27 C
Chennai
Thursday, Nov 14, 2024
mushroomwithredpepperrecipes
சமையல் குறிப்புகள்

காளான் குடைமிளகாய் பொரியல்

காளான் பிரியர்களே! இதோ உங்களுக்கான மிகவும் சுவையான காளான் ரெசிபியை தமிழ் போல்ட் ஸ்கை கொடுத்துள்ளது. அதிலும் உங்களுக்கு குடைமிளகாய் பிடிக்குமானால், காளானை குடைமிளகாயுடன் சேர்த்து பொரியல் செய்து சாப்பிடுங்கள்.

சரி, இப்போது அந்த காளான் குடைமிளகாய் பொரியலை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

Yummy Mushroom Capsicum Recipe
தேவையான பொருட்கள்:

காளான் – 250 கிராம்
வெங்காயம் – 1 (நறுக்கியது)
தக்காளி – 1 (நறுக்கியது)
பூண்டு – 2 பல் (நறுக்கியது)
குடைமிளகாய் – 1 (நறுக்கியது)
மிளகுத் தூள் – 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்
எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
கொத்தமல்லி – சிறிது

செய்முறை:

முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயத்தைப போட்டு பொன்னிறமாக வதக்கி விட வேண்டும்.

பின்னர் பூண்டு சேர்த்து வதக்கி, தக்காளியைப் போட்டு நன்கு மென்மையாக வதக்க வேண்டும்.

பின்பு அதில் மிளகுத் தூள் சேர்த்து, குறைவான தீயில் பிரட்டி, மஞ்சள் தூள் சேர்த்து நன்கு வதக்கி விட வேண்டும்.

பிறகு காளான் மற்றும் குடைமிளகாய் சேர்த்து பிரட்டி, சிறிது தண்ணீர் ஊற்றி, உப்பு சேர்த்து பிரட்டி மூடி வைத்து, காளான் நன்கு வெந்தது தண்ணீர் வற்றியதும், அதனை இறக்கி கொத்தமல்லியைத் தூவினால், காளான் குடைமிளகாய் பொரியல் ரெடி!!!

Related posts

பூரி மசாலா

nathan

சளிக்கு இதமான… மிளகு பூண்டு குழம்பு

nathan

சுவையான பன்னீர் கட்லெட்….

sangika

செட்டிநாடு பட்டாணி குருமா

nathan

பருப்பில்லாத இன்ஸ்டன்ட் சாம்பார்

nathan

என் சமையலறையில்!

nathan

மட்டன் வெங்காய மசாலா

nathan

சூப்பரான உருளைக்கிழங்கு தயிர் கிரேவி

nathan

கணவனை அசத்த….. சூப்பரான கனவா மீன் தொக்கு!….

sangika