9 cow milk 1
ஆரோக்கிய உணவு

பால் பருகும் முன் இந்த உணவுகளை சாப்பிடாதீங்க! ஆபத்தாம்

பாலில் ஏராளமான சத்துக்கள் இருப்பதால் உடல் வளர்ச்சிக்கும், ஆரோக்கியத்திற்கும் அவசியமானதாக இருக்கிறது. ஆனால் பால் பருகுவதற்கு முன்னதாக சில உணவுகளை தவிர்ப்பது உடலுக்கு நன்மையளிக்கும்.

பால் பருகுவதற்கு முன்னதாக தவிர்க்க வேண்டிய உணவுகள் குறித்து இந்த பதவில் நாம் பார்க்கலாம்.

உளுத்தம் பருப்பு

பால் பருகும் முன்பு உளுத்தம் பருப்பு கலந்த உணவு வகைகளை சாப்பிடக்கூடாது. அது செரிமானத்தை பாதிக்கும். மேலும், உளுத்தம் பருப்பு உணவுகளையும், பாலையும் ஒன்றாக உட்கொள்வது உடலுக்கு ஏற்றதாக இருக்காது. இதனால் வயிறு வலி மற்றும் வாந்தி ஆகியவை ஏற்படக்கூடும். உடல் பருமனும் ஏற்படும். மோர், முளைத்த தானியங்கள், தேன் மற்றும் மீன் ஆகியவற்றையும் உளுந்தம்பருப்பில் தயாரித்த உணவுகளுடன் சேர்த்து உண்ணக்கூடாது.

முள்ளங்கி – பெர்ரி

பால் உட்கொள்வதற்கு முன்னதாக முள்ளங்கி, பெர்ரி இவைகளை சாப்பிடக்கூடாது. அவ்வாறு சாப்பிடுவதால் சரும பாதிப்புகள் உருவாக வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது.

வெண்டைக்காய் – பாகற்காய்

வெண்டைக்காய் மற்றும் பாகற்காய் போன்றவைகளை சாப்பிட்டவுடன் பால் பருகுவதால் முகத்தில் அதிகளவு கரும்புள்ளிகள் தோன்றக்கூடும். எனவே அதை தவிர்ப்பது மிகவும் நல்லது.

மீன்

மீன் உடலுக்கு மட்டுமின்றி கண்ணிற்கும் நன்மை பயக்கும் என்றாலும், அதனை சாப்பிட்டதும் பால் பருகினால் செரிமான பாதிப்பை உண்டாக்கும். இதனால் உணவு விஷமாக மாறுவதற்கும் வாய்ப்புள்ளது. மேலும் சருமத்தில் வெண்புள்ளிகள், வயிற்று வலி போன்றவைகளும் ஏற்படும். மீன் வெப்பத்தன்மை கொண்டது மற்றும் பால் குளிர்ச்சியானது என்பதால், இரண்டும் உடலில் சேரும்போது தேவையற்ற இரசாயன மாற்றங்களை ஏற்படுத்தி உடல் ஆரோக்கியத்திற்கு பிரச்சினைகளை உண்டாக்கும்.

சிட்ரஸ் பழங்கள்

பால் பருகுவதற்கு முன்னதாக புளிப்பு தன்மை கொண்ட எவ்வித பழங்களையும் உண்ணக்கூடாது. எடுத்துக்காட்டாக எலுமிச்சை, அன்னாச்சி, ஒரஞ்சு, சாத்துக்குடி போன்ற சிட்ரஸ் பழங்களை சாப்பிடுவதன் மூலம் வாந்தி, குமட்டல் போன்ற பிரச்சனைகள் ஏற்படும். பால் பருகும் முன்பு ஒருவேளை சிட்ரஸ் படங்களை சாப்பிட்டால், குறைந்தது 2 மணி நேரம் கழித்துதான் பால் பருக வேண்டும். மேலும் சிட்ரஸ் பழங்களை சாப்பிட்டவுடன் பால் பருகினால் செரிமான பாதிப்பு மற்றும் ஜீரண பிரச்சினைகள் தோன்றும்.

Related posts

1 பழம்… 14 பலன்கள்… பிரமிக்கவைக்கும் மாதுளை!

nathan

ஆப் பாயில் முட்டை விரும்பியா நீங்கள்? இதை படியுங்கள்

nathan

பலமுறை சூடேற்றி சாப்பிடக்கூடாத உணவுப் பொருட்கள்!

nathan

சுவையான பச்சை பட்டாணி சட்னி

nathan

அழகான சமையலறைக்கு….

nathan

உடல் சூட்டை குறைக்கும் கற்றாழை லஸ்ஸி

nathan

மருத்துவ குறிப்புகள்

nathan

இந்த உணவுகள் பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் வலியை எளிதில் குறைக்கும் என்பது உங்களுக்கு தெரியுமா?

nathan

உளுந்தங்களி பெண்களுக்கு கர்பப்பை மிகவும் வலுப்பெறும்.

nathan