29.7 C
Chennai
Sunday, Dec 22, 2024
hjkl
ஆரோக்கியம் குறிப்புகள்

குழந்தைகள் கண் பார்வை வளம் பெறச் சாப்பிட ஏற்ற 12 உணவுகள்

தினமும் உங்கள் குழந்தைக்கு நல்ல கண் பார்வை கிடைப்பதற்கான உணவுகளை நீங்கள் தருகிறீர்களா என்று உறுதிப் படுத்திக் கொள்வது முக்கியம். அப்படிச் செய்தால், அனேக கண் பார்வை பிரச்சனைகளைத் தவிர்ப்பதோடு, உங்கள் குழந்தைகள் பெரியவர்களானாலும் நல்ல ஆரோக்கியமான பார்வையோடு இருப்பார்கள். நீங்கள் தெரிந்து கொள்ளவும் உங்கள் குழந்தைக்குச் சத்தான உணவைத் தரவும், இங்கே சில உணவுகளின் பட்டியல் உங்களுக்காக,

hjkl
Woman feeding kids with vegetables – isolated

1. முட்டை
முட்டையில் இருக்கும் ஜின்ங்க் மற்றும் லுடீன் போன்ற சத்துக்கள் கண் குறைபாடு ஏற்படாமல் பெரிதளவு காக்கிறது.முட்டைக் கருவில் உள்ள ‘ஸிக்ஸாந்தின்’ புற ஊதா கதிர் வீச்சின் பாதிப்புகளிலிருந்து கண்களைப் பாதுகாக்கிறது.இதனால் உங்கள் கண் பார்வை ஆரோக்கியமாகிறது.

2. மீன்
ஒமேகா-3 கொழுப்பு அமிலம் கண் பார்வைக்கு மிகவும் தேவையானது. இது ரெடினாவின் ஆரோக்கியம் மற்றும் செயல்பாட்டிற்குப் பெரிதும் உதவும்.கூடுதலாகக் கண்கள் உலர்ந்து போவதைத் தடுக்கிறது.பல வகையான கடல் மீன்களில் இந்த சத்து உட்படப் பல உயிர்ச்சத்துகள் நிறைந்து உள்ளன.குறிப்பாக சால்மன்,டுனா,மேக்கிரல்,ட்ராவுட் போன்ற மீன் ரகங்களைக் கூறலாம்.

3. கீரை வகைகள்
பச்சைக் கீரை வகைகளில் அதிகம் உயிர்ச்சத்து சி மற்றும் இ சத்து நிறைந்துள்ளன. மேலும் இதில் கரோட்டினாய்டுகள் மற்றும் லியூடீன் ஆகிய சத்துக்களும் நிறைந்துள்ளன. குறிப்பாகப் பொன்னாங்கண்ணி, முருங்கை,பசலை,புதினா,பிரோக்கோலி போன்ற கீரை வகைகளில் ஆண்டி ஆக்ஸிடண்ட் நிறைவாக உள்ளது. இதனால் இதைத் தொடர்ந்து உட்கொள்வதால் நீண்ட கால கண் நோய்களை வரவிடாமல் தடுக்கவும் குணப்படுத்தவும் முடிகிறது.

4. ஆரஞ்சு நிற பழங்கள் மற்றும் காய்கள்
மாம்பழம், ஆரஞ்சு, காரட்,எலுமிச்சை போன்ற பழங்களில் அதிக ஊட்டச்சத்து ஏ நிறைந்துள்ளது. இதனால் இரவில் பார்வை பிரகாசமாகத் தெரியும். மேலும் இந்தப் பழங்களில் உயிர்ச்சத்து சி நிறைந்துள்ளதால் கண்களோடு இணைந்திருக்கும் மற்ற தசைகளும் சத்து பெறும்.தினம் பச்சையாக ஒரு காரட்டை உண்பதால் கண் சம்பந்தப்பட்ட கோளாறுகள் வராமல் தப்பித்துக் கொள்ளலாம்.

5. சூரிய காந்தி விதைகள்
இதில் நிரம்பியுள்ள ஊட்டச்சத்து இ மற்றும் ஜிங்க் கண் கோளாறு வராமல் தவிர்க்க உதவுகின்றன.இவை பல்வேறு கடைகளில் விற்பனையாகி வருகின்றன.வாங்கி பலன் அடையலாம்.

6. நாவல்பழம் மற்றும் திராட்சைப்பழம்
நாவல் பழம் மற்றும் திரட்சைப்பழங்களில் ஆந்தோசையனின் அதிகம் உள்ளதால் இரவு நேரத்திலும்,இருட்டாக இருக்கும் இடங்களிலும் உங்கள் கண்கள் நன்றாகப் பார்வைப் பெற உதவும். இது கண் சோர்வைக் குறைக்கும்.ரெட்டினா சிதைவுறாமல் பாதுகாக்கப்படுகிறது.மேலும் இந்தப் பழங்களில் குரோசிடின், ரெஸ்வெராட்ரால், செலினியம் மற்றும் ஜின்க் அதிக அளவில் இருப்பதால் உங்கள் கண்கள் நல்ல ஆரோக்கியம் பெரும்.

7. முட்டைகோஸ்
கண் பார்வைக் கோளாறுகளைக் குணப்படுத்த முட்டைகோஸை அதிகம் உங்கள் உணவில் சேர்க்க வேண்டும்.குறிப்பாகச் சிவப்பு முட்டைகோஸ் கண் பார்வை வளத்திற்குப் பெரிதும் துணைபுரிகிறது. இதில் உயிர்ச்சத்து சி மற்றும் உயிர்ச்சத்து இ அதிகம் உள்ளதால் உங்கள் கண் ஆரோக்கியத்தை அதிகப்படுத்தும்.

8. பூக்கோசு
இதிலுள்ள ஆண்டி ஆக்ஸிடண்ட் கண் பார்வைக்கு மிகவும் உகந்தது.ஆக இதை உணவில் அடிக்கடி சேர்ப்பது நன்மைப் பயக்கும். பொதுவாகவே குழந்தைகள் பூக்கோசை விரும்பி உண்பார்கள் என்பது கூடுதல் சிறப்பு.

9. சர்க்கரை வள்ளிக் கிழங்கு
இதில் பீடாகரோடின் மற்றும் ஊட்டச்சத்து ஈ நிறைந்துள்ளன.இதை உணவில் அதிக அளவு எடுத்துக் கொள்வதாலும் கண் பார்வை மேம்படும்.

10. பால் பொருட்கள்
பால்,வெண்ணெய்,தயிர்,நெய்,பன்னீர் என்று அனைத்திலுமே ஊட்டச்சத்து ஏ நிறைந்துள்ளது.இவற்றை போதிய அளவு உணவில் எடுத்துக் கொள்வதால் கண்கள் ஆரோக்கியமாக இருக்கும்.

11. தண்ணீர்
தண்ணீர் என்பது வளமான கண் பார்வைக்கு இன்றியமையாதது.பல்வேறு கண் கோளாறுக்குக் கண்களின் ஈரப்பதம் குன்றுவதே காரணம்.இதைத் தவிர்க்க போதிய தண்ணீர் அருந்த வேண்டும்.
அதாவது தினம் 2 லிட்டர் தண்ணீர் அருந்துவது உகந்தது.

12.கொட்டை மற்றும் பருப்பு வகைகள்
முந்திரி, பாதாம் போன்ற சில கொட்டை வகைகளில் அதிகம் உயிர்ச்சத்து இ சத்து நிறைந்துள்ளதால் உங்கள் குழந்தையின் கண் ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியமான ஒன்றாக இருக்கும். பட்டாணி,மொச்சை மற்றும் அவரைக் கொட்டைகளில் பையோபிலவோனாய்ட் மற்றும் ஜிங்க் நிறைந்து உள்ளன.

மேலே குறிப்பிடப்பட்டுள்ள இந்த உணவுகள் மட்டுமல்லாமல் உங்கள் குழந்தைகளுக்கு மற்ற உணவு வகைகளையும் அதிகம் கொடுக்கலாம். நாட்டுக் கோழி, ஆட்டிறைச்சி, ஆற்று மீன்கள் என்று நல்ல சத்து நிறைந்த உணவைத் தரலாம். மேலும் பசும் பால், பாரம்பரிய அரிசி வகைகள், உதாரணத்திற்குக் குதிரைவாலி, சாமை, திணை, வரகு, கைக்குத்தல் அரிசி என்று பல வகை அரிசி வகைகளையும் நீங்கள் உணவில் சேர்த்துக் கொள்ளலாம். இந்தப் பாரம்பரிய பருப்பு மற்றும் அரிசி வகைகள் அதிக சத்துக்கள் நிறைந்தது.

Related posts

திருமாங்கல்யத்திற்கும் தனி மரியாதை -மகத்துவம் நிறைந்த திருமாங்கல்யம்

nathan

மஞ்சள் பற்களை விரைவில் வெண்மையாக்க 5 ட்ரிக்ஸ்!!

nathan

நோய்களை குறைக்கும் நிம்மதியான உறக்கம்

nathan

குழந்தைகளுக்கு இந்த பொம்மைகளை வாங்கி கொடுக்காதீங்க..!தெரிந்துகொள்வோமா?

nathan

கரும்புள்ளிகளை நீக்கும் வீட்டு வைத்தியம்!

nathan

தெரியுமா உங்களுக்கு மாதுளம் பழம் சாப்பிடறதுல இவ்வளவு ரிஸ்க் இருப்பது?

nathan

சூப்பர் டிப்ஸ்! முதுமையில் ஆரோக்கியமாய் வாழ இளமையில் செய்ய வேண்டியவை

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…எளிதான முறையில் வீட்டின் அறையை எப்படி சுத்தப்படுத்துவது?

nathan

உங்களுக்கு தெரியுமா வெயில் காலங்களில் பச்சிளம் குழந்தை பராமரிப்பு எப்படி !!

nathan