29.7 C
Chennai
Sunday, Dec 22, 2024
mother and baby
ஆரோக்கியம் குறிப்புகள்

கருவில் இருப்பது ஆணா, பெண்ணா? கண்டறிவது எப்படி? தெரிந்துகொள்ளுங்கள் !

கரு பிறந்தது முதல் பெண் தாயாகிறாள். அவளுக்குள் பல விசித்திரமான மாற்றங்கள் ஏற்படத் தொடங்குகின்றன. கருவில் இருக்கும் குழந்தை ஆணா பெண்ணா என்பதை தாய் தந்தையர் தெரிந்து கொள்ள வேண்டும். அந்த ஆர்வத்திற்கு சித்தர்கள் பதில். அருளியுள்ளார்.

கருவில் இருப்பது ஆண் குழந்தையா? அல்லது பெண் குழந்தையா? என்பதைகக் கண்டறிய சித்தர்கள் கூறிய சில அரிய செயல்களை இந்தப் பதிவில் காணலாம்.

அறிவியல் முன்னேற்றம் நிறைந்த இக்காலத்தில் ஸ்கான் மூலம் கருவின் பாலினத்தை கண்டறிய வாய்ப்புண்டு. இந்தியாவில் அது தடை செய்யப்பட்ட ஒன்று என்றாலும் வெளிநாட்டில் ஸ்கான் மூலம் கருவின் பாலினத்தை அறிவது வழக்கம். அப்படி கருவின் பாலினத்தை அறிவதற்கு பெற்றோர்கள் சில வாரங்கள் பொறுத்திருக்க வேண்டும். ஆனால் எந்த ஒரு அறிவியல் வளர்ச்சியும் இல்லாத காலகட்டத்திலேயே கருவின் பாலினத்தை கணிக்கும் முறையை அகத்தியர் அருளியுள்ளார்.

“கெற்பதானங்கள் பண்ணக் கிணர்தனிட் சரணங்கணாசி
வற்பணப் பிராணவாய்வு வலத்திலே யோடி லாணாஞ்
சிற்பன விடத்திலோடிற் சிறந்தது பெண்ணதாகும்
பிற்கர வுதயமாகிற் பிலமில்லாக் குருடு வூமை”
– அகத்தியர் –

கரு உண்டான காலத்தில் நாசியிலே ஓடுகின்ற சரம் அல்லது மூச்சுக் காற்றினை வைத்து கர்ப்பத்தில் உதித்தது ஆணா , பெண்ணா என்பதை அறிந்திடும் முறையினை அகத்தியர் பின் வருமாறு கூறுகிறார்.

பிராண வாயு என்னும் மூச்சுக்காற்று வலது நாசியில் ஓடினால் கர்ப்பத்திலிருப்பது பெண் குழந்தை எனவும், மூச்சுக் காற்றானது இடது நாசியில் ஓடினால் ஆண் குழந்தை பிறக்கும் என்றும், மூச்சு காற்றோட்டமானது சீராக முழுமையாக இல்லாதிருப்பின் பிறக்கும் குழந்தை குருடு, ஊமை போன்ற குறைபாட்டுடன் பிறக்கும் என்கிறார்.

புலிப்பாணி சித்தர் தன்னுடைய பாடல் ஒன்றில் குழந்தை பிறக்கும் நாளை கணிக்கும் முறையினை பின்வருமாறு விளக்குகிறார்.

“சித்திரை பத்தாந் திகதியில் தூரம்
சென்றிடிலது முதற்பத்து வரையில்
பத்தாகு மதிலேழு சேரில் பதினேழ் திகதியில்
பகர்தறி தைமாதம் பதினேழ் திகதியிலே
ஆமாப்பா போகருட கடாட்சத்தாலே
தெளிவாகப் புலிப்பாணி பாடினேனே”
– புலிப்பாணி –

சித்திரை மாதம் பத்தாம் திகதியில் வீட்டுவிலக்கு நின்று விட்டால் அது முதல் பத்து மாதங்களை கணக்கு வைத்தால் தை மாதம் பத்து மாதமாகும், அந்த மாதத்தில் எழு நாட்களை சேர்த்துக் கொண்டால் தைமாதம் பதினேழாம் திகதி பிரசவிப்பாள்.

சித்திரை மாதம் பதினைந்து திகதிக்கு முன்னதாக மாதவிலக்கு நிற்கிறவர்களுக்கு பத்து மாதக் கணக்காகும். சித்திரை பதினைந்தாம் திகதிக்கு மேல் மாத விலக்கு நிற்கிறவர்களுக்கு பதினோரு மாதம் என்கின்ற கணக்கில் பார்க்கவேண்டும் என்கிறார் புலிப்பாணி சித்தர்.

Related posts

மார்பகங்கள் எடுப்பாக இருக்க நீங்கள் செய்ய வேண்டியது இது மட்டும் தான்!

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க… கொழுப்பை விரைவில் குறைக்க உதவும் 10 நிமிட உடற்பயிற்சிகள்!!!

nathan

அவசர வாழ்க்கைக்கு நடுவில் சந்தோஷமாக இருக்க உதவும் 6 காலை நேர டிப்ஸ்…தெரிஞ்சிக்கங்க…

nathan

ஆரோக்கியத்தைப் பாதிக்கும் பெண்களின் ஹேண்ட் பேக்குகள்.!தெரிஞ்சிக்கங்க…

nathan

உங்களுக்கு தெரியுமா தினமும் ஒரு சாத்துக்குடி சாப்பிடுவதினால் கிடைக்கும் பலன்கள்!

nathan

கர்ப்ப காலத்தில் முகத்தில் உள்ள கரும்புள்ளிகளை சரி செய்வது எப்படி?

nathan

ஆண்களின் விந்தணு சக்தியை அதிகரிக்கும் உணவுகள்

nathan

சூப்பர் டிப்ஸ்! வீட்டிலேயே சோப்பு தயாரிப்பது எப்படி?

nathan

குழந்தைகளை மொபைலுக்கு அடிமை ஆக்காதீர்கள்.

nathan