30.4 C
Chennai
Sunday, Nov 17, 2024
pracnant
கர்ப்பிணி பெண்களுக்கு

கர்ப்ப காலத்தில் சிசுவின் அங்க வளர்ச்­சி­களை அறி­வது எவ்­வாறு

தற்­கா­லத்தில் எந்தத் துறை­யிலும் புதிய தொழில்­நுட்­பங்கள் உள்­நு­ழைக்­கப்­பட்டு வேலைகள் திறம்­ப­டவும் துரி­த­மா­கவும் துல்­லி­ய­மா­கவும் மேற்­கொள்­ளப்­பட்டு வரு­கின்­றன.

அந்த வகையில் மருத்­து­வத்­து­றையை பொறுத்­த­வ­ரை­யிலும் பல்­வே­று­பட்ட நவீன யுக்­திகள் சிகிச்­சை­க­ளுக்குப் பயன்­ப­டுத்­தப்­பட்டு வரு­கின்­றன.

பெண் நோயியல் சம்­பந்­த­மான பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்வு காண்­ப­தற்கும் இவ்­வா­றான நவீன தொழில்­நுட்ப உப­க­ர­ணங்கள் யுக்­திகள் மற்றும் பரி­சோ­த­னைகள் பயன்­ப­டுத்­தப்­ப­டு­கின்­றன.

அதில் முக்­கி­ய­மான பரி­சோ­தனை தற்­கா­லத்தில் பாவிக்­கப்­பட்­டு­வரும் ஸ்கான் பரி­சோ­த­னை­யாகும்.

இது கர்ப்­ப­கா­லத்­திலும் சரி, பெண்­களின் கர்ப்­பப்பை, சூல­கங்கள் தொடர்­பான பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்வு காண்­ப­திலும் சரி வைத்­திய நிபு­ணர்­க­ளுக்கு மிகவும் உத­வி­யாக உள்­ளன.

கர்ப்­ப­கா­லத்தில் ஸ்கான் பரி­சோ­தனை செய்­வதால் உண்­டாகும் நன்­மைகள், செய்­வதன் தேவை மற்றும் விளை­வுகள் பற்றி இங்கு ஆராய்வோம்.

கர்ப்­ப­கா­லத்தில் சாதா­ரண ஸ்கான் பரி­சோ­தனை (ULTRA SOUND SCAN) செய்­வதால் தாய்க்கோ சிசு­வுக்கோ எந்­த­வித சிக்­கல்­களும் ஏற்­ப­ட­மாட்­டாது. கர்ப்­ப­கா­லத்தின் எந்­த­வொரு மாதத்­திலும் அதா­வது முதல் மாதம் தொடக்கம் இறுதி மாதம் வரைக்கும் தேவைக்­கேற்ற வகையில் எவ்­வித தயக்­கமும் இன்றி ஸ்கான் பரி­சோ­தனை செய்ய முடியும்.

இப்­ப­ரி­சோ­தனை மூலம் வயிற்றில் உள்ள கருவின் ஆரோக்­கியம், அதன் சரி­யான திகதி, சிசுவின் வளர்ச்சி முறைகள், சிசுவின் வளர்ச்­சிக்­கு­றை­பா­டுகள், சிசு இருக்கும் விதம், அங்­க­வீனக் குறை­பா­டுகள், சிசுக்­களின் எண்­ணிக்கை, மற்றும் தொப்புள் நச்­சுக்­கொடி இருக்கும் விதம் எனப் பல விட­யங்­களை அறிந்து அவற்­றுக்­கான சரி­யான சிசிக்­சை­களை சரி­யா­கத்­திட்­ட­மிட்டு சிறந்த கர்ப்­ப­கால பரா­ம­ரிப்பை வழங்­கக்­கூ­டி­ய­தாக உள்­ளது.

இதன் மூலம் ஆரோக்­கி­ய­மான சிறந்த குழந்­தையை பெற்­றெ­டுக்க முடியும்.

கர்ப்­ப­கா­லத்தில் ஸ்கான் பரி­சோ­த­னை­யா­னது பல்­வே­று­பட்ட நிலை­களில் மேற்­கொள்­ளப்­ப­டு­கி­றது. இது 3 ஆம் மாதம் 5ஆம் மாதம் 8ஆம் மாதம் என பல்­வே­று­பட்ட காலப்­ப­கு­தி­க­ளிலும் தேவை­யேற்­படும் சந்­தர்ப்­பங்­களில் இடை­யி­டை­யேயும் மேற்­கொள்­ளப்­ப­டு­கின்­றது.

ஆரம்­ப­கா­லத்தில் அதா­வது முதல் மூன்று மாதங்­களில் செய்­யப்­படும் ஸ்கான் பரி­சோ­த­னையின் நோக்கம்.

ஆரம்ப கர்ப்­ப­கா­லத்தில் அதா­வது முதல் மூன்று மாதங்­களுள் செய்­யப்­படும் ஸ்கான் பரி­சோ­த­னையில் பல முக்­கிய விட­யங்கள் அறி­யப்­படும்.

அதா­வது கரு­வா­னது கர்ப்­பப்­பையின் உள்ளே சரி­யான இடத்தில் தங்கி உள்­ளது உறு­திப்­ப­டுத்­தப்­படும். கரு­வா­னது ஆரோக்­கி­ய­மாக உள்­ளதா என்­ப­தையும், அறி­வ­துடன் எத்­தனை கருக்கள் உள்­ளன என்­ப­தையும் அறிய முடியும்.

அத்­துடன் இந்த ஸ்கான் பரி­சோ­த­னையின் போதுதான் சிசுவின் பரு­மனை அளந்து சரி­யான பிர­சவ எதிர்­பார்ப்பு திக­தியைக் குறிப்­பிட முடியும்.

இவ்­வாறு சில பெண்கள் இறு­தி­யாக மாத­விடாய் வந்த திக­தியை மறந்­தி­ருந்தால், சரி­யான பிர­சவ எதிர்­பார்ப்புத் திக­தியை முதல் மூன்று மாதங்­களில் செய்­யப்­படும் ஸ்கான் மூலம் தான் சரி­யாக கண்­ட­றிய முடியும்.

அதற்குப் பிந்­திய மாதங்­களில் ஸ்கான் செய்து இவ்­வாறு திக­தியை சரி­யாக கணிப்­பிட முடி­யாது. அத்­துடன் முதல் 3 மாதங்­களில் செய்­யப்­படும் ஸ்கானில் தான் பெண்­களின் கர்ப்­பப்­பையில் உள்ள பைபு­ரோயிட் கட்­டிகள் மற்றும் சூல­கத்தில் உள்ள சூலகக் கட்­டிகள் பற்­றிய தக­வல்­களை அறிய முடியும்.

கர்ப்­ப­கா­லத்தில் சிசுவின் அங்­க­வீன குறை­களை கண்­ட­றிய மேற்­கொள்­ளப்­படும் ஸ்கான் பரி­சோ­தனை.

சிசு முழு­மை­யாக விருத்­தி­ய­டைந்து சகல பாகங்­களும் உரு­வான பின்னர் சிசுவின் உறுப்­பு­களில் ஏதா­வது குறைகள் இருக்­கின்­றதா? என ஸ்கானில் அறி­ய­மு­டியும். இவ்­வாறு அங்க வீன குறை­களை அறியும் ஸ்கான் 5மாத கர்ப்ப காலத்தில் அதா­வது 18, -20 வாரங்­களில் செய்ய முடியும்.

இதன்­போது சிசுவின் தலை, மூளை, முதுகு, நெஞ்சு, வயிறு, இரு­தயம், கால்கள் என பிர­தான உறுப்­பு­களில் குறைகள் இருப்­ப­தனை அறி­ய­மு­டியும்.

இவ்­வா­றான ஸ்கான் பரி­சோ­தனை குறிப்­பாக பெண்­களில் நீரி­ழி­வுநோய், காக்கை வலிப்பு, இரு­த­யநோய் உள்ள போதும் மற்றும் சொந்த உற­வு­களுள் திரு­மணம் செய்து கொண்­ட­வர்­க­ளிலும் ஆரம்ப கர்ப்ப காலத்தில் சரி­யாக போலிக் அசிட் (Folic acid) விற்­றமின் மாத்­தி­ரை­களை எடுக்­கா­த­வர்­க­ளிலும் மேலும் ஆரம்ப கர்ப்ப காலத்தில் வேண்­டப்­ப­டாத மாத்­தி­ரை­களை உட்­கொண்­ட­வர்­க­ளிலும் இவ்­வா­றாக அங்­க­வீனக் குறை­களை கண்­ட­றியும் ஸ்கான் அவ­சியம்.

ஏனெனில் மேற்­கு­றிப்­பிட்­ட­வர்­களில் சிசுவில் சில குறைகள் வரு­வ­தற்கு சிறிய வாய்ப்­புகள் உள்­ளன.

அத்­துடன் 35 வய­துக்கு மேற்­பட்ட பெண்கள் கர்ப்பம் தரிக்கும் போதும் இது­போன்ற ஸ்கான் பரி­சோ­தனை அவ­சியம்.

நிற­மூர்த்தக் குறை­பாட்டால் ஏற்­படும் டவுன்ஸ் குழந்­தை­களை (Down’s Syndrome) கண்­ட­றியும் ஸ்கான் பரி­சோ­தனை.

முதல் மூன்று மாதத்தில் செய்­யப்­படும் ஸ்கானில் சிசுவின் கழுத்தின் பிற்­ப­கு­தியின் தடிப்பை அளந்து இதில் சற்றுக் கூடு­த­லாக தடிப்­ப­டைந்­தி­ருந்தால் டவுன்ஸ் வியாதி குறித்து சந்­தேகம் கொள்ள முடியும்.

அத்­துடன் சிசுவின் மூக்கின் எலும்பு விருத்­தி­ய­டை­யாத தன்­மை­யையும் பார்க்க முடியும்.

இவ்­வாறு டவுன்ஸ் சிசு குறித்து சந்­தேகம் இருந்தால் இதனை உறு­திப்­ப­டுத்த மேலும் சில பரி­சோ­த­னை­க­ளாக இரத்­தப்­ப­ரி­சோ­தனை மற்றும் சிசுவின் நிற­மூர்த்தப் பரி­சோ­தனை என்­பன செய்ய முடியும்.

இதன் மூலம் இவற்றை உறு­திப்­ப­டுத்­தலாம்.

பிந்­திய கர்ப்­ப­கா­லத்தில் (8ஆம் மாதம்) செய்­யப்­படும் ஸ்கான் பரி­சோ­தனை

8 மாதங்­களில் செய்யப்படும் ஸ்கான் பரிசோதனையில் சிசுவின் வளர்ச்சியை அறியமுடியும்.

இதன் மூலம் சிசுவின் வளர்ச்சிக் குறைகள் இருப்பின் சிசுவை முன்கூட்டியே பிரசவிக்க முடியும்.

மேலும் இவ்வாறு எட்டு மாதங்களில் செய்யப்படும் ஸ்கான் மூலம் சிசு இருக்கும் விதம் மற்றும் தொப்புள் நச்சுக்கொடி அமைந்திருக்கும் விதம் என்பவற்றை அறியலாம்.

இவ்வாறு ஸ்கான் பரிசோதனை கர்ப்பகாலத்தின் வெவ்வேறு கால கட்டத்தில் செய்யப்படும். இதன் மூலம் பலவித தகவல்களைப் பெற முடியும்.
pracnant

Related posts

பெண்கள் போலிக் ஆசிட் மாத்திரைகளை சாப்பிட்டால் குழந்தைகளில் பிறவி கோளாறை தடுக்கலாம்

nathan

கர்ப்பிணிகள் 7 மாதங்களுக்கு பிறகு செய்யக்கூடாதவை

nathan

தண்ணீரில் விரைவாக பிரசவம்

nathan

ஆபத்தை தரும் கருக்குழாய் கர்ப்பம்

nathan

கர்ப்பிணிகளின் வயிற்றில் வளரும் கருவை பாதிக்கும் ஃபாஸ்ட் ஃபுட் உணவுகள்

nathan

கர்ப்ப காலத்தில் ஏற்படும் வயிற்று பிடிப்புக்களைக் குறைக்கும் உணவுகள்!

nathan

ஒன்பதாம் மாதத்தில் கர்ப்பிணிகளின் உடலில் நடைபெறும் நிகழ்வுகள்!!!

nathan

கர்ப்ப கால அழகுக்கு ஈடு உண்டோ!

nathan

சிசுவின் அறிவாற்றல் மற்றும் ஆரோக்கியம் அதிகரிக்க…

sangika