29.7 C
Chennai
Sunday, Dec 22, 2024
b16f471e 945a 47af 9a30 4508f8944150 S secvpf
சரும பராமரிப்பு

சருமம், கூந்தலை பொலிவுறச் செய்யும் கொத்தமல்லி

மருத்துவ குணங்கள் கொண்ட கொத்தமல்லியைக் கொண்டு சருமத்தில், தலையில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு எப்படி தீர்வு காண்பது என்பதை பார்க்கலாம்.

• உங்களுக்கு மென்மையான பட்டுப் போன்ற சருமம் வேண்டுமெனில், 4 டீஸ்பூன் ஓட்ஸ், 2 டீஸ்பூன் பால், 2 டீஸ்பூன் வெள்ளரிக்காய் சாறு மற்றும் சிறிது கொத்தமல்லி சாற்றினை சேர்த்து நன்கு கலந்து, முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.

• உங்களுக்கு முகப்பரு தொல்லை இருந்தால், ஒரு கப் நீரில் கொத்தமல்லி, சிறிது சீமைச்சாமந்தி பூ அல்லது எண்ணெய் மற்றும் சிறிது லெமன்கிராஸ் சேர்த்து கொதிக்க வைத்து இறக்கி, பின் குளிர வைத்து, வடிகட்டி அந்த பொருட்களை அரைத்து முகத்தில் தடவி சிறிது நேரம் ஊற வைத்து குளிர்ந்த நீரில் கழுவ, முகப்பரு பிரச்சனையை விரைவில் போக்கலாம்.

• மூக்கைச் சுற்றி கரும்புள்ளிகள் இருந்தால், 1 டீஸ்பூன் கொத்தமல்லி சாறு மற்றம் 1 டீஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, பாதிக்கப்பட்ட பகுதியில் தடவி 1/2 மணிநேரம் ஊற வைத்து, குளிர்ந்த நீரில் கழுவ, கரும்புள்ளிகள் அகலும்.

• சிலருக்கு முகத்தில் சிவப்பு நிற தடிப்புக்கள் ஏற்படும். இந்த பிரச்சனையில் இருந்து விடுபட, 2 டீஸ்பூன் கொத்தமல்லி சாறு, 2 டீஸ்பூன் தக்காளி சாறு மற்றும் சிறிது ரோஸ்வாட்டர் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 20 நிமிடம் உற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவுங்கள். இதனால் நல்ல மாற்றத்தை நீங்களே காண்பீர்கள்.

• முடி உதிர்தலைக் கட்டுப்படுத்த கொத்தமல்லி பெரிதும் உதவியாக இருக்கும். மேலும் கொத்தமல்லியில் உள்ள வைட்டமின்கள் மற்றும் புரோட்டீன்கள், முடியின் வளர்ச்சியைத் தூண்டும். எனவே கொத்தமல்லி சாற்றினை எடுத்து, தலையில் ஸ்கால்ப்பில் நன்கு படும்படி தடவி 1 மணிநேரம் ஊற வைத்து, பின் தலையை வெதுவெதுப்பான நீரில் அலச வேண்டும். இப்படி வாரம் ஒருமுறை செய்து வந்தால், முடி உதிர்வது குறைந்து, முடியின் வளர்ச்சி தூண்டப்படும்.

• உங்கள் உதடு கருப்பாக, பொலிவிழந்து உள்ளதா? அப்படியென்றால், இந்த வழி உங்களுக்கு உதவியாக இருக்கும். தினமும் இரவில் படுக்கும் முன், கொத்தமல்லி இலை சாற்றினை உதட்டில் தடவிக் கொள்ளுங்கள். இன்னும் சிறப்பான பலனைக் காண அத்துடன் சிறிது எலுமிச்சை சாற்றினையும் கலந்து பயன்படுத்துங்கள்.

• சிறிது கொத்தமல்லி இலைகள், தயிர் மற்றும் கற்றாழை ஜெல்லை சரிசமமாக எடுத்துக் கொண்டு நன்கு அடித்து, பின் அதில் 1 டீஸ்பூன் அரிசி மாவு சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரில் கழுவ, சருமம் மென்மையாகவும், பொலிவுடனும் இருக்கும்.
b16f471e 945a 47af 9a30 4508f8944150 S secvpf

Related posts

பெண்களே தெருந்துகொள்ளுங்கள்! அழகைப் பராமரிக்கும் போது தேனை சேர்ப்பதற்கான 15 வழிகள்!!!

nathan

வேலைக்கு போகும் பெண்களுக்கான எளிமையான ஒப்பனை

nathan

ரெட் ஒயினின் அழகு நன்மைகள்!!

nathan

தேவையற்ற இடங்களில் முடி வளர்ச்சியா?

nathan

அழகுக்கு அழகு சேர்க்கும் தேங்காய்

nathan

வயசானாலும் இளமையா காட்சியளிக்கனுமா? இந்த மூலிகைகள் பயன்படுத்துங்க!!!

nathan

கழுத்தில் அசிங்கமாக இருக்கும் கருமையை போக்க இதை யூஸ் முயன்று பாருங்கள்!

nathan

சரும அரிப்பு நோயின் வெளிப்பாடு

nathan

உங்கள் காலிலோ கையிலோ அல்லது முகத்திலோ அடிப்பட்ட தழும்பு ஆழமாக வெள்ளையாக தடிமனாக இருக்கிறதா?

sangika