31.7 C
Chennai
Friday, Aug 28, 2026
எடை குறைய

உடல் எடையை குறைக்க உதவும் சிறந்த இரவு நேர உணவுகள்

எந்த டயட் பின்பற்றியும் உடல் எடை குறையவில்லையா? அல்லது டயட்டை பின்பற்ற முடியாமல் தவிக்கிறீர்களா? பெரும்பாலும் இரண்டாவது கேள்வி தான் உடல் எடை குறையாமல் இருப்பதற்கான காரணங்கள். உண்மையில் காலையும், மதியமும் வஞ்சனை இன்றி உங்கள் உடல் உழைப்பிற்கு ஏற்ப சாப்பிடலாம், தவறே இல்லை.

ஏனெனில், காலை மற்றும் மதியம் சாப்பிட்ட பிறகு கண்டிப்பாக நீங்கள் வெறுமென இருக்க போவதில்லை, ஏதேனும் வேலைகள் செய்துக் கொண்டுதான் இருப்பீர்கள். ஆனால், இரவு நேரத்தில், சத்தான, கலோரிகள் குறைவான உணவுகளை சாப்பிட வேண்டியது அவசியம். முக்கியமாக எண்ணெய் உணவுகள் மற்றும் கொழுப்பு அதிகமான உணவுகளை அறவே ஒதுக்க வேண்டும்.

1. வாழைப்பழம்
இரவு ஒன்று அல்லது இரண்டு வாழைப்பழம் மட்டும் சாப்பிட்டு வந்தால் உங்கள் உடல் எடையில் நல்ல மாற்றம் காணலாம். மற்றும் உங்கள் உடலுக்கு தேவையான கலோரிகள் மொத்தமும் அந்த ஓர் வாழைப்பழத்திலேயே இருக்கிறது.

2. ஓட்ஸ் உணவு
ஓட்ஸ் உணவு கொழுப்புச்சத்து இல்லாத ஓர் சிறந்த உணவு. இது, உடல் எடையை குறைக்க சீரிய முறையில் உதவும். அரை கப் ஓட்ஸ் உணவு போதுமானது.

3. தானிய உணவுகள்
தானிய உணவுகளை வேகவைத்து சிறிதளவு உப்பு மட்டும் சேர்த்து சாப்பிட்டு வந்தாலே, உங்கள் உடல் எடையில் நல்ல மாற்றத்தை காண இயலும்.

4. முட்டை
இரவு நேரத்தில் இரண்டு அல்லது மூன்று வேக வைத்த முட்டைகள் சாப்பிடலாம். வெள்ளை கரு மட்டும். வயிறு நிறையாவிட்டாலும், உடலுக்கு தேவையான சத்துகள் மொத்தமும் இதில் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

5. கொழுப்பு நீக்கப்பட்ட பால்
இரவு ஓர் டம்ளர் கொழுப்பு நீக்கப்பட்ட பால் குடித்து வந்தால் ஓர் மாதத்திற்குள் உங்கள் உடல் எடையில் நல்ல மாற்றத்தை காண இயலும்.

Related posts

டி.என்.ஏ-வை பற்றி தெரிந்துகொண்டால், உடல் எடையை விரைவில் குறைக்க முடியும்!!

nathan

தினம் இதை சாப்பிடுங்கள் எடை கண்டிப்பா குறையுமாம்!!சூப்பர் டிப்ஸ்…

nathan

இதை தவிர்த்தாலே எளிதாக உடல் எடையை குறைத்து விடலாம்!…

sangika

உடல் எடையை குறைக்க கலோரிகளை எப்படி எரிப்பது என்பதற்கான சில டிப்ஸ்

nathan

நம் உடல் எடையை வேகமாக குறைக்க இதோ சில டிப்ஸ்

nathan

கிரீன் டீ குடித்தால் தேவையற்ற கொழுப்பை கரைத்திடலாம் -அப்படி என்ன ஸ்பெஷல்?

nathan

உடல் கொழுப்பு கரைய – முட்டைகோஸ் சூப்:!

nathan

உணவைத் தவிர்த்தாலும் எடை அதிகரிக்க என்ன காரணம்?

nathan

To control your weight – உடல் எடை அதிகரிப்பதை தடுக்க

nathan