25.6 C
Chennai
Wednesday, Jan 22, 2025
1 fish 1
ஆரோக்கிய உணவு

இந்த உணவுகளை உண்பதற்கு முன்/பின் தெரியாம கூட பாலை குடிச்சுடாதீங்க..

 

பாலில் கால்சியம், வைட்டமின் ஏ, பி12, ரிபோஃப்ளேவின், பாஸ்பரஸ், துத்தநாகம், மெக்னீசியம் மற்றும் பொட்டாசியம் போன்ற ஏராளமான சத்துக்கள் உள்ளன. இச்சத்துக்கள் அனைத்தும் உடல் செயல்பாட்டிற்கு அவசியமானவை. பாலை தினமும் குடித்து வந்தால், பற்கள் மற்றும் எலும்புகள் வலுவாக இருக்கும், புரோட்டீன் குறைபாடு தடுக்கப்படும், உடல் வலிமையாக இருக்கும், மன அழுத்தம் நீங்கும், தூக்க பிரச்சனைகள் தடுக்கப்படும்.

ஆனால் அந்த பாலுடன் ஒருசில உணவுப் பொருட்களை சேர்த்து உட்கொள்ளும் போது, அது உடல் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். குறிப்பாக ஒருசில உணவுகளை உண்பதற்கு முன் அல்லது பின் பாலை குடித்தால், அது உடலுக்கு பெரும் தீங்கை உண்டாக்கும். இப்போது அந்த உணவுகள் என்னவென்பதைக் காண்போம்.

மீன் மற்றும் சிக்கன்

மீனுடன் பால், தயிர் போன்ற பால் பொருட்களை சேர்த்து உட்கொள்ளக்கூடாது என்று பலர் சொல்வதைக் கேட்டிருப்பீர்கள். ஏனெனில் மீனில் புரோட்டீன் அதிகம் உள்ளது மற்றும் இது உடலில் சூட்டை அதிகரிக்கும். பால் பொருட்களும் இம்மாதிரியான பண்புகளைக் கொண்டவை என்பதால், இவற்றை ஒன்றாக எடுக்கும் போது, செரிமானம் தொடர்பான பிரச்சனைகளான ஃபுட் பாய்சனிங், அஜீரண கோளாறு, அடிவயிற்று வலி போன்றவற்றை ஏற்படுத்தும்.

உளுத்தம் பருப்பு

உளுத்தம் பருப்பில் வைட்டமின்கள், கனிமச்சத்துக்கள் மற்றும் நார்ச்சத்து போன்ற ஊட்டச்சத்துக்கள் உள்ளன. பொதுவாக இதை ஜீரணிப்பதற்கு அதிக நேரம் எடுக்கும். இத்துடன் பாலை உட்கொள்ளும் போது, செரிமான செயல்முறை மோசமாக பாதிக்கப்பட்டு, அடிவயிற்று வலி, வாந்தி மற்றும் உடல் பருமன் போன்ற பிரச்சனைகளை சந்திக்கலாம். இதன் காரணமாகவே உளுத்தம் பருப்பு நிறைந்த உணவை உண்ட பின் பால் குடிக்கக்கூடாது என்று சொல்கிறார்கள். வேண்டுமானால் உளுத்தம் பருப்பு நிறைந்த உணவுகளை உண்ட 2 மணிநேரத்திற்கு பின் பால் குடிக்கலாம்.

சிட்ரஸ் பழங்கள்

ஆரஞ்சு, கிரேப்ஃபுரூட், எலுமிச்சை, லிச்சி போன்ற சிட்ரஸ் பழங்களுடன் பால் பொருட்களை எப்போதும் சேர்த்து உட்கொள்ளக்கூடாது. ஏனெனில் சிட்ரஸ் பழத்தில் உள்ள அமிலம் பாலை திரிய வைத்து, வயிற்றில் நச்சு பொருட்களாக மாறி, மோசமான பிரச்சனைகளை ஏற்படுத்திவிடும். இம்மாதிரியான சூழ்நிலையில், சளி, இருமல் மற்றும் அலர்ஜி கூட ஏற்படலாம்.

எள்ளு மற்றும் உப்பு

நீங்கள் சாப்பிடும் உணவுகளில் எள்ளு மற்றும் உப்பு இருந்தால், அந்த உணவை உண்டதும் அல்லது உண்பதற்கு முன் பால் மற்றும் தயிரை குறைந்தது 2 மணிநேரமாவது சாப்பிடாமல் இருங்கள். ஏனெனில் இது உடலுக்கு தீங்கு விளைவிக்கும். குறிப்பாக இது சரும பிரச்சனைகளை உண்டாக்கி தீவிரமாக்கும்.

பலாப்பழம் அல்லது பாகற்காய்

பலாப்பழம், பாகற்காய் போன்றவை பலருக்கு மிகவும் பிடித்தமானதாக இருக்கும். ஆனால் இவற்றை உட்கொண்ட பின் பால் அல்லது தயிர் உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் இவை உங்களுக்கு நன்மைக்கு பதிலாக தீமையையே உண்டாக்கும். குறிப்பாக இப்படி உட்கொள்ளும் போது, படர்தாமரை, சிரங்கு, அரிப்பு, எக்சிமா, சொரியாசிஸ் போன்ற பிரச்சனைகள் வரலாம்.

முள்ளங்கி

பாலை எப்போதும் உப்பு மற்றும் புளிப்பான உணவுப் பொருட்களுடன் சேர்த்து உட்கொள்ளக்கூடாது. இது தவிர, முள்ளங்கி உள்ள உணவை உண்ட பின்னரும் பாலை உடனே குடிக்கக்கூடாது. ஏனெனில் இவ்வாறு செய்தால், பால் உடலினுள் நஞ்சாக மாறி, சருமம் தொடர்பான நோய்களுக்கு வழிவகுக்கும். எனவே முள்ளங்கி சாப்பிட்டால் குறைந்தது 2 மணிநேரம் கழித்து தான் பால் குடிக்க வேண்டும்.

Related posts

காலை வேளையில் தானியங்களை உணவாக எடுத்து வருவதன் முக்கியத்துவம்!!!தெரிஞ்சிக்கங்க…

nathan

பாதாமில் எத்தனை ஆயுர்வேத நன்மைகள் உள்ளன?

nathan

தெரிஞ்சிக்கங்க… வெள்ளை ஒயின் உடலுக்கு ஆபத்தானதா?

nathan

உங்களுக்கு உலர்திராட்சை சாப்பிட்டால் ஏற்படும் நன்மைகள் தெரியுமா?

nathan

பல்வேறு நோய்களை குணமாக்கும் மஞ்சள் பால்

nathan

கொழுப்பை குறைத்து, நச்சுக்களை அழிக்கும் ஆரோக்கியமிக்க அவகேடா

nathan

உங்களுக்கு தெரியுமா பழத்திலேயே முதன்மையானது என அகத்தியர் மருத்துவம் சொல்லும் பழம் இதுதான்…

nathan

சரும பொலிவுக்கு பப்பாளி – ஆரஞ்சு ஜூஸ்

nathan

உங்களுக்கு தெரியுமா மருத்துவ குணங்கள் அதிகம் நிறைந்த வெந்தயக் கீரை…!!

nathan