28.1 C
Chennai
Sunday, Dec 22, 2024
ways to improve skin health natural Face Pack
முகப் பராமரிப்பு

வீட்டிலேயே முகப்பொலிவை அதிகரிக்க செய்யும் வழிமுறைகள்!

அன்றாடம் பயன்படுத்தும் எளிமையான பொருட்களை கொண்டு முகப்பொலிவை அதிகரிக்கும் வழிமுறைகளை இங்கு காண்போம்.

சூரியனில் இருந்து வரும் புற ஊதாக்கதிர்கள் சுற்றுச்சூழல்மாசுபாடு, எதிர்மறையான வாழ்வியல் மாற்றங்கள், முறையற்ற உணவுப்பழக்கம், ஹார்மோன்களின் சீரற்ற சுரப்பு போன்றவை சருமத்தில் பாதிப்பை உண்டாக்குகின்றன. இதன் மூலம் முகத்தில் கரும்புள்ளி, முகப்பரு, தோல் சுருக்கம், சரும நிறம் மாற்றம் ஆகிய பிரச்சனைகள் ஏற்படுகின்றன. இவற்றுக்கு இயற்கையான முறையில் தீர்வு காண முடியும். அன்றாடம் பயன்படுத்தும் எளிமையான பொருட்களை கொண்டு முகப்பொலிவை அதிகரிக்கும் வழிமுறைகளை இங்கு காண்போம்

காற்றாழை, புற ஊதாக்கதிர்களை பாதிப்பில் இருந்து சருமத்தை பாதுகாப்பதோடு சுருக்கங்கள் ஏற்படாமலும் தடுக்கும் திறன் கொண்டது. ஒரு டீஸ்பூன் கற்றாழை ஜெல்லுடன் சம அளவு தேன் கலந்து முகத்தில் தடவி 15 நிமிடங்கள் கழித்து கழுவினால் முகம் பொலிவடையும்.

எலுமிச்சையில் உள்ள வைட்டமின் சி சருமத்தை இளமையாக வைத்திருப்பதற்கு உதவும். இதில் இருக்கும் சிட்ரிக் அமிலம் முகத்தில் படர்ந்திருக்கும் கருமையை நீக்கும் திறன் கொண்டது. ஒரு டீஸ்பூன் எலுமிச்சை சாறுடன், சம அளவு தயிர் கலநது முகம் மற்றும் கழுத்து பகுதியில் பூச வேண்டும். 15 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவினால் முகம் பளிச்சிடும். இந்த கலவையை வெயில் பட்டு கருத்த இடங்களில் பூசலாம்.

2 டீஸ்பூன் முட்டைகோஸ் சாறுடன் ஒரு டீஸ்பூன் தேன் கலந்து முகததில் தடவி சிறிது நேரம் கழித்து நீரால் கழுவி விடலாம். இதன் மூலம் முகத்தில் சுருக்கம் ஏற்படுவதை தடுக்கலாம். மென்மையான பளபளக்கான சருமத்தை பெறலாம்.

கால் தேக்கரண்டி கசகசா, 3 கிராம்பு, அரை அரை ஜாதிக்காய் இந்த மூன்றையும் சிறிதளவு பால் ஊற்றி அரைக்க வேண்டும். இந்த விழுதை முகத்தில் உள்ள கரும்புள்ளி மற்றும் முகப்பருவால் ஏற்பட்ட வடுக்களின் மீது பூச வேண்டும். 20 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இவ்வாறு தொடர்ந்து 20 நாட்கள் செய்து வந்தால் முகம் பளபளக்கும்.

குப்பைமேனி இலை சாறு 2 தேக்கரண்டி, கஸ்தூரி மஞ்சள் தூள் அரை தேக்கரண்டி, எலுமிச்சை சாறு அரை தேக்கரண்டி, ரோஜா பன்னீர் அரை தேக்கரண்டி, கற்றாழை சாறு 1 தேக்கரண்டி தேன் கால் தேக்கரண்டி கலந்து முகத்தில் தடவ வேண்டும். 20 நிமிடங்கள் ஊறவைத்த பின்பு குளிர்ந்த நீரால் முகத்தை கழுவவும். இதை தொடர்ந்து செய்து வந்தால் முகத்தில் உள்ள கரும்புள்ளி நீங்கும். முகப்பருக்கள் உண்டாகாது. குப்பைமேனி சருமத்தில் உள்ள சுருக்கத்தை நீக்கி முகத்தை இளமையாக்கும். முகப்பருவால் ஏற்பட்ட தழும்புபளை நீக்கும். குப்பை மேனியை பச்சையாகவோ அல்லது நிழலில் உலர்த்திப்பொடி செய்தோ பயன்படுத்தலாம். நாட்டு மருந்து கடைகளிலும் குப்பைமேனி பொடி கிடைக்கும்.-News & image Credit: maalaimalar

Related posts

முகத்தில் எண்ணெய் வடியுதா? இந்த ஃபேஸியல் செய்யலாம். !

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…பளிச்சென்ற முகத்தைப் பெற வீட்டிலேயே ப்ளீச்சிங் செய்வது எப்படி?

nathan

முக சுருக்கம் வருவதை தடுக்கும் மாம்பழ பேஸ் பேக்

nathan

முகத்தில் உள்ள குழிகளை மறைக்க இயற்கை வழிகள்

nathan

முகம் வசீகரமாக இருக்க…

nathan

முகச்சுருக்கம் ஏற்படாமல் சருமம் பாதுகாக்கப்படும். கேரட் பேசியல்…!

nathan

முகம் ஜொலிக்கணுமா?

nathan

முகத்தை பொலிவு பெற செய்யவும், இளமையாக வைத்து கொள்ளவும் இந்த பழம் பெரிதும் உதவும்…….

sangika

உடலில் வளரும் தேவையற்ற முடிகளை இயற்கை முறையில் எப்படி கட்டுப்படுத்தலாம்?

nathan