செல்போன் ‘ஹேங்க்’ ஆவதை தடுக்க!
இந்த பிரச்சினை ஆண்டிராய்டு போன்களில் சகஜமான ஒன்றுதான். ஏன் கம்ப்யூட்டர்கள் கூட ஒருசில நேரங்களில் ஹேங் ஆவது உண்டு. இருந்த போதிலும், நாம் அனைவரும் பல நேரங்களில் அவசர நிலையில் தான் இருப்போம்.
ஆனால் மொபைல் போன் நாம் சொல்லும் பேச்சை அவசர காலத்தில் கேட்காமல், சரியான நேரம் பார்த்து திடீரென ஹேங் ஆகி விடும்.
Smartphone Hang ஆவதை தடுக்கனுமா? இப்படி செய்தால் போதும் | Smartphone Hang Tamil
இதனால் கோபத்துக்கு உள்ளாகும் நாம் செல்போனை திட்டியதும் உண்டு, இன்னும் ஒருசிலர் தூக்கி வீசியவர்களும் நம்மில் இருக்க தான் செய்கிறார்கள். இப்படி ‘ஹேங்’ ஆகும் மொபைல்களை எப்படி பழையபடி வேமாக செயல்பட வைப்பது என்பதை பற்றி பார்க்கலாம்.
செல்போனில் தேவையில்லாத ஆப்ஸ்கள் இருந்தால் அதை முதலில் அன் இன்ஸ்டால் செய்ய வேண்டும். அவ்வாறு எந்த ஆப்களை நாம் அன் இன்ஸ்டால் செய்ய போகிறோமோ அதில் செட்டிங்கில் டேட்டாவை க்ளியர் செய்துவிட்டு அன் இன்ஸ்டால் செய்திட வேண்டும். போன் செட்டிங்கில் சென்று ரன்னிங்கில் இருக்கும் அப்ளிகேஷன்களை போர்ஸ் ஸ்டாப் ( Force stop) கொடுக்க வேண்டும்.
2 மாதத்திற்கு ஒரு முறை மொபைலை பேட்டரி ரீசெட் செய்யுங்கள். அப்படி செய்வதற்கு முன்பு அனைத்து தகவல்களையும் பேக் அப் எடுத்து வைத்து கொள்வது முக்கியம்.
ஒருமுறைக்கு 2 முறை பேக் அப் எடுக்கப்பட்டுள்ளதா என சோதித்து பார்த்து விட்டு ரீசெட் செய்திட வேண்டும்.