27 C
Chennai
Thursday, Nov 14, 2024
pottu kadalai chutney 1
ஆரோக்கிய உணவு

பொட்டுக்கடலை சட்னி எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா?

உங்களுக்கு பொட்டுக்கடலை சட்னி எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பொட்டுக்கடலை சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* துருவிய தேங்காய் – 1 கப்

* பொட்டுக்கடலை – 1/2 கப்

* பச்சை மிளகாய் – 2

* உப்பு – சுவைக்கேற்ப

* தண்ணீர் – தேவையான அளவு

தாளிப்பதற்கு…

* தேங்காய் எண்ணெய் – 1 டீஸ்பூன்

* கடுகு – 1/2 டீஸ்பூன்

* உளுத்தம் பருப்பு – 1/2 டீஸ்பூன்

* பெருங்காயத் தூள் – ஒரு சிட்டிகை

* கறிவேப்பிலை – சிறிது

செய்முறை:

* முதலில் மிக்சர் ஜாரில் தேங்காய், பொட்டுக்கடலை, பச்சை மிளகாய், உப்பு ஆகியவற்றை எடுத்துக் கொள்ள வேண்டும்.

* பின் அதில் சிறிது நீர் ஊற்றி நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

* பின்பு அதை ஒரு பௌலில் எடுத்துக் கொண்டு, தேவையான அளவு நீரை ஊற்றிக் கொள்ள வேண்டும்.

* பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, பெருங்காயத் தூள் சேர்த்து தாளித்து, சட்னியுடன் சேர்த்து கிளறினால், சுவையான பொட்டுக்கடலை சட்னி தயார்.

Related posts

பழச்சாறுகளை விட பழங்கள் ஏன் சிறந்தது தெரியுமா? தெரிஞ்சிக்கங்க…

nathan

கம்மங்கூழ் குடிங்க… தொப்பையும் குறையும், சூடும் தணியும்

nathan

ஹெல்த் ஸ்பெஷல்! சளியைப் போக்கும் மிளகு ரசம்

nathan

சிறுநீரகப் பிரச்சனையை தீர்க்கும் வாழைத்தண்டு பச்சடி

nathan

நெய்மீன் கருவாடு தொக்கு

nathan

சூப்பரான பச்சை பப்பாளி சாலட்! உடல் எடையை குறைக்கும்

nathan

வயிற்றுப் புண்ணுக்கு சிறந்தது தேங்காய் பால்

nathan

தூதுவளைப் பூ பாயசம்

nathan

உடலுக்குத் தேவை பொஸிட்டிவ் உணவுகளே!

nathan