24.9 C
Chennai
Tuesday, Jan 21, 2025
sevenembarrassingearlypregnancysignsthatnoonetalksaboutcover 12 1468306250
மருத்துவ குறிப்பு

பல வருடங்களாக கருத்தரிக்க முயற்சி செய்றீங்களா?உங்களுக்குதான் இந்த விஷயம்

தற்போது திருமணமான பல தம்பதிகள் சந்திக்கும் பொதுவான பிரச்சனை கருவுறாமை. பல வருடங்களாக குழந்தையைப் பெற முயற்சித்து பல தம்பதிகள் தோல்வியடைந்துள்ளனர். இதற்கு பின் பல காரணங்கள் உள்ளன. அதில் ஆரோக்கியமற்ற உணவு, உடற்பயிற்சியின்மை, மாசடைந்த சுற்றுச்சூழல் போன்றவை குறிப்பிடத்தக்கவை. இன்றைய நவீன வாழ்க்கை முறையானது மன அழுத்தம் நிறைந்ததாக இருப்பதால், அதுவும் கருவுறாமைக்கான ஒரு காரணமாகும்.

இந்த பிரச்சனைக்கு பல்வேறு சிகிச்சைகள் உள்ளன. இந்த சிகிச்சைகளில் பல மருந்துகளை எடுக்க வேண்டியிருப்பதால், சில சமயங்களில் பக்க விளைவுகளையும் சந்திக்க வேண்டியிருக்கலாம். எனவே கருவுற நினைக்கும் தம்பதிகள் ஆரம்பதிலேயே தங்களின் வாழ்க்கை முறையை மாற்றிக் கொண்டு, கருத்தரிக்க முயற்சித்தால் ஒரு நல்ல பலனைக் காணலாம்.

அதிலும் குறிப்பிட்ட சில உணவுகளை உண்பதன் மூலம், அந்த உணவுகளில் உள்ள சத்துக்களால் ஒட்டுமொத்த உடலின் ஆரோக்கியத்துடன், இனப்பெருக்க மண்டலத்தின் ஆரோக்கியமும் மேம்பட்டு, வேகமாக கருத்தரிப்பதற்கான வாய்ப்புக்கள் அதிகரிக்கும். இப்போது கருவளத்தை அதிகரித்து விரைவில் கர்ப்பமாக உதவும் சில உணவுகளைக் காண்போம். இந்த உணவுகளை அன்றாட உணவில் சேர்ப்பதன் மூலம் ஒரு நல்ல செய்தி விரைவில் உங்கள் காதுகளை எட்டும்.

சூரிய காந்தி விதைகள்

திருமணமான ஆண்கள் சூரிய காந்தி விதைகளை அன்றாடம் சிறிது சாப்பிடுவது நல்லது. ஏனெனில் இது விந்தணுக்களின் அளவை சரியாக பராமரிக்கும். இந்த விதைகளில் வைட்டமின் ஈ என்னும் அத்தியாவசிய ஊட்டச்சத்து, விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதோடு, விந்து இயக்கத்தையும் அதிகரிக்கும்.

பெர்ரிப் பழங்கள்

ராஸ்ப்பெர்ரி, ப்ளூபெர்ரி மற்றும் ஸ்ட்ராபெர்ரி போன்றவற்றில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள், பைட்டோ நியூட்ரியண்ட்டுகள் உள்ளன. இவை இரண்டு பாலினத்தவருக்கும் கருவளத்தை மேம்படுத்துகின்றன. மேலும் இவற்றில் வைட்டமின் சி மற்றும் ஃபோலிக் அதிகம் வளமான அளவில் உள்ளதால், இது கருத்தரித்த பிறகு ஆரோக்கியமான கரு வளர்ச்சியை வழங்குகிறது.

திணை

திணையில் புரோட்டீன், ஜிங்க் மற்றும் ஃபோலிக் அமிலம் போன்றவை அதிகம் உள்ளது. இவை கருத்தரிக்க உதவுவதோடு, ஆரோக்கியமான கரு வளர்ச்சிக்கும் உதவி புரிகிறது.

கிரீக் யோகர்ட்

கிரீக் யோகர்ட்டில் கால்சியம், புரோபயோடிக்குகள் மற்றும் வைட்டமின் டி உள்ளன. இவை அண்டவிடுப்பின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு, நோயெதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கும்.

சால்மன்

சால்மன் மீனில் புரோட்டீன் மற்றும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் உள்ளன. இவை கர்ப்ப காலத்தில் கருவின் வளர்ச்சியை மேம்படுத்துகிறது. மேலும் சால்மன் மீனில் உள்ள செலினியம், ஆண்களில் விந்தணுக்களின் அளவை அதிகரிக்க உதவுகிறது.

சிட்ரஸ் பழங்கள்

சிட்ரஸ் பழங்களான ஆரஞ்சு மற்றும் கிரேப்ஃபுரூட் போன்றவற்றில் வைட்டமின் சி சிறப்பான அளவில் நிறைந்துள்ளது. அதோடு இவற்றில் உள்ள பாலிமைன் புட்ரெசின் விலங்கு ஆராய்ச்சியில் கருமுட்டை மற்றும் விந்து ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கான ஆற்றலுடன் தொடர்புடையது தெரிய வந்தது. ஆகவே சிட்ரஸ் பழங்களை அன்றாடம் சாப்பிடுவதன் மூலம் கருத்தரிக்கும் வாய்ப்பு அதிகரிக்கலாம்.

ஈரல்

ஈரலில் குறிப்பாக மாட்டு ஈரலில் கொழுப்பில் கரையும் வைட்டமின்களுடன், வைட்டமின் ஏ உள்ளது. மேலும் இது அதிகளவில் இரும்புச்சத்தை கொண்டுள்ளதால், கருச்சிதைவு மற்றும் தாய்வழி இரத்த சோகை ஆகியவற்றைத் தடுக்க உதவுகிறது. அதோடு இதில் உள்ள வைட்டமின் பி12, இரத்த சிவப்பணுக்கள் மற்றும் டி.என்.ஏ சரியான முறையில் உருவாக உதவுகிறது. கூடுதலாக ஈரலில் கோலைன், ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் ஃபோலேட் போன்றவை வளமான அளவில் நிறைந்துள்ளது.

தக்காளி

தக்காளியில் லைகோபைன் என்னும் சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்டு அதிகளவில் நிறைந்துள்ளது. இது கருவுறுதலை அதிகரிக்க உதவும். முக்கியமாக இதில் உள்ள லைகோபைன் ஆண் கருவுறுதலை மேம்படுத்துவதில் முக்கிய பங்கை வகிப்பதாக ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது. ஒரு ஆய்வில் 8 முதல் 12 மாதங்களுக்கு ஒரு நாளைக்கு 4 மி.கி முதல் 8 மி.கி வரை லைகோபைன் சேர்த்து வந்தது, விந்து ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கும் கர்ப்ப விகிதங்களை அதிகரிப்பதற்கும் வழிவகுத்தது.

மாதுளை

மாதுளையில் பல விதைகள் இருப்பதால், நீண்ட காலமாக அது கருவுறுதல் மற்றும் குழந்தை பிறப்புடன் தொடர்புபடுத்தப்படுகிறது. இதுக்குறித்த எந்த ஒரு அறிவியல் காரணமும் இல்லை என்றாலும், ஒரு சுவாரஸ்மான ஒன்றாக உள்ளது. அறிவியலைப் பொறுத்தவரை, மாதுளையில் விந்தணுக்களின் தரத்தை மேம்படுத்தும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகம் நிறைந்துள்ளன. 2014 ஆம் ஆண்டு மேற்கொண்ட ஒரு ஆய்வில், போதுமான ஆரோக்கியமான விந்தணுக்கள் இல்லாத 70 ஆண்களுக்கு மாதுளம் பழத்தின் சாறு மற்றும் பொடி தினமும் கொடுக்கப்பட்டது. மூன்று மாத சிகிச்சைக்கு பின், அந்த ஆண்களின் விந்தணு இயக்கம் 62% அதிகரித்திருந்தது தெரிய வந்தது.

வால்நட்ஸ்

வால்நட்ஸில் ஒமேகா-3 மற்றும் ஒமேகா-6 கொழுப்பு அமிலங்கள் அதிகம் உள்ளன. இதனால் ஆய்வாளர்கள் இது கருவுறுதலுக்கு ஆதரிக்க வாய்ப்பு இருக்குமோ என்று நினைத்து ஒரு ஆய்வை மேற்கொண்டனர். அந்த சிறிய ஆய்வில், சுமார் 117 ஆண்கள் இரண்டு குழுக்களாகப் பிரிக்கப்பட்டனர். அதில் ஒரு குழுவினர் வால்நட்ஸ் சாப்பிடுவதைத் தவிர்த்தும், மற்றொரு குழுவினர் தினமும் 75 கிராம் வால்நட்ஸை சாப்பிட்டும் வந்தனர். இந்த ஆய்விற்கு முன்பு மற்றும் 12 வாரங்கள் கழித்தும், விந்து மாதிரியை அந்த ஆண்கள் வழங்கினர்.

12 வாரங்களுக்குப் பிறகு, வால்நட்ஸை சாப்பிட்ட ஆண்களின் விந்தணுக்களின் இயக்கம் மற்றும் வடிவத்தில் முன்னேற்றம் காணப்பட்டது. ஆனால் வால்நட்ஸ் சாப்பிடாத குழுவினரின் விந்தணுக்களின் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை.

Related posts

மார்பக கட்டிகளை போக்கும் மருத்துவம்

nathan

இரைப்பை புண் ஏற்படக் காரணங்கள்

nathan

உயிரை குடிக்கும் சிகரெட்

nathan

காதலைக் காயப்படுத்தும் 8 விஷயங்கள்

nathan

தினம் ஒரு நெல்லிக்காய்

nathan

மருத்துவர் கூறும் தகவல்கள்! நாக்கில் வெள்ளைப்படிவது ஏன் தெரியுமா?

nathan

ஒவ்வாமைப் பரிசோதனைகள்

nathan

அரிப்பு ஏற்பட்டால் கீழ்க்கண்ட விஷயங்களையும் கவனியுங்கள் இனி…

sangika

‘கொர்ர்ர்ர்’ ருக்கு குட்பை!

nathan