22.8 C
Chennai
Sunday, Dec 14, 2025
one 1538
ஆரோக்கிய உணவு

ஆண்கள் அப்பாவாக உண்ண வேண்டிய உணவுகள் என்னென்ன?தெரிந்துகொள்ளுங்கள் !

உடலுக்கு ஆற்றலை தருவது உணவுகள் தான்; அப்படிப்பட்ட உணவுகள் உடலிக்கு சக்தி தருவது என்ற விஷயத்தை தாண்டி. உடலின் பல விதமான செயல்பாடுகளுக்கு அதிகம் உணவுகின்றன. உணவுகள் மூலம் உடலுக்கு கிடைக்க பெறும் சத்துக்களால் தான் உடல் சீராக இயங்குகிறது. உணவுகள் எப்படி நம் உடலை சீராக இயங்க உதவுகின்றனவோ, அதே போல் வாழ்க்கையில் புது உறவுகளை உண்டாக்கி தரவும் உணவுகள் உறுதுணை செய்கின்றன.

மாதுளம் பழம்.!

ஆண்கள் மாதுளம் பழம் அதிகமாக உண்ணுதல் அவசியம்; ஏனெனில் மாதுளையில் அதிக ஆன்டி ஆக்சிடென்டுகள் இருப்பதால், அதை ஆண்கள் தினசரியாக அல்லது அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்; உணவாக எடுத்துக் கொள்ள வேண்டும். மாதுளையை பழமாக, பழச்சாறாக என்று எந்த வடிவில் வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம்.

மாதுளையில் இருக்கும் இந்த ஆன்டி ஆக்சிடென்டுகள் ஆண்களின் உடலில் சீரான விந்து அணு உற்பத்தி மற்றும் விந்து அணு ஆரோக்கியம் போன்றவற்றை மேம்படுத்த உதவுகின்றன.

லென்டில்ஸ்

லென்டில்ஸ் என்று சொல்லக்கூடிய பருப்பு வகைகளை ஆண்கள் தங்கள் உணவில் சேர்த்து, எடுத்துக் கொள்வது மிகவும் அவசியம். ஆண்கள் அதிகம் இந்த பருப்பு வகைகளை உண்ணுவதால், அவர்களின் உடலுக்கு அதிக போலிக் அமில சத்துக்கள் கிடைக்கும். இந்த சத்துக்கள் ஆண்களின் விந்து அணு ஆரோக்கியம் மற்றும் அவற்றின் நீந்து சக்தியை அதிகரித்து, ஆண்மையை அதிகரிக்க பெரிதும் உதவுகின்றன.

புளுபெர்ரி பழங்கள்!

இந்த புளுபெர்ரி பழ வகைகளை அதிகம் உண்பதால், ஆண்களின் உடலில் காணப்படும் விந்து அணுக்களின் வடிவம், அளவு, ஆரோக்கியம் மற்றும் எண்ணிக்கை போன்றவை மேம்படுத்த படுகின்றன. இந்த பழ வகைகள் உண்ண பிடிக்காத ஆண்களும், தங்கள் உடலின் வலுவை கூட்ட, ஆண்மையை அதிகமாக்க இந்த பழங்களை உட்கொள்ள முயல்வது நல்லது.

தக்காளி பழம்!

தக்காளி பழம் உடலுக்கு பற்பல நன்மைகளை வழங்குவதை அறிந்து தான் நம் முன்னோர்கள் எல்லா வித உணவுகளை சமைக்கும் பொழுதும் அதில் தக்காளி சேர்த்து சமைத்து வழங்கி உள்ளனர் போலும். ஆம் நண்பர்களே! தக்காளியை உணவில் அதிகமாக சேர்த்து கொள்வது, ஆண்களின் விந்து அணுக்களின் நீந்த சக்தியை அதிகரித்து, அந்த அணுக்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்த பெரிதும் உதவும். எனவே இன்றே தக்காளி பழங்களை நன்கு உட்கொள்ள தொடங்குங்கள் ஆண்களே!

 

வால்நட் பருப்புகள்!

வால்நட் பருப்புகளை நன்கு உண்டு வருதல் உடலின் ஆரோக்கியத்திற்கு நல்லது; உடலின் பல பிரச்சனைகளையும் தீர்த்து வைக்க இந்த பருப்புகள் பெரிதும் உதவுகின்றன. இந்த பருப்புகளை ஆண்கள் ஒரு நாளைக்கு 75 கிராம்கள் என்ற அளவில் எடுத்துக் கொண்டால், அவர்களின் உடலில் உற்பத்தி ஆகும் விந்து அணுக்களின் எண்ணிக்கையையும் ஆரோக்கியமும் மேம்படுத்தப்படும்.

மேலும் இந்த பருப்புகள் உடல் எடை குறைத்தல், உடலின் செயல்பாடுகளை சீரமைத்தல் போன்ற பல விஷயங்களுக்கு உதவுகின்றன.

பூசணிக்காய் விதைகள்!

பூசணிக்காய் விதைகள் ஆண்களின் ஆண்மையை அதிகரிப்பதில் முக்கிய பங்கு ஆற்றுகின்றன. இந்த பூசணி விதைகளை ஆண்கள் தங்கள் தினசரி உணவில் சாலட், பொடி, ஜூஸ் என ஏதோ வடிவில் சேர்த்து வந்தால், மிகவும் நல்லது.

இந்த பூசணி விதைகளில் அதிகம் ஆன்டி ஆக்சிடென்டுகள் இருப்பதால், இவை ஆண்களின் உடலில் இருக்கும் விந்து அணுக்களின் நீந்து சக்தி, வடிவம் மற்றும் விந் அணுக்களின் அளவை சீராக மற்றும் சரியாக வைக்க உதவுகிறது.

டார்க் சாக்லேட்டுகள்!

இந்த சாக்லேட்டுகளில் காணப்படும் சில சத்துக்கள் ஆண்களின் உடலில் உற்பத்தியாகும் விந்து அணுக்களின் ஆரோக்கியம் மற்றும் விந்து அணுக்களின் நீந்து சக்தி போன்றவற்றை அதிகரிக்க அதிகம் உதவுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆகையால், ஆண்களே அதிகம் டார்க் சாக்லேட்டுகளை உண்டு, உங்களின் ஆண்மை தன்மையை அதிகரித்து வாருங்கள்!

தண்ணீர் தண்ணீர்!

உடலின் ஒட்டு மொத்த பாகத்தில் முக்கால் வாசி நிரம்பி இருப்பது தண்ணீரால் ஆன இரத்தம் போன்ற திரவங்கள் தான்! ஆண்கள் தினசரி மூன்று முதல் 4 லிட்டர் அளவு தண்ணீர் பருகி உடலில் நீர்ச்சத்து நிறைந்து இருக்கும் வண்ணம் பார்த்துக் கொள்ள வேண்டும்.

ஆண்களின் உடலில் நீர்ச்சத்து சரியான அளவில் இருந்தால், ஆண்களின் உடலில் உற்பத்தி ஆகும் விந்து அணுக்களின் ஆரோக்கியம் மற்றும் அவற்றின் நீந்து சக்தி மேம்படுத்தப்படும். மேலும் ஆண்களின் உடலில் வெப்பம் அதிகரித்தால், அதனால் விந்து அணுக்கள் பாதிக்கப்படாமல் இருக்கவும் நீர்ச்சத்து உதவும்.!

 

அப்பாவாக உதவும்..!

ஆண்கள் தங்களது தினசரி உணவினில், மேற்கூறிய இந்த உணவுகளை எடுத்துக் கொண்டு வந்தால், அது அவர்கள் விரைவில் அப்பாவாக உதவும். ஒரு குழந்தையை பெற்று எடுக்க, பெண்ணுடன் உறவு கொள்வது மட்டும் போதாது; ஆண்கள் சரியான உடல் ஆரோக்கியம் மற்றும் விந்து அணு காரோக்கியத்துடன் இருக்க வேண்டியது மிகவும் முக்கியம்!

Related posts

அலட்ச்சியம் வேண்டாம்… கர்ப்பிணி நூடுல்ஸ் சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா?

nathan

உங்க இதயத்திற்கு ஆரோக்கியம் தரும் சிவப்பு நிற பழங்கள்..இவ்வளவு நன்மைகளா?

nathan

சருமத்தைப் புத்துணர்ச்சியுடனும், அழகாகவும் வைத்துக் கொள்ள உதவும் உணவுகள்..

nathan

ர்க்கரை வள்ளிக்கிழங்கில் மனிதர்களின் ஆரோக்கியத்திற்கு தேவையான அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் ஏராளம்…

nathan

அடிக்கடி பப்பாளி பழத்தினை உண்டு வருபவர்கள் எவ்வகை நோய்க்கும் ஆளாக நேரிடாது.

nathan

ஏலக்காய் – தேங்காய்ப் பால்

nathan

ஜாக்கிரதை! எடை குறைக்க ஓட்ஸ் சாப்பிடுறீங்களா? அப்ப கண்டிப்பா இத கவனத்துல வச்சிக்குங்க…

nathan

கீரை…. சாப்பிடப்போறீங்களா?

nathan

வல்லாரையில் உள்ள நன்மைகள் என்னவென்று தெரியுமா?

nathan