தேவையான பொருட்கள் :
சாமை அரிசி – அரை கப்
பாசிப்பருப்பு – 1 ஸ்பூன்
தண்ணீர் + பால் – 1 1/2 கப்
பொடித்த வெல்லம் – 1 கப்
நெய் – 4 ஸ்பூன்
ஏலக்காய், சுக்கு தூள் – தலா அரை ஸ்பூன்
திராட்சை, முந்திரி – தேவைக்கு ஏற்ப
செய்முறை :
* வெறும் கடாயில் சாமை, பாசிப்பருப்பை தனித்தனியாக போட்டு நன்றாக வறுத்து 15 நிமிடம் ஊற வைக்கவும்.
* குக்கரில் தண்ணீர் பால் சேர்த்து அதனுடன் ஊறவைத்துள்ள சாமை, பாசிப்பருப்பை போட்டு குக்கரை மூடி விசில் வைக்கவும்.
* 1 விசில் வந்தவுடன் அடுப்பை 10 நிமிடம் மிதமான தீயில் வைத்து இறக்கவும்.
* பின்னர் குக்கரை திறந்து கரண்டியால் நன்றாக குழைத்து கொள்ளவும்.
* அடுத்து அதில் பொடித்த வெல்லம், ஏலக்காய், சுக்கு தூள் சேர்த்து வேக வைக்கவும்.
* வெல்லம் வாசனை போய் நன்றாக மணம் வரும் போது சிறிது நெய் சேர்க்கவும்.
* கடாயை அடுப்பில் வைத்து சூடானதும் அதில் 1 ஸ்பூன் நெய் ஊற்றி அதில் முந்திரி திராட்சையை போட்டு வறுத்து பொங்கலில் சேர்க்கவும்.
* சுவையான காரைக்குடி சாமை பொங்கல்