25.6 C
Chennai
Wednesday, Jan 22, 2025
04 1372943488 saree8
தொப்பை குறைய

வயிற்றை சுற்றி டயரு வர ஆரம்பிக்குதா? அத பஞ்சராக்க உதவும் உணவுகள்!!!

வயிற்றை சுற்றி டயர் வந்து, உடல் பருமனால் அவஸ்தைப்படும் பலர் அதனைக் குறைக்க பல முயற்சிகளைப் மேற்கொள்வார்கள். அதில் தினமும் உடற்பயிற்சி செய்வது, உண்ணும் உணவில் கட்டுப்பாட்டுடன் இருப்பது போன்றவை பொதுவானவை. சிலரால் எவ்வளவு தான் முயன்றாலும் உடல் எடையைக் குறைக்க முடியாமல் திணறுவார்கள். அதுமட்டுமின்றி, எடையைக் குறைக்க டயட் மேற்கொள்வதால் சிலருக்கு உடலில் ஊட்டச்சத்து குறைபாடுகள் ஏற்படும். இதற்கு காரணம் டயட்டில் சரியான உணவுகளை சேர்க்காமல் இருப்பது தான்.

உடல் எடையைக் குறைக்க டயட்டில் இருக்கும் போது, உடலுக்கு வேண்டிய சத்துக்களை உள்ளடக்கிய உணவுகள் என்னவென்று தெரிந்து கொள்ளாமல் இருப்பது தவறு. எடையைக் குறைக்க நினைக்கும் ஒவ்வொரும் அந்த உணவுப் பொருட்கள் என்னவென்று தெரிந்து வைத்திருக்க வேண்டும். இங்கு எடையைக் குறைக்க உதவும் அந்த உணவுப் பொருட்கள் என்னவென்று பட்டியலிடப்பட்டுள்ளது.

தற்போது நிறைய மக்களுக்கு உடலில் கொழுப்புக்கள் சேர்ந்து வயிற்றைச் சுற்றி டயர் வர ஆரம்பிக்கிறது. அத்தகையவர்களும் இந்த உணவுப் பொருட்களை டயட்டில் சேர்த்து வர வேண்டும். இதனால் கொழுப்புக்கள் குறைந்து, நாம் நினைத்ததை விட விரைவில் ஆரோக்கியமான வழியில் உடல் எடையைக் குறைக்கலாம். சரி, இப்போது உடல் எடையைக் குறைக்க உதவும் உணவுப் பொருட்கள் என்னவென்று பார்ப்போமா!!!

பாதாம்
பாதாமில் வைட்டமின்கள் மற்றும் இதர அத்தியாவசிய சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளது. எனவே உடல் எடையைக் குறைக்க நினைப்போர் தினமும் ஒரு கையளவு பாதாமை உட்கொண்டு வந்தால், உடலுக்கு வேண்டிய ஆற்றல் கிடைத்து, அடிக்கடி பசி வராமல் இருக்கும். முக்கியமாக உப்பு சேர்த்த பாதாமை உட்கொள்வதை தவிர்க்க வேண்டும்.

ஆப்பிள்
ஒரு ஆப்பிளில் 4-5 கிராம் நார்ச்சத்து நிறைந்துள்ளது. மேலும் இதில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் மற்றும் இதர வைட்டமின்கள், கனிமச்சத்துக்கள் அதிகம் உள்ளது. ஆகவே இதனை டயட்டில் இருப்போர் சேர்த்து வந்தால், குடலியக்கம் சீராக செயல்பட்டு, கொழுப்புக்கள் சேராமல், உடல் எடை குறையும்.

அவகேடோ
அவகேடோவில் கொழுப்புக்கள் இருந்தாலும், அவை ஆரோக்கியமான கொழுப்புக்கள் தான். மேலும் அதில் நார்ச்சத்துக்களும், புரோட்டீனும் அதிகம் இருப்பதால், அவை உடல் எடையைக் குறைக்க உதவும். குறிப்பாக இதில் உள்ள கொழுப்புக்கள் நீண்ட நேரம் பசி எடுக்காமல் தடுக்கும்.

குடைமிளகாய்
குடைமிளகாயில் சிவப்பு, மஞ்சள், பச்சை என மூன்று வெரைட்டிகள் உள்ளன. இவை அனைத்திலுமே வைட்டமின் சி மற்றும் வேறுசில வைட்டமின்களும் போதிய அளவில் நிறைந்துள்ளன. இத்தகையதை சாலட் அல்லது சூப்பில் சேர்த்து சாப்பிடலாம்.

பட்டை
காபி, டீ போன்றவற்றில் சர்க்கரைக்கு பதிலாக பட்டைத் தூளை ஒரு சிட்டிகை சேர்த்து கலந்து குடித்தால், உடலின் ஆற்றல் அதிகரித்து, இன்சுலினானது மெதுவாக வெளியேற்றப்படும். மேலும் இதில் உள்ள மருத்துவ குணங்கள் உடலில் தங்கியுள்ள கொழுப்புக்களை கரைக்க பெரிதும் உதவியாக இருக்கும்.

முட்டை
முட்டையின் வெள்ளைக்கருவை தினமும் சாப்பிட்டு வந்தால், உடல் எடையை குறைக்கலாம். ஏனெனில் முட்டையின் வெள்ளைக்கருவில் புரோட்டீன் அதிகம் இருப்பதால், அவை அடிக்கடி பசி ஏற்படுவதைத் தடுக்கும். எனவே எடையைக் குறைக்க நினைப்போர் இதனை காலை வேளையில் சாப்பிட்டு வாருங்கள்.

தினை
மதியம் அல்லது இரவு வேளையில் தானியங்களில் ஒன்றான தினையை உட்கொண்டு வந்தால், அவை சாதத்திற்கு சிறந்த மாற்றாக விளங்கும். மேலும் இதில் புரோட்டீன் மற்றும் நார்ச்சத்துக்கள் அதிகம் உள்ளது. எனவே எடையைக் குறைக்க நினைப்போர் தினையை உணவில் சேர்த்து வாருங்கள்.
04 1372943488 saree8

Related posts

இடுப்பு சதை குறைக்க உதவும் ஜிம் உடற்பயிற்சிகள்

nathan

பானை போல வயிறு இருக்கா? உங்களுக்குதான் இந்த விஷயம்

nathan

தொப்பையை குறைக்கும் சக்தி பச்சை பயிருக்கு உண்டு, தெரிந்து கொள்வோமா?

nathan

சூப்பர் டிப்ஸ்! இந்த பழத்தை தினமும் 1 சாப்பிடுங்க தொப்பை திடீர்னு மாயமாய் போய்விடும்!

nathan

தொப்பை குறைய உதவும் ஸ்விஸ் பந்து பயிற்சி

nathan

ஏன் அடிவயிற்றுக் கொழுப்பை கரைப்பது கடினமாக உள்ளதென தெரியுமா?

nathan

தொப்பையைக் குறைத்து, தட்டையான வயிறு பெற கத்ரீனா கைப் டயட் ஃபிட்னஸ்!

nathan

தொப்பையைக் குறைக்க உதவும் நோனி ஜூஸ் பற்றிக் கேள்விப்பட்டதுண்டா? தெரிஞ்சிக்கங்க…

nathan

வயிறு குறைய.. ஆயுர்வேத மருத்துவம்!

nathan