிரச்சனை உள்ளவர்கள், சர்க்கரை அல்லது சர்க்கரை நிறைந்த உணவுகளை குறைவான அளவில் உட்கொள்ளுங்கள்.

உப்பு

உணவின் சுவையைக் கூட்ட சேர்க்கும் உப்பு உயர் இரத்த அழுத்தம் மற்றும் இதய நோய்களுக்கு ஒரு முக்கிய காரணியாகும். எனவே தான் இரத்த அழுத்தம் உள்ளவர்களை உணவில் குறைவான அளவு உப்பை சேர்க்க மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். அதுமட்டுமின்றி உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள் அதிகளவு உப்பை எடுக்கும் போது, அது உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தலாம்.

பிட்சா

இன்று பெரும்பாலானோரின் விருப்பமான உணவாக பிட்சா உள்ளது. உண்மையில் பிட்சாவில் சர்க்கரை, நிறைவுற்ற கொழுப்பு மற்றும் உப்பு அதிகளவில் உள்ளது. ஆகவே ஏற்கனவே பிபி பிரச்சனை உள்ளவர்கள் பிட்சாவை சாப்பிடும் போது, அது இரத்த அழுத்தத்தை அதிகரிக்கும்.

இறைச்சிகள்

பதப்படுத்தப்பட்ட இறைச்சிகளில் உப்பு அதிகம் இருக்கும். எனவே இந்த மாதிரியான இறைச்சிகளை சாப்பிட்டால், அது இரத்த அழுத்தத்தை சட்டென்று அதிகரிக்கும். ஆகவே உங்களுக்கு உயர் இரத்த அழுத்தம் இருந்தால், இந்த இறைச்சிகளில் இருந்து முற்றிலும் விலகி இருங்கள்.

ஊறுகாய்

இந்தியர்களின் உணவுகளில் ஊறுகாய் ஒரு முக்கியமான சைடு டிஷ்ஷாகும். சொல்லப்போனால் பல இந்தியர்களுக்கு ஊறுகாய் இல்லாமல் சாப்பிட பிடிக்காது. உப்பில் ஊறும் காய் தான் ஊறுகாய். மற்ற உணவுப் பொருட்களை விட ஊறுகாயில் ஏராளமான அளவில் உப்பு இருக்கும். எனவே தான் உயர் இரத்த அழுத்த பிரச்சனை உள்ளவர்கள் ஊறுகாய் சாப்பிடக்கூடாது.

ஆல்கஹால்

இன்று ஆல்கஹால் குடிப்பது ஒரு ஃபேஷனாகிவிட்டது. அதிகப்படியான ஆல்கஹால் உட்கொள்வது இரத்த அழுத்தத்தை வேகமாக அதிகரிக்கும். எனவே உங்களுக்கு ஏற்கனவே பிபி பிரச்சனை இருந்தால், ஆல்கஹாலை அருந்தாதீர்கள். இல்லாவிட்டால், பெரிய பிரச்சனையை சந்திக்க வேண்டியிருக்கும்.

Related posts

காது குடையும் பழக்கம் நல்லதா?

nathan

வாரம் மூன்று முறை உடலுறவில் ஈடுபடுவதால் சிறுநீரக கற்களை கரைக்க முடியும்!!

nathan

உங்களுக்கு தெரியுமா உடலுக்கு தீங்கை விளைவிக்கும் வைட்டமின்கள்!!!

nathan

குழந்தைகளுக்கு தேங்காய் எண்ணெய் எவ்வாறு உதவியாக இருக்கிறது

nathan

இதயத்தை இதமாக்கும் 10 வழிகள்!

nathan

ஆரோக்கியமா இருக்க உங்க மூளைய இளமையா வெச்சுக்கோங்க….

nathan

கருவுறுதல் சிகிச்சைக்கு செல்வதற்கு முன் தம்பதிகள் இருவரும் என்ன செய்யணும் தெரியுமா?தெரிந்துகொள்ளுங்கள் !

nathan

நாப்கினால் ஏற்படும் பேராபத்துகள் !பெண்களே தெரிஞ்சிக்கங்க…

nathan

பெண்களின் உடல் பற்றிய சில ரகசியங்கள்

nathan