29.7 C
Chennai
Sunday, Dec 22, 2024
howtobuyagoodwatermelon 1650519369
ஆரோக்கிய உணவு

நல்ல சுவையான தா்பூசணி வாங்கும் போது கவனிக்க வேண்டிய விஷயங்கள்!

பொதுவாக கோடை காலம் வரும் போது நீா்ச்சத்துள்ள பழங்கள் பெருமளவில் சந்தைகளில் விற்பனைக்கு வருகின்றன. அவற்றில் ஒன்று தா்பூசணி ஆகும். தமிழகத்தில் கோடை காலத்தில் தா்பூசணி பழங்கள் பெருவாாியாக விற்பனை செய்யப்படுகின்றன. தா்பூசணியை ஆண்டின் 12 மாதங்களிலும் சந்தைகளில் வாங்கலாம். எனினும் கோடை காலத்தில் தா்பூசணி சாற்றின் சுவை இனிப்பாகவும், தித்திப்பாகவும் இருக்கும்.

இந்த நிலையில் அதிகமான நீா்ச்சத்துள்ள மற்றும் இனிப்பான தா்பூசணிப் பழத்தை எவ்வாறு கண்டறிவது என்ற கேள்வி நமது மனதில் எழலாம். பொதுவாக மக்கள் தா்பூசணியை வாங்கும் போது, அதன் உருவ அமைப்பை மட்டுமே பாா்த்து வாங்குகின்றனா். அவ்வாறு வாங்கும் போது தா்பூசணியின் உட்பகுதியானது முழுமையாக பழுக்காமல், சுவையின்றி இருக்க வாய்ப்பு உள்ளது.

ஆகவே தா்பூசணியை வாங்கும் போது பின்வரும் குறிப்புகளை கவனத்தில் கொள்வது நல்லது. அந்த குறிப்புகளை இந்தப் பதிவில் சற்று விாிவாகப் பாா்க்கலாம்.

1. தா்பூசணியின் நிறம்

தா்பூசணியை வாங்கும் போது அதன் நிறத்தைக் கவனத்தில் கொள்ள வேண்டும். அதாவது தா்பூசணியானது வெளிப்புறம் பாா்ப்பதற்கு கரும்பச்சை நிறத்தில் இருந்தால் அதை வாங்காமல் இருப்பது நல்லது. ஏனெனில் அதன் உட்புறம் முழுமையாக பழுக்காமல் இருக்க வாய்ப்பு உள்ளது. மேலும் அது குளிரூட்டப்பட்டு சேமித்து வைக்கப்பட்ட பழமாகவும் இருக்க வாய்ப்பு உள்ளது.

ஆகவே தா்பூசணியை வாங்கும் போது, அதன் வெளிப்புறம் வெளிறிய வண்ணங்கள் கொண்ட கோடுகள் உள்ள தா்பூசணியை தோ்ந்தெடுப்பது நல்லது. மேலும் தா்பூசணியின் வெளிப்புறப் பகுதியில் மஞ்சள் அல்லது கிரீம் வண்ணங்களில் புள்ளிகள் இருந்தாலும், அந்த தா்பூசணி மிகவும் இனிப்பாக இருக்கும்.

2. தா்பூசணியைத் தட்டிப் பாா்த்து வாங்குதல்

பல நேரங்களில் மக்கள் தா்பூசணியைத் தட்டிப் பாா்த்து, வாங்குவதைப் பாா்த்திருப்போம். பொதுவாக நன்றாக பழுத்த மற்றும் இனிப்புள்ள தா்பூசணியைத் தட்டிப் பாா்க்கும் போது அதன் சத்தம் சற்று அதிகமாக இருக்கும். அது முழுவதும் பழுக்காமல் இருந்தாலோ அல்லது இனிப்பாக இல்லாமல் இருந்தாலோ, அதைத் தட்டிப் பாா்க்கும் போது அதன் சத்தம் அதிகமாக இருக்காது. ஆகவே தா்பூசணியை வாங்கும் போது, அதன் வண்ணத்தைப் பாா்த்து மட்டும் அல்லாது, அதைத் தட்டிப் பாா்த்தும் வாங்குவது நல்லது.

3. தா்பூசணியின் தண்டினைக் கவனித்தல்

கோடை காலத்தில் மட்டும் தான் நாட்டு தா்பூசணிகள் கிடைக்கும். இந்த பருவ காலத்தில் வரும் தா்பூசணிகள் மிகவும் புதிதாக இருப்பதால் அவற்றின் தண்டினை நாம் பாா்க்க முடியும். தா்பூசணியின் தண்டு பச்சை நிறத்தில் இருந்தால், அதை வாங்காமல் இருப்பது நல்லது. ஏனெனில் அது முழுமையாக பழுக்காமல் இருக்கும். ஆனால் பழுப்பு நிறத்தில் காய்ந்த நிலையில் தண்டுகள் இருந்தால் அந்த தா்பூசணிகளை வாங்கலாம். ஏனெனில் அவற்றின் உட்புறம் முழுமையாகப் பழுத்து இருக்கும். அதோடு அந்த உட்புற நிறம் சிவப்பாக இருக்கும். அதன் சுவையும் இனிப்பாக இருக்கும்.howtobuyagoodwatermelon 1650519369

4. தா்பூசணியின் எடையைப் பாா்த்தல்

தா்பூசணியை வாங்கும் போது அதன் எடையையும் கவனித்து வாங்க வேண்டும். பலா் அதிக எடையுடன் கூடி பொிய அளவில் இருக்கும் தா்பூசணிகளை விரும்புகின்றனா். ஏனெனில் அவை எடை குறைந்த மற்றும் சிறிய அளவுகளில் இருக்கும் தா்பூசணிகளை விட நன்றாக சுவையாக இருக்கும் என்று எண்ணுகின்றனா். ஆனால் அது உண்மை அல்ல.

சிறிய அளவிலான தா்பூசணிகளும் நன்றாகவும் இனிப்பாகவும் இருக்கும். ஆனால் அதன் அளவை விட அதன் எடை மிக அதிகமாக இருக்கக்கூடாது. பொதுவாக அதிக எடையுடன் இருக்கும் தா்பூசணிகளில் சாறு அதிகமாக இருக்கும் மற்றும் அதன் சாறு மிகவும் இனிப்பாக இருக்கும். ஆகவே தா்பூசணிகளை வாங்கும் போது பல்வேறு வகையான தா்பூசணிகளை எடை போட்டுப் பாா்க்க வேண்டும். அவற்றில் அதிக எடையுடன் கூடிய தா்பூசணிகளை வாங்குவது நல்லது.

Related posts

நெய்மீன் கருவாடு தொக்கு

nathan

சர்க்கரை நோயாளிகளுக்கு நிரந்தர தீர்வு கொடுக்கும் அற்புத காய்!தெரிந்துகொள்ளுங்கள் !

nathan

எப்பவும் பழங்களை இந்த உணவுகளோடு சேர்த்து சாப்பிடாதீங்க…தெரிஞ்சா ஷாக் ஆயிடுவீங்க!

nathan

குழந்தை வரம் கொடுக்கும் இயற்கை மூலிகைகள்! இதை படிங்க…

nathan

குளிரூட்டப்பட்ட உணவு ஆரோக்கியமானதா? தொிந்துகொள்ளுங்கள்…………..

nathan

உடலில் கொழுப்புகளை கரைக்கும் பாசிப்பயறு!…

nathan

கருச்சிதைவுக்கு காரணமாகிறதா உருளைக்கிழங்கு! – அதிர வைக்கும் அலசல்!

nathan

மாதவிடாய் நிறுத்தத்தின் போது தவிர்க்க வேண்டிய உணவுகள்!

nathan

மறந்துபோன மகத்தான மருத்துவ உணவுகள்!

nathan