தாவரப்பெயர் :- abrus precatorius
குண்டுமணியின் மருத்துவ குணம் :
ஒரு சில பெண்கள் 16 முதல் 20 வயதாகியம் கூட ருதுவாக மாட்டார்கள். இத்தகைய பெண்களில் பலருக்கு, வாலிபப் பெண்களுக்கு உடலில் ஏற்படக்கூடிய அத்தனை மாற்றங்களும் ஏற்பட்டிருக்கும். ஆனால் ருதுவாக மாட்டார்கள். இப்படிப்பட்ட பெண்கள் ருதுவாக குண்டுமணி இலை நன்கு பயன்படக் கூடியதாக இருக்கிறது.
தேவையான அளவு குண்டுமணி இலையைக் கொண்டு வந்து அதே அளவு சுத்தம் செய்த எள்ளையும், வெல்லத்தையும் சேர்த்து உரலில் போட்டு நன்றாக இடித்து ஒரு எலுமிச்சம்பழ அளவு எடுத்து ஒரு நாளில் எந்த நேரத்திலாவது தின்னக் கொடுத்து விட்டால் 24 மணி நேரத்திற்குள் ருதுவாகி விடுவாள். ஒரு சில பெண்களுக்கு ஆரம்பத்தில் அதிக இரத்தம் வெளியேறும்.
இது உடல் வாகினை பொறுத்தது. அதிக அளவில் இரத்தம் வெளியேறினால், வாழைக்காயின் தோலை சீவி விட்டு காயை மென்று தின்னச்செய்தால், இருத்தப் போக்கு படிப்படியாகக் குறைந்து விடும். அதன் பின் மாதாமாதம் ஏற்படக்கூடிய மாத விடாய் ஒழுங்காக நடைபெறும். இந்த மருந்தை ஒரு முறைதான் கொடுக்க வேண்டும். மறுமுறை கொடுக்கக்கூடாது.