கொத்தமல்லி இலைகள், தண்டுகள் மற்றும் வேர்கள் அனைத்தும் மருத்துவ குணம் கொண்டவை. சாம்பார், ரசம் போன்ற தமிழ் உணவுகளில் விதைகள் பயன்படுத்தப்படுகின்றன.
வைட்டமின் ஏ, சி மற்றும் பாஸ்பரஸ் உள்ளிட்ட தாதுக்கள் மற்றும் அவற்றில் உள்ள அத்தியாவசிய கொழுப்பு அமிலங்கள் பார்வை இழப்புக்கான வாய்ப்பைக் குறைக்கின்றன.
கொத்தமல்லி குளிர்ச்சியானது. தோல் நோய்களை குணப்படுத்தவல்லது. கொத்தமல்லி சாறு எடுத்துக் கொள்ளவும். இதனுடன் சிறிது சந்தன தூள், பனங்கற்கண்டு சேர்த்து பாகுப்பதத்தில் கொதிக்க வைக்கவும். இதில் சிறிதளவு எடுத்து தண்ணீரில் கலந்து குடித்து வர உடலில் ஏற்படும் எரிச்சல் நீங்கும்.
கொத்தமல்லி இலைகள் நரம்புகள், எலும்புகள் மற்றும் தசை மண்டலங்களில் ஏற்படும் பாதிப்பை குணப்படுத்தும், எனவே அவற்றை உங்கள் அன்றாட உணவில் சேர்த்துக் கொள்வது மிகவும் நல்லது. பசியை அடக்கும் மூலிகையாக சிறந்தது. வாயு பிரச்சனைகளை குணப்படுத்தும்.