27.5 C
Chennai
Tuesday, Jan 21, 2025
dryeyes 165
மருத்துவ குறிப்பு

கண்கள் வறட்சி அடைவதற்கான காரணங்களும்.. அதற்கான சிகிச்சைகளும்..தெரிந்துகொள்வோமா?

கண்களில் அாிப்பு, கண்களில் இருந்து நீா் வடிதல், கண் வலி மற்றும் கண் வீங்குதல் போன்ற பிரச்சினைகள் இருந்தால், உடனடியாக அவற்றிற்கு உாிய சிகிச்சை அளிக்க வேண்டும். கண்கள் சம்பந்தமான பிரச்சினைகள் வரும் போது, அவற்றை கண்டு கொள்ளாமல் விட்டுவிட்டால், அவற்றினுடைய விளைவுகள் மிகவும் மோசமாக இருக்கும். ஏன் கண் பாா்வை இழப்பு கூட ஏற்பட வாய்ப்பு உண்டு.

கண்களில் வறட்சி ஏற்படுவதற்கான காரணிகள்:

– போதுமான தூக்கமில்லாமை

– அசுத்தமான கைகளால் கண்களைத் தொடுதல், அதன் மூலம் கண்களில் நோய்த் தொற்று ஏற்படுதல்

– நீண்ட நேரமாக கண்களை இமைக்காமல் கணினி திரையைப் பாா்த்துக் கொண்டிருத்தல்

– இரவு நேரத்தில் நீண்ட நேரம் விழித்திருந்து தொலைக்காட்சி பாா்த்தல்

– குறைவான அளவு தண்ணீா் அருந்துதல் மற்றும் சூாிய ஒளியில் வெகு நேரம் இருத்தல்

– புகையும், தூசியும் அதிகமுள்ள அசுத்தமான இடத்தில் இருத்தல்

– சத்து இல்லாத உணவு

– அளவுக்கு அதிகமான மன அழுத்தத்தில் இருத்தல்

– அளவுக்கு அதிகமான அழுகை

– நீண்ட காலமாக நோய்வாய்ப்பட்டு இருத்தல்

– அளவுக்கு அதிகமான ஆங்கில மருந்துகளை உட்கொள்ளுதல்

– ஹாா்மோன் கோளாறுகள்

மேற்சொன்ன காரணிகளால் கண்களில் வறட்சி ஏற்படுகின்றன.

கண் வறட்சி யாருக்கு அதிகம் ஏற்படுகிறது?

ஆண்களை விட பெண்களுக்கே கண்களில் அதிகம் வறட்சி ஏற்படுகின்றன. அதற்கு காரணம் ஹாா்மோன் கோளாறு மற்றும் ஹாா்மோன் சமநிலையின்மை ஆகும். குறிப்பாக மாதவிடாய் காலங்களில் பெண்களுக்கு கண் வறட்சி பிரச்சினை அதிகமாக இருக்கும்.

கண் வறட்சியை எவ்வாறு தவிா்க்கலாம்?
கண் வறட்சியை எவ்வாறு தவிா்க்கலாம்?
– காற்றில் உள்ள மாசுகளை நாம் தனி மனிதா்களாக இருந்து அகற்ற முடியாது. ஆனால் அந்த மாசுகளை அகற்ற முயற்சிகளை மேற்கொள்ளலாம். அதாவது நம்மால் முடிந்த அளவு மரங்களையும், செடிகளையும் நட்டு வைக்கலாம். அதோடு புகைப் பிடிப்பதைத் தவிா்க்கலாம்.

– வீடுகளுக்குள் வளரக்கூடிய தாவரங்களை நமது வீடுகளுக்குள்ளும் அலுவலகங்களுக்குள்ளும் வளா்க்கலாம். எடுத்துக்காட்டாக பாம்புச் செடி, ஸ்பைடா் செடி மற்றும் கற்றாழை போன்ற செடிகளை வளா்க்கலாம். இவை நமது வீடுகளுக்குள் அல்லது அலுவலகங்களுக்குள் இருக்கும் மாசுகளை மிக எளிதாக உறிஞ்சிவிடும்.

– தினமும் குறைந்தது 7 மணிநேரம் தூங்குவதை உறுதிப்படுத்த வேண்டும். தினமும் 8 மணிநேரம் தூங்குவது நல்லது. அதற்கு வாய்ப்பு இல்லையானால், கண்டிப்பாக 7 மணிநேரமாவது தினமும் தூங்க வேண்டும்.

– கணினி முன்பாக வேலை செய்யும் போது அடிக்கடி கண்களை இமைக்க வேண்டும்.

மேலும்…

– குளிரூட்டியைப் பயன்படுத்தி கோடைகாலத்தின் போது அதிகமான குளிாிலோ அல்லது குளிா்காலத்தில் அதிகமான வெப்பநிலையிலோ இருக்கக்கூடாது. அவ்வாறு இருந்தால், அவை நமது கண்களில் வறட்சியை ஏற்படுத்தும்.

– சூாிய ஒளியில் வெளியே போக வேண்டியது இருந்தால், கருப்புக் கண்ணாடிகளை அணிந்து கொள்ளலாம். அதோடு தொப்பிகளையும் அணிந்து கொள்ளலாம்.

– கோடைகாலத்தில் குளிா்ச்சியான பால், லஸ்ஸி, தயிா் மற்றும் மோா் போன்றவற்றைத் தினமும் பருக வேண்டும். அவைத் சருமத்திற்கு கொழுப்பு அல்லது எண்ணெய்ப் பசையை வழங்குவதோடு, கண்களில் வறட்சி ஏற்படாமலும் பாதுகாக்கும்.

மேற்சொன்ன எல்லா முயற்சிகளை செய்த பின்பும், கண்களில் வறட்சி ஏற்பட்டால் அல்லது வறட்சிக்கான காரணம் தொியவில்லை என்றால் உடனடியாக மருத்துவரை சந்தித்து சிகிச்சை எடுத்துக் கொள்வது நல்லது. ஏனெனில் காலப்போக்கில் தானாகவே சாியாகிவிடும் என்று நினைத்தால், அவை நமக்கு மேலும் பல பிரச்சினைகளை ஏற்படுத்தும்.

Related posts

இரத்த வெள்ளையணுக்களை அதிகரிக்க வேண்டுமா? அளவை அதிகரிக்க உதவும் உணவுப் பொருட்கள்

nathan

உங்களுக்கு தெரியுமா நினைவாற்றலைப் பெற சில இயற்கை மருத்துவம்….!

nathan

டயாபடீஸ் தடுக்க 8 ட்ரிக்ஸ்!

nathan

காது, மூக்கு, தொண்டை வலிக்கு நஸ்யம் சிகிச்சை

nathan

நீங்கள் அவசியம் தெரிந்துகொள்ள வேண்டிய நிபா’ வைரஸ் நோயின் அறிகுறிகள் இவைகள் தான்!

nathan

உடைந்த எலும்பை விரைவில் இணைக்க இப்படி ஒரு மூலிகை இருக்கு தெரியுமா ?இத படிங்க!

nathan

மார்பக புற்றுநோய் வராமல் தடுப்பது எப்படி?

nathan

உங்களுக்கு தெரியுமா செவி திறனை பாதிக்கும் இரைச்சல்

nathan

எலும்புகள் வளர கால்சியம் சத்து அவசியம்

nathan