32.5 C
Chennai
Wednesday, Jun 26, 2024
113559511 BACK PAIN 180032f12
மருத்துவ குறிப்பு

இடுப்பு வலியை கட்டுப்படுத்துவது எப்படி?

இடுப்பு வலியை கட்டுப்படுத்துவது குறித்து மைலாடி ஆயுர்வேத மருத்துவர் பிரிசில்லா சாரோன் இஸ்ரேல் கூறியதாவது, இடுப்பு வலி என்பது விலா எலும்பிற்கு கீழ் தண்டு வடத்தில் அதாவது லம்பார் பகுதியில் ஏற்படும் குறைவான அல்லது அதிகபட்சமான வலியே ஆகும். இதற்கு பல காரணங்கள் உள்ளன. லம்பார் 1 முதல் லம்பார் 5 ல் ஏற்படும் மாற்றங்கள் இடுப்பு வலிக்கு முக்கிய காரணம்.

லம்பார் பகுதியில் உள்ள தசைகளிலோ, தசைநார், தண்டு வடம், இடுப்பு வளையின் உள்பகுதியின் அவயங்களில் ஏற்படும் இயற்கைக்கு மாறான மாற்றங்களின் விளைவே இடுப்புவலியாக உணரப்படுகிறது. 35 வயது முதல் 65 வயதானவர்களில் காணப்படும் இவ்வலி பெண்களிடம் அதிகமாக காணப்படுகிறது. வயது மற்றும் செய்யும் தொழில்களின் விதங்களாலும் ஏற்படும். நரம்பு அழுத்தமானது லம்பார் வெர்ற்றி விரல் உள்ள எலும்புகள் குறிப்பிட்ட நரம்புகளை அழுத்தும் போது தாங்க முடியாத வலி ஏற்படும்.

சில சமயங்களில் பின் பகுதியில் உள்ள வர்ம இடங்களில் அடிபடுவதாலும், வைரல் காய்ச்சல் ஏற்பட்டாலோ, நரம்புகள் வீங்கும் போதும், எலும்பு தேய்மானங்களாலும் இவ்வலி நோயாக மாறும். சயாட்டிகா (sciatica) என்பது ஒரு வித இடுப்புவலி. இவ்வகையில் சயாடிக் நரம்பானது லம்பார் பகுதியில் உள்ள எலும்புகளை அழுத்தும் போது ஏற்படும் வலியே ஆகும். இவ்வகையில் வலியானது புட்டி பகுதியில் இருந்து தொடையை நோக்கி பாதம் வரை வரும். மரத்த நிலை, தரித்த நிலை உணரப்படும். பெரும்பாலும் நடக்கும் போது, குனியும் போது தும்மும் போது அதிகமாக உணரப்படுகிறது.

அறிகுறிகள்:

தொடக்கத்தில் குறைவான வலி இருக்கும். பின்னர் படிப்படியாக தாங்க முடியாத அளவில் வலி அதிகரிக்கும். துடிப்பது மற்றும் எரிச்சல் உணர்வு இருக்கும். இடுப்பில் அடிபடும் போது, சில நேரங்களில் சிறுநீர், மலம் கழிக்கும் போது கட்டுப்படுத்த இயலாத நிலை ஏற்படும்.

காரணம்:

ஒழுங்கற்ற நிலைகளில் உட்காரும் போது, தொழில் ரீதியாகவும், அதிகபாரம் சுமப்பதாலும், அதிக உடல் எடை இருத்தல், அடிபட்டு இருந்தால், தண்டு வடத்தில் அதிகப்படியான வளைவு (scoliosis),ஒரே இடத்தில் சோம்பேறித்தனமாக இருப்பவர்களையும், மேடு பள்ளங்களில் வாகனம் ஓட்டுதல், சிறுநீரக பிரச்சனை, காயம் ஏற்பட்டிருக்கும் போது வைரல் தொற்று ஏற்பட்டால், எலும்பு புற்றுநோய், அதிக உயரம் உள்ள காலணிகளை அணிவது போன்ற காரணங்களால் இடுப்பு வலி ஏற்படுகிறது. சில நேரங்களில்லம் பார் பகுதியில் எலும்பு அதிகபடியாக வளரும் போதும் வலி ஏற்படுகிறது.

கண்டறியும் முறை:

ரத்த பரிசோதனை, கம்பிளிட் பிளட்கவுன்ட், ஹெச். பி, பாஸ்பேட், சுண்ணாம்பு சத்தின் அளவை கண்டறிதல். எக்ஸ்ரே, சி.டி. ஸ்கேன், எம்.ஆர்.ஐஸ்கேன் என்.சி.வி எலக்ட்ரோமையோகிராம் (இஎம்ஜி) மூலம் நரம்பின் உணர்வு நிலைமையின் அளவை கண்டறியலாம்.

அவசர சிகிச்சை:

வர்மத்தில் அடிபட்டாலோ, கீழே விழுந்தாலோ, அதிகவலி ஏற்பட்டாலோ, 72 மணி நேரத்திற்கு குறையாமல் வலி இருந்தாலோ, காய்ச்சலுக்கு பின்னர் வலி இருந்தாலோ அவசர சிகிச்சை அவசியம்.

*முதல் கட்டமாக ஓய்வு மற்றும் இடுப்பு பகுதியை சீரான நிலையில் இழுத்து வைக்க வேண்டும். நான் ஸ்டீராய்டல் ஆன்டி இன்பேலமேஷன் மருந்துகள்., வலி நிவாரணி மருந்துகள் தரலாம். அக்கு பஞ்சர் சிகிச்சை அளிக்கலாம். வலி 8 முதல் 12 வாரங்கள் தொடர்ந்தால் நியுரோ சர்ஜரி மூலம் அழுத்தத்தை சரி செய்யலாம்.

ஆயுர்வேத சிகிச்சை:

பஞ்சகர்மா சிகிச்சையான எண்ணெய் தடவுதல், நீராவி குளியல், மூலிகைகளான ஆமணக்கு, மூக்கிரட்டை, கொன்றை, கொம்பரக்கு, திரிபலா, சுக்கு, குறுந்தட்டி, கொடுவேலி, வாய் விடங்கம், ஓமம், சீரகம், பூண்டு, கோரைக் கிழங்கு, மிளகு, திப்பிலி, வெட்டிவேர், குகுலு, பிரண்டை, அமுக்கரை போன்ற மூலிகைகளால் செய்யப்பட்ட மருந்து, மாத்திரை, கசாயம்பொடி, எண்ணெய், நெய், லேகியங்கள் தொடர்ந்து சாப்பிடுவதன் மூலம் நீண்ட கால வலியில் இருந்து நிரந்தரமாக குணம் அடைய முடியும். வர்ம சிகிச்சை அடங்கல்கள் மூலமும் நாடிநோக்கி அதற்கிணங்க தடவு முறைகள் வர்மம்பட்ட இடங்களில் வேலி பருத்தி சாறு, எண்ணெய் வைத்து திருக்கி தடவலாம்.

வீட்டு சிகிச்சை:

சூடு ஒத்தடம், சூடான நீரில் உட்காருதல் மூலம் தற்காலிகமாக வலி குறையும். ஆமணக்கு, புளி, நொச்சி, எருக்கு, வேப்பம் எண்ணெயுடன் இந்துப்பு சேர்த்து வதக்கி எலுமிச்சையுடன் ஒத்தடம் கொடுக்கலாம். கொள்ளு பொடி அல்லது சூடாக்கிய மண் மூலமும் ஒத்தடம் அளிக்கலாம். கடுகு எண்ணெய் அல்லது ஏற்ற மூலிகை எண்ணெய் தடவலாம், வெதுவெதுபான பாலில் மஞ்சள், தேன் கலந்து சாப்பிட்டால் வலி குறையும். இஞ்சி கலந்த டீ அருந்தலாம்.

தடுக்கும்

அதிக நேரம் நிற்பதை தவிர்க்க வேண்டும். அடி, இடி படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். மேடு பள்ளங்களில் வண்டி ஓட்டக் கூடாது. உடல் எடைடையை குறைக்க வேண்டும். சத்தான உணவுகள் உட்கொள்ள வேண்டும். புகைபிடித்தல், மது அருந்துவதை தவிர்க்க வேண்டும். மன உளைச்சல் இல்லாமல் மனம் அமைதியாக தியான முறைகள் கடைபிடிக்க வேண்டும். குதிகால் உயர்ந்த செருப்புகளை தவிர்க் வேண்டும். சீரான உடற்பயிற்சி மற்றும் ஒழுங்கான நிலையில் உட்காருதல். மட்டமான மெத்தை இல்லாத படுக்கையில் உறங்குவது நல்லது. அதிக பாரத்தை தூக்க கூடாது.

113559511 BACK PAIN 180032f12

Related posts

படிக்கத் தவறாதீர்கள்…கர்ப்பிணியின் வயிற்றில் ஆண் குழந்தை வளர்வதை சுட்டிக்காட்டும் அறிகுறிகள்!

nathan

நரைமுடியை கருகருவென மாற்றும் கரும்பூலா மூலிகை எண்ணெய்!!சூப்பர் டிப்ஸ்…….

nathan

நீச்சல் அடிப்பதால் என்னென்ன நோய்கள் குணமாகும்னு தெரியுமா?

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க… கர்ப்பம் தங்காமல் போவதற்கு முக்கிய காரணங்கள்!

nathan

உடற்சூடு, பித்தம் போன்றவற்றை தணிக்கும் துளசி குடிநீர்

nathan

மனைவியை உங்கள் வசப்படுத்துவது எப்படி

nathan

குழந்தைகள் எந்தெந்த வயதுகளில் என்னென்ன செய்யும்

nathan

மருத்துவர் கூறும் தகவல்கள்! சிறுநீரக நோயில் இருந்து பாதுகாப்பாக இருப்பது எப்படி?

nathan

அலறவைக்கும் ஆஸ்துமா.. என்ன தீர்வு?

nathan