29.7 C
Chennai
Sunday, Dec 22, 2024
2pregnant 1
மருத்துவ குறிப்பு

குறைப்பிரசவம் நடக்கப்போகுது என்பதை எப்படி முன்கூட்டியே தெரிந்து கொள்ளலாம்?

ஒவ்வொரு கர்ப்பிணி பெண்ணுக்கும் பிரசவம் என்பது மறுஜென்மம் போன்றது. ஒரு புதிய உயிரை உலகிற்கு அறிமுகம் செய்யும் நாள் அது. இத்தகைய பிரசவத்தில் அவ்வப்போது சில சிக்கல்கள் எழுந்து கர்ப்பிணி பெண்ணையும் சுற்றியிருப்பவரையும் பயத்தில் ஆழ்த்தும்.

பிரசவத்தில் மிகவும் சிக்கலானது குறிப்பிட்ட தேதிக்கு முன்பாக நிகழும் பிரசவம். அதாவது 37 வாரங்களுக்கு முன்னதாக நடக்கும் இத்தகைய பிரசவம் குறைப்பிரசவம் என்று அழைக்கப்படுகிறது. இதனைக் குறை பிள்ளைப்பேறு என்றும், இப்படி குறைப் பிரசவத்தில் பிறக்கும் குழந்தைகளை குறைமாதக் குழந்தை என்றும் அழைப்பார்கள்.

ஆரோக்கிய குறைபாடு, சுவாசிப்பதில் சிரமம், போன்ற பாதிப்புகள், மஞ்சள் காமாலை, நிமோனியா போன்ற தொற்று பாதிப்புகள் போன்றவற்றை இந்த குறைபிரசவ குழந்தைகள் எதிர்கொள்ளும் வாய்ப்பு உண்டு.

குறை மாத பிரசவத்திற்கான அடையாளங்கள் மற்றும் அறிகுறிகள் ஆகியவற்றை புறக்கணிக்க வேண்டாம். கீழே கூறப்பட்டுள்ள அறிகுறிகள் கர்ப்பிணிகளுக்கு தென்பட்டால், உடனடியாக மகப்பேறு மருத்துவரைச் சந்திப்பது நல்லது.

கருப்பை சுருக்கம்

கர்ப்பகாலத்தின் கடைசி கட்டங்களில் இந்த கருப்பை சுருக்கம் உண்டாகும். இந்த சுருக்கம் மற்றும் அதனால் ஏற்படும் வலி அதிகரித்த அளவு இருந்தால் அது குறை மாத பிரசவ அறிகுறியாக இருக்கலாம். வயிற்றைச் சுற்றி இறுக்கமாக ஒரு கயிற்றால் கட்டுவது போன்ற வலி தோன்றும். இந்த வலி விட்டு விட்டு வரும். கீழே படுப்பதால் அல்லது உங்கள் அங்க நிலைகளை மாற்றுவதால் இந்த பிரசவ வலி குறையாது.

இடுப்பு அழுத்தம்

கர்ப்பகாலத்தின் கடைசி கட்டங்களில் இடுப்பில் ஒரு வித அழுத்த அவ்வப்போது உண்டாகும். ஆனால் இந்த அழுத்தம் மிக அதிகம் உணரப்படும்போது , அது குறை மாத பிரசவ வலியின் அறிகுறியாக இருக்கலாம். இடுப்பு வலி ஏற்படுவதன் காரணம், குழந்தை வெளியில் வர முயற்சிப்பது ஆகும். குழந்தை பிறக்கக் கூடிய நிலைக்கு வந்துவிட்டதை இந்த வலி உணர்த்தும்.

பனிக்குடம் உடைவது

பிறப்புறுப்பில் திடீரென்று அதிக நீர் வெளியேற்றம் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகுவது அவசியம். குறைமாத பிரசவத்தின் மற்றொரு அறிகுறி, சிவப்பு இரத்தம் வெளியேற்றம் அல்லது நீர் வெளியேற்றம். கர்ப்பப்பை வாய் அல்லது பிறப்புறுப்பு வாய் திறந்து கொள்வதால் இந்த நீர் வடிதல் ஏறபடலாம்

 

வலி

மாதவிடாய் வலியை ஒத்த வலி பிரசவத்தின் அறிகுறியாகும். மோசமான வயிற்று வலியைப் போல் தொடங்கும் இந்த வலி பிரசவ வலியின் ஆரம்ப அறிகுறியாகும். அடுத்த சில மணி நேரத்தில் இந்த வலி குறையாது.

கீழ் முதுகு வலி

முதுகுத் தண்டின் கீழ் பகுதியில் அதிக வலி, மற்றும் உங்களால் எங்கும் அசைய முடியாத வலி, உட்கார முடியாமல் நிற்க முடியாமல் வலி ஆகியவை இருந்தால் மருத்துவரிடம் செல்வது நல்லது. வலியுடன் கூட, கீழ் முதுகு பகுதியில் ஒரு வித அழுத்தத்தை நீங்கள் உணர முடியும். அதிக பாரத்தை சுமக்கும்போது உண்டாகும் உணர்வு போல் இந்த உணர்வு இருக்கும்.

 

குழந்தையின் அசைவு

குழந்தையின் அசைவில் ஒரு குறிப்பிடத்தகுந்த மாற்றம் ஏற்பட்டால், அது குறைமாத பிரசவத்திற்கான அறிகுறியாக இருக்கலாம். உங்கள் குழந்தை வயிற்றில் இருந்து கீழே தள்ள முயற்சிப்பதை உங்களால் உணர முடிந்தால் அதனைப் புறக்கணிக்க வேண்டாம்.

அடையாளம் மற்றும் அறிகுறிகள்

. மயக்கம் மற்றும் கண்கள் இருட்டிக் கொண்டு வருவது போல் உணர்வு

. திட்டுக்கள் தோன்றுவது, பார்வை மங்குவது

. தலைவலி, காய்ச்சல் மற்றும் உடல் சில்லிடுவது

. கைகள் மற்றும் பாதங்கள் திடீரென்று வீக்கம் அடைவது மற்றும் வலியுடன் கூடிய அசௌகரியம் உணரப்படுவது

 

இறுதி மூன்று மாதங்கள்

கர்ப்பகாலத்தின் இறுதி மூன்று மாதங்களில் இருக்கும்போது, எந்த ஒரு சிறிய மாற்றத்தையும் புறக்கணிக்கக் கூடாது. குறைப்பிரசவத்தை மிகவும் கவனத்துடன் கையாள வேண்டும். மருத்துவ சிகிச்சையில் கவனக் குறைபாடு நிகழ்ந்தால் தாய்க்கும் குழந்தைக்கும் சரி செய்யமுடியாத சேதம் உண்டாகும்.

Related posts

இந்த அறிகுறிகள் வந்த பின்தான் ஹார்ட் அட்டாக் வருமாம்… ஜாக்கிரதையா இருங்க…!

nathan

100 ஹெல்த்தி ஹேபிட்ஸ்! ‘நாம் நல்ல பழக்கங்களை உருவாக்குவோம்; நல்ல பழக்கங்கள் நம்மை உருவாக்கும்’ !! ஹெ…

nathan

உங்களுக்கு தெரியுமா இந்த காளான் சாப்பிட்டா பெண்களுக்கு குழந்தை சீக்கிரம் உண்டாகுமாம்…!

nathan

உங்க உடலில் வைட்டமின் சி குறைவதால் என்ன நேரும் தெரியுமா?

nathan

உங்களுக்கு அடிக்கடி ‘ஏவ்’ வருதா? இதோ அற்புதமான எளிய தீர்வு

nathan

இதோ எளிய நிவாரணம்! தாங்கமுடியாத தலைவலியை போக்க வேண்டுமா?

nathan

மனக்கவலையை போக்க நடப்பதெல்லாம் நன்மைக்கே என்று நினையுங்கள்

nathan

கண்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் சிறப்பான உணவுகள்!!! தெரிஞ்சிக்கங்க…

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…உடல் பருமனுடன் கருத்தரித்தால் சந்திக்கக்கூடிய பிரச்சனைகள்!!!

nathan