கல்லீரல் உடலின் மிக முக்கியமான உறுப்புகளில் ஒன்றாகும். அத்தகைய ஆரோக்கியமான கல்லீரலை பராமரிக்க ஆரோக்கியமான உணவு மற்றும் வாழ்க்கை முறை அவசியம். உடலின் பல முக்கிய செயல்பாடுகளுக்கு கல்லீரல் பொறுப்பு. இது செரிமானத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது மற்றும் உடலின் ஆரோக்கியத்தையும் நல்வாழ்வையும் பராமரிக்க உதவுகிறது. ஆனால், தற்போது நம்மிடம் உள்ள ஆரோக்கியமற்ற பழக்கவழக்கங்களால் கொழுப்பு கல்லீரல் நோய், மஞ்சள் காமாலை, ஹெபடைடிஸ் போன்ற பிரச்சனைகளை சந்தித்து வருகிறோம்.
ஆரோக்கியமற்ற நொறுக்குத் தீனிகளை அதிகமாக உண்பது, பொரித்த உணவுகளை உண்பது, அதிக மது அருந்துவது போன்றவை உங்கள் கல்லீரலை அடிக்கடி பயன்படுத்துகிறது. இதனால் கல்லீரலில் அதிக அழுக்கு படிந்து கல்லீரல் செயல்பாட்டை பாதிக்கிறது. எனவே, கல்லீரல் சுத்திகரிப்பு மிகவும் முக்கியமானது.
கல்லீரல் சுத்திகரிப்பு சில உணவுகள் மற்றும் பானங்கள் மூலம் மட்டுமே செய்ய முடியும். இப்போது கல்லீரலில் உள்ள அசுத்தங்களை வெளியேற்றி கல்லீரலை சுத்தப்படுத்த உதவும் பானத்தைப் பற்றி பார்க்கலாம். இந்த பானங்களை தொடர்ந்து குடித்து வந்தால், கல்லீரலில் படிந்திருக்கும் அழுக்குகளை அவ்வப்போது கழுவி விடலாம்.
புதினா டீ
புதினா இலைகளில் மெந்தால் மற்றும் மெந்தோபைன் பண்புகள் அதிகமாக உள்ளன. இவை தான் சுத்தம் செய்ய உதவுகின்றன. அதோடு இது செரிமான மண்டலத்தை ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்கிறது. எனவே கொதிக்கும் நீரில் சிறிது புதினா இலைகளைப் போட்டு கொதிக்க வைத்து இறக்கி, இரவு தூங்குவதற்கு அரை மணிநேரத்திற்கு முன் குடியுங்கள். இதனால் கல்லீரலில் உள்ள அழுக்குகளை அன்றாடம் நீக்கிவிடலாம்.
ட்ரெச்சர் கோலின்ஸ் அரிய நோயால் பாதிப்பு – 6 மாத குழந்தை உயிர்பிழைக்க உதவுங்கள்
மஞ்சள் டீ
பல நூற்றாண்டுகளாக ஆயுர்வேதத்தில் மஞ்சள் சக்தி வாய்ந்த பொருளாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இது உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றும் சிறந்த வழிகளுள் ஒன்று. ஆகவே தினமும் மஞ்சள் டீயைக் குடியுங்கள். இந்த டீ தயாரிப்பதற்கு ஒரு டம்ளர் சூடான நீரில் ஒரு சிட்டிகை மஞ்சள் தூள் சேர்த்து, சுவைக்கேற்ப தேன் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
இஞ்சி மற்றும் எலுமிச்சை டீ
இஞ்சி மற்றும் எலுமிச்சையால் ஆன இந்த டீயில் சக்தி வாய்ந்த அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன. இது உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றுவதோடு, உடல் எடையைக் குறைக்கும் செயல்முறையைத் தூடும். மேலும் இந்த டீ உடல் வீக்கத்தை நீக்க உதவுகிறது, வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்துகிறது மற்றும் நோயைத் தடுக்கிறது. அதற்கு ஒரு துண்டு இஞ்சியை ஒரு டம்ளர் நீரில் போட்டு கொதிக்க வைத்து இறக்கி, அத்துடன் பாதி எலுமிச்சையின் சாற்றினைப் பிழிந்து, சுவைக்கு தேன் சேர்த்து கலந்து குடிக்க வேண்டும்.
வெந்தய நீர்
வெந்தய நீரை அடிக்கடி குடித்து வந்தால், அது எடை இழப்பிற்கு உதவுவதோடு, செரிமான மண்டலத்தை வலிமையாக்க உதவுகிறது. இதில் நார்ச்சத்து மற்றும் ஆன்டி-ஆக்சிடன்ட்டுகள் அதிகமாக உள்ளன. இந்த நீரை இரவு தூங்குவதற்கு ஒரு மணிநேரத்திற்கு முன் குடித்து வர, அது கல்லீரலில் மட்டுமின்றி உடலில் உள்ள நச்சுக்களையும் வெளியேற்றும். அதற்கு ஒரு டம்ளர் சூடான நீரில் ஒரு டீஸ்பூன் வெந்தய பொடியை போட்டு, பதினைந்து நிமிடம் ஊற வைத்து வடிகட்டி குடிக்க வேண்டும். இந்த நீரை ஒரு நாளைக்கு மூன்று வேளை குடித்து வர நல்ல பலன் கிடைக்கும்.
சீமைச்சாமந்தி டீ
சீமைச்சாமந்தி டீயில் சக்தி வாய்ந்த ஆன்டிஆக்சிடன்ட்டுகள் உள்ளன. இவை மன அழுத்தத்தைப் போக்கவும், தூக்கத்தை மேம்படுத்தவும் உதவுகின்றன. அதற்கு ஒரு டேபிள் ஸ்பூன் சீமைச்சாமந்தியை ஒரு டம்ளர் கொதிக்கும் சூடான நீரில் போட்டு மூடி வைத்து பத்து நிமிடம் ஊற வைத்து, பின் வடிகட்டிக் குடிக்க வேண்டும்.
ஓட்ஸ் மற்றும் பட்டை டீ
ஓட்ஸில் நார்ச்சத்து, கனிமச்சத்துக்கள் மற்றும் வைட்டமின்கள் நிறைந்துள்ளது, இது குடல் மற்றும் கல்லீரலை சுத்தப்படுத்தி செரிமானத்திற்கு உதவுகிறது. ஓட்ஸில் பல சத்துக்கள் உள்ளன. எனவே இது உடலில் இருந்து நச்சுகளை வெளியேற்ற உதவும் ஒரு சிறந்த நச்சுநீக்கும் பானமாகும்.அதற்கு ஒரு பௌல் கொதிக்கும் நீரில் ஒரு டீஸ்பூன் ஆர்கானிக் ஓட்ஸ் சேர்த்து 2-3 மணிநேரம் ஊற வைத்து, பின் அதை வடிகட்டி, அத்துடன் ஒரு ஸ்பூன் பட்டைத் தூள் மற்றும் சிறிது நீர் சேர்த்து கலந்து குடிக்க வேண்டும்.