33.9 C
Chennai
Wednesday, Jun 26, 2024
e 41
ஆரோக்கிய உணவு

காலை மடக்கி உட்கார்ந்து சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகளா? தெரிந்துகொள்வோமா?

நம் முன்னோர்கள் கூறிச் சென்ற ஒவ்வொரு விஷயத்திலும் நமக்கு ஏராளமான நன்மைகளை கொடுக்கக்கூடிய ரகசியங்களும் உள்ளடங்கி இருக்கும். நம் முன்னோர்கள் எதைச் செய்தாலும் அதை எதற்காக செய்கிறோம்? என்பதை சொல்லிக் கொடுப்பதில்லை! இதனால் பலரும் மூடநம்பிக்கையாக எடுத்துக் கொண்டு விடுகின்றனர். எல்லா விஷயங்களிலும் மூட நம்பிக்கை இருப்பதில்லை. நம்பிக்கையை மூலதனமாக கொண்டவர்கள் வாழ்க்கையில் என்றுமே தோற்பதில்லை எனவே காலை மடக்கி உட்கார்ந்து சாப்பிட சொல்ல ஏன் நம் முன்னோர்கள் அறிவுறுத்தினர்? காலை மடக்கி சாப்பிட உட்காருவதால் ஏற்படக்கூடிய நன்மைகள் என்னென்ன? என்பதை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

இப்போது பெரும்பாலான மக்கள் காலை மடக்கி சம்மணம் போட்டு கொண்டு உட்கார்ந்து சாப்பிடுவது இல்லை! இதனால் பல்வேறு நோய்களுக்கு ஆளாக வேண்டியிருக்கிறது. சேரில் அமர்ந்து சாப்பிடுவது அல்லது படுக்கையில் அமர்ந்து சாப்பிடுவது போன்றவற்றை பலரும் கடைபிடித்து வருகின்றனர். வெறும் தரையில் அல்லது பாயில் காலை மடக்கி சம்மணம் போட்டு கொண்டு சாப்பிடுவதால் நம் உடம்பில் இடுப்புக்கு கீழே இருக்கும் பகுதியில் ரத்த ஓட்டம் குறையும்.

 

இடுப்புக்கு மேலே இருக்கும் பகுதியில் ரத்த ஓட்டம் அதிகரிப்பதால் சக்தியும், ஆரோக்கியமும் உயருகிறது. இடுப்புக்கு மேலே இருக்கும் பகுதியில் முக்கிய உறுப்புகளும் உண்டு. கணையம், சிறுநீரகம், நுரையீரல், மூளை, கண், காது என்று ஒரு மனிதனுக்கு தேவையான முக்கிய உறுப்புகளுக்கு அதிக ரத்த ஓட்டம் கிடைக்கும் பொழுது தான் பிராண சக்தியும் அதிகரிக்கிறது.

 

சாப்பிடும் போது முக்கிய உறுப்புகளுக்கு தேவையான சக்தியை காலை மடக்கி அமர்ந்தால் தான் பெற முடியும். முழு சக்தியும் வயிற்றுப் பகுதிக்கு கீழே சென்றால் சரியான ஜீரணம் நடைபெறுவது இல்லை. இதனால் அஜீரண கோளாறுகள் அதிகரிக்கத் துவங்கும். சாப்பிடும் போது முழு சக்தியும் வயிற்று பகுதிக்கு கிடைத்தால் தான் ஜீரணமும் சரியாக நடைபெறும். எனவே சம்மணம் போட்டு அமர்ந்து சாப்பிட்டால் வயிற்றுக்கு கீழே முழு சக்திகள் செல்லாமல் முழுமையாக வயிற்றுக்கு மேல் இருக்கும் பகுதிகளில் ரத்த ஓட்டம் பாய்கிறது. இதனால் ஜீரணமும் சரியாக நடைபெறுகிறது.

சாப்பிடும் பொழுது தரையில் அமர்ந்து சாப்பிடுவதால் உடல் ஆரோக்கியம் மட்டுமல்ல, மன ஆரோக்கியமும் வலுப்பெறுகிறது. சாப்பிடும் போது நிதானமாக எல்லா பருக்கைகளையும் வாயிலேயே வைத்து கூழாக்கி பின்னர் மென்று உள்ளே தள்ள வேண்டும். முழு பருக்கைகளாக உள்ளே தள்ளி அவசர அவசரமாக பாதி மென்று சாப்பிடும் பொழுது தேவையில்லாத நோய்களும் நம்மை தாக்குகிறது. எனவே சாப்பிடக்கூடிய அந்த பத்து நிமிடமாவது எந்த விதமான சிந்தனைகளும் இல்லாமல், தங்களுடைய உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்காக அமைதியாக, நிதானமாக, பொறுமையாக அமர்ந்து சாப்பிட வேண்டும்.

 

சாப்பிடும் உணவானது அதிக சூடு இல்லாமல், குளிர்ச்சியாகவும் இல்லாமல் மிதமான சூட்டில் இருப்பது மிகவும் நல்லது. சாப்பிடும் பொழுது பேசிக் கொண்டே சாப்பிட்டால் உணவு பருக்கைகள் உள்நாக்கின் உள்ளே மாட்டிக் கொள்வதற்கு நிறையவே வாய்ப்புகள் உண்டு. அதனால் தான் சாப்பிடும் போது பேசக்கூடாது என்று கூறப்படுகிறது. சாப்பிடும் பொழுது சாப்பிடும் சாப்பாடு நம் உடம்பில் ஒட்ட வேண்டும் என்றால் கைகளை தரையில் வைக்கவும் கூடாது. சிலர் இதை செய்வது உண்டு. எனவே கைகளை தரையில் போட்டு அழுத்திக் கொண்டு சாப்பிடாமல் சரியான முறையில் சாப்பிடுங்கள்.

Related posts

இறாலில் உள்ள சத்துக்கள் என்னென்ன?

nathan

பச்சை பயறு அதிக சத்துக்கள் சாப்பிட்டுவர உடல் ஆரோக்கியம் பெறும். ..

nathan

சுவையான ஆ‌ட்டு‌க்க‌றி தொ‌க்கு

nathan

இரும்புச்சத்து அதிகம் நிறைந்த சாமை

nathan

இலவங்கப்பட்டையில் இவ்வளவு மருத்துவ பயன் இருக்கா?தெரிஞ்சிக்கங்க…

nathan

உண்ணும் உணவு ஜீரணமாக மூன்று வழிகள்

nathan

தெரிஞ்சிக்கங்க…கொய்யாப் பழம் சாப்பிட்டால் இத்தனை நன்மைகளா?

nathan

நாம் சாப்பிடும் உணவு மூலமாகவே அழகை அதிகப்படுத்தி காட்டலாம். …..

sangika

உடல் உறுதிக்கு உதவும் 10 பருப்புகள் மற்றும் நட்ஸ்!

nathan