pregnancy foods 0
மருத்துவ குறிப்பு

விரைவில் கர்ப்பமாவதற்கு உதவும் காய்கறிகள், பழங்கள்!பெண்களே தெரிந்துகொள்ளுங்கள் !

பெண்கள் கர்ப்பமாவதற்கு ஃபோலிக் அமிலம் மற்றும் இரும்புச்சத்து வளமையாக உள்ள பச்சை இலை காய்கறிகள், பழங்கள் சிறந்த உணவாக விளங்கும்.

முட்டைக்கோஸ்

முட்டைக்கோஸ் மலட்டுத்தன்மை பிரச்சனைகளுக்கு கண்டிப்பாக உதவிடும். அதற்கு காரணம் அதிலுள்ள டி-இண்டோல் மீதேன் என்ற ரசாயனம். இது ஈஸ்ட்ரோஜன் மெட்டபாலிசத்தில் முக்கிய பங்கை வகிப்பதால், நார்த்திசுக்கட்டிகள் மற்றும் இடமகல் கருப்பை அகப்படலம் போன்றவைகள் உருவாகாமல் தடுக்கப்படும்.

ப்ராக்கோலி

கர்ப்பமாக திட்டமிடும் பெண்களுக்கு அருமையான உணவாக விளங்குகிறது. அதிலுள்ள ஃபோலிக் அமிலம், இரும்புச்சத்து மற்றும் இதர அதிமுக்கிய ஊட்டச்சத்துக்களும் அதனை ஒரு முழுமையான உணவாக மாற்றுகிறது. கருமுட்டையை முதிர்ச்சியடைய செய்யவும், கருமுட்டை வெளிப்படுதல் செயல்முறைக்கும், கருப்பைகளுக்கு தேவையான வைட்டமின் சி-யும் இதில் அளவுக்கு அதிகமாக உள்ளது.

உருளைக்கிழங்கு

உருளைக்கிழங்கு கர்ப்பமாக திட்டமிடும் ஒவ்வொரு பெண்ணும் அவித்த உருளைக்கிழங்கை தங்கள் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். உருளைக்கிழங்கில் உள்ள வைட்டமின் பி மற்றும் ஈ, அணுக்கள் பிரிவை அதிகரிக்க உதவும். இதனால் பெண் கருவில் உருவாகும் சினை முட்டை ஆரோக்கியமாக இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாகும்.

மாதுளை

மாதுளையில் உள்ள பல வித உடல் நல பயன்களை தவிர, இரண்டு பாலினருக்கும் லிபிடோவை ஊக்கப்படுத்தவும் உதவுகிறது.

வாழைப்பழம்

சீரான மாதவிடாய் சுழற்சியில் உள்ள பெண்களுக்கு மலட்டுத்தன்மை இடர்பாடும் கர்ப்ப சிக்கல்களும் குறைவாகவே இருக்கும். அதனால் கர்ப்பமாக திட்டமிடும் பெண்கள் வாழைப்பழங்கள் உண்ண வேண்டும். அதற்கு காரணம் அதிலுள்ள அளவுக்கு அதிகமான வைட்டமின் பி6. சீரான மாதவிடாய் சுழற்சிக்கு இந்த வைட்டமின் அதிமுக்கிய ஒன்றாகும். இதனால் கருவுறும் தன்மையும் மேம்படும்.

அன்னாசிப்பழம்

அன்னாசிப்பழத்தில் அளவுக்கு அதிகமான மாங்கனீசு உள்ளது. பல வித இனப்பெருக்க ஹார்மோன்கள் சுரப்பதற்கு இந்த கனிமம் முக்கிய பங்கை வகிக்கிறது. கூடுதலாக, உடலில் மாங்கனீசு அளவுகள் குறைவாக இருப்பதற்கும் மலட்டுத்தன்மைக்கும் தொடர்பு உள்ளது.

முட்டை

முட்டைகள் கருவுறும் தன்மைக்கு சந்தேகமே இல்லாமல் சிறந்த உணவாக விளங்குகிறது. முட்டையில் கோலின், ஃபோலிக், ஒமேகா 3 கொழுப்பமிலங்கள் மற்றும் வைட்டமின் டி வளமையாக உள்ளதால், கர்ப்பமாக திட்டமிடும் ஒவ்வொரு பெண்ணுக்கும் இது முழுமையான உணவாக விளங்கும்.

மஞ்சள்

சமைக்கும் போதெல்லாம் உணவில் மஞ்சள் சேர்த்துக் கொள்ளுங்கள். இது சுவையை அதிகரிப்பதோடு மட்டுமல்லாது, ஆரோக்கியமான கர்ப்பத்தையும் மேம்படுத்தும். இதில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் அதிகமாக உள்ளதால், கருவுறும் தன்மையை ஊக்குவிக்கும் சக்தி இந்த அதிசய மசாலாவிற்கு இருக்கிறது என்பது பலருக்கும் தெரியாது.-News & image Credit: maalaimalar

Related posts

சிறுநீரக கற்கள் கரைய செய்யும் ஓர் அற்புத மூலிகை முயன்று பாருங்கள்!

nathan

எலுமிச்சை ஜூஸ்ஸினை விரும்பி குடிப்பவரா நீங்கள்.அப்ப இத படிங்க!

nathan

பித்தப்பை கற்களை இயற்கை முறையில் அகற்ற எளிய வழி

nathan

படுக்கைப் புண்கள், நோய்களை போக்கும் கானா வாழை

nathan

உடலில் அதிகப்படியான கொலஸ்ட்ரால் மாரடைப்புக்கு முன் இந்த அறிகுறிகளை ஏற்படுத்தும்!

nathan

உங்களுக்கு ஆண் குழந்தை பிறக்கவேண்டும் என்று ஆசையா? சித்தர்கள் கூறும் ரகசியத்தை கடைபிடிங்க

nathan

எவ்வளவு சாப்பிட்டாலும் உங்க உடம்பு தேறமாட்டேங்குதா? அப்ப இத படிங்க!

nathan

சந்தன மரங்கள் அதிகம் பயன் தருபவை……

sangika

தினம் ஒரு நெல்லிக்காய்

nathan