24.6 C
Chennai
Tuesday, Dec 24, 2024
potato kurma 1634130422
சமையல் குறிப்புகள்

உருளைக்கிழங்கு குருமா

இப்போது உருளைக்கிழங்கு குருமாவின் செய்முறையைக் காண்போம். அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* உருளைக்கிழங்கு – 2

* பெரிய வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)

* தக்காளி – 1 (பொடியாக நறுக்கியது)

* மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்

* மல்லித் தூள் – 1 1/2 டீஸ்பூன்

* கரம் மசாலா – 1 டீஸ்பூன்

* கொத்தமல்லி – சிறிது

* உப்பு – சுவைக்கேற்ப

தாளிப்பதற்கு…

* எண்ணெய் – 2 டீஸ்பூன்

* பிரியாணி இலை – 1

* கிராம்பு – 2

* ஏலக்காய் – 2

* பட்டை – 1/2 இன்ச் துண்டு

அரைப்பதற்கு…

* துருவிய தேங்காய் – 4 டேபிள் ஸ்பூன்

* முந்திரி – 3

* பச்சை மிளகாய் – 1

* சோம்பு – 1 டீஸ்பூன்

* கசகசா – 1 டீஸ்பூன்

* இஞ்சி – 1/2 இன்ச் துண்டு

* பூண்டு – 2 பல்

செய்முறை:

* முதலில் அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை மிக்சர் ஜாரில் போட்டு, சிறிது நீர் சேர்த்து நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

* பின் உருளைக்கிழங்கின் தோலை உரித்துவிட்டு, துண்டுகளாக்கி, நீரில் போட்டுக் கொள்ள வேண்டும்.

* பின்பு ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளிக்க வேண்டும்.

* அதன் பின் வெங்காயத்தைப் போட்டு நன்கு வதக்கி, பின் தக்காளியை சேர்த்து பச்சை வாசனை நீங்கி மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.

* பிறகு அதில் மிளகாய் தூள், மல்லித் தூள், கரம் மசாலா சேர்த்து கிளறி, பின் உருளைக்கிழங்கு துண்டுகளை சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து 2 நிமிடம் நன்கு வதக்க வேண்டும். பின் 2 கப் நீரை ஊற்றி கிளறி, குக்கரை மூடி ஒரு விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும்.

* விசில் போனதும் குக்கரைத் திறந்து, அதில் அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுதை சேர்த்து, குறைவான தீயில் ஒரு 10-12 நிமிடம் நன்கு கொதிக்க வைத்து, மேலே கொத்தமல்லியைத் தூவி இறக்கினால், சுவையான உருளைக்கிழங்கு குருமா தயார்.

Related posts

சுவையான கொள்ளு உருண்டைக் குழம்பு

nathan

புதினா தொக்கு

nathan

ரவா கேசரி

nathan

சுவையான பன்னீர் கட்லெட்….

sangika

coconut milk benefits in tamil – தேங்காய் பால் நன்மைகள்

nathan

காலை உணவாக சாக்லேட் சாண்ட்விச்

nathan

சுவையான காளான் மஞ்சூரியன்

nathan

சுவையான கேரட் எலுமிச்சை சாதம்

nathan

மீல் மேக்கர் ப்ரை

nathan