25.6 C
Chennai
Wednesday, Jan 22, 2025
bp 1643263
மருத்துவ குறிப்பு

உயர் இரத்த அழுத்த பிரச்சனை வரக்கூடாதா?தெரிந்துகொள்ளுங்கள் !

இந்தியாவில் பெரும்பாலான மக்கள் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டுக் கொண்டிருக்கும் ஒரு வாழ்க்கை முறை நோய்களில் ஒன்று தான் உயர் இரத்த அழுத்தம். இது அமைதியாக இருந்து ஆளைக் கொல்லும் அளவில் கொடியது. எப்போது ஒருவரது இரத்த அழுத்தம் வழக்கத்திற்கு அதிகமான அளவில் உயரும் போது, அதனால் மாரடைப்பு அல்லது பக்கவாதம் ஏற்படும்.

தற்போதைய வேகமான வாழ்க்கை முறை மற்றும் அளவுக்கு அதிகமான வேலைப்பளு காரணமாக, அனைவருமே ஒருவித மன அழுத்தத்தில் உள்ளோம். அதுவும் கொரோனா பரவ ஆரம்பித்த பின்னர், பலருக்கும் வீட்டிலிருந்தே வேலை செய்ய வேண்டியிருப்பதால், நீண்ட நேர வேலையின் காரணமாக மன அழுத்த அளவு இன்னும் அதிகரித்து உள்ளது.

உயர் இரத்த அழுத்தம் என்றால் என்ன?

உயர் இரத்த அழுத்தம் என்பது தமனி சுவர்களுக்கு எதிராக இரத்தத்தின் அழுத்தம் வழக்கத்திற்கு மாறாக அதிகமாக இருப்பதால், அது பல ஆபத்தான நோய்களுக்கு வழிவகுக்கும். ஒருவருக்கு உயர் இரத்த அழுத்த பிரச்சனை இருந்தால், அடிக்கடி தலைவலி, மூக்கில் இரத்தம் வடிதல், மூச்சுத்திணறல் போன்ற அறிகுறிகளை வெளிப்படுத்தும். இவை அனைத்தும் உயர் இரத்த அழுத்தத்திற்கு மட்டும் அறிகுறிகள் அல்ல என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும் மற்றும் இரத்த அழுத்தம் கடுமையாக அதிகரிக்கும் வரை எந்த அறிகுறிகளும் அவ்வளவு எளிதில் கண்டறிய முடியாது.

ஆகவே உயர் இரத்த அழுத்த பிரச்சனை வராமல் இருக்க தினமும் மனதை அமைதிப்படுத்தும் உடற்பயிற்சிகளில் ஈடுபடுவதோடு, ஒருசில உணவுகளையும் அன்றாட உணவில் சேர்த்து வர வேண்டும். இப்போது அந்த உணவுகள் எவையென்பதைக் காண்போம்.

மாதுளை

இந்த சுவையான சிவப்பு நிற பழத்தில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் பயோஆக்டிவ் பாலிஃபீனால்கள் உள்ளன. இவை உயர் இரத்த அழுத்தத்தை தடுக்கும் திறன் கொண்டவை. எனவே உங்களுக்கு உயர் இரத்த அழுத்த பிரச்சனை வரக்கூடாது என்று நினைத்தால், தினமும் ஒரு பௌல் மாதுளையை ஸ்நாக்ஸ் நேரத்தில் சாப்பிடுங்கள்.

நாவல் பழம்

உயர் இரத்த அழுத்தமானது இரத்த நாளங்களை சுருங்க வைக்கும். நாவல் பழத்தில் உள்ள பொட்டாசியம், தசைகளுக்கு மிகவும் நல்லது. இந்த நாவல் பழம் உயர் இரத்த அழுத்தத்தைத் தவிர்க்க உதவுவதோடு மட்டுமின்றி, கொலஸ்ட்ரால் மற்றும் இரத்த சர்க்கரை அளவை நிர்வகிப்பதிலும் நல்லது. எனவே நாவல் பழம் சாப்பிட்டால், சளி பிடிக்கும் என்று நினைத்து, அது கிடைக்கும் போது வாங்கி சாப்பிடாமல் இருந்து விடாதீர்கள்.

பீட்ரூட்

பீட்ரூட்டில் செரிமான அமைப்பால் நைட்ரிக் ஆக்ஸைடாக மாற்றப்படும் நைட்ரேட்டுகள் உள்ளன. ஆகவே தான் பீட்ரூட் உயர் இரத்த அழுத்த நோயாளிகளுக்கு சிறந்த உணவாக கூறப்படுகிறது. ஒரு டம்ளர் பீட்ரூட் ஜூஸ் அல்லது சமைத்த ஒரு பீட்ரூட், அதை சாப்பிட்ட 2-3 மணிநேரத்தில் உயர் இரத்த அழுத்த அளவை கணிசமாக குறைக்கக்கூடியது.

பூண்டு

பூண்டில் உள்ள அல்லிசின் என்னும் பொருள், உடலினுள் மாயங்களை ஏற்படுத்தும் திறனைக் கொண்டது. இரத்த அழுத்த நோயாளிகள் தங்களின் உணவில் பூண்டு சேர்த்து வந்தால், அது உயர் இரத்த அழுத்தத்தை சட்டென்று குறைக்கும் மற்றும் ஒருவர் ஆரம்பத்தில் இருந்தே தினமும் தங்களின் உணவில் பூண்டு சேர்த்து வந்தால், இரத்த அழுத்த பிரச்சனையே வராது.

வெந்தயம்

வெந்தய கீரை மற்றும் வெந்தய விதைகள் இரண்டிலுமே நார்ச்சத்து, கால்சியம் போன்றவை அதிகமாக உள்ளது மற்றும் இவை உடலில் எல்டிஎல்/டிஜி அளவைக் குறைக்கின்றன, இதன் விளைவாக இரத்த அழுத்தம் குறைக்கிறது. எனவே தினமும் உங்கள் உணவில் வெந்தயம் அல்லது வெந்தய கீரையை சேர்த்து வாருங்கள். இதனால் உயர் இரத்த அழுத்த பிரச்சனையைக் கட்டுப்படுத்தலாம்.

முடிவு
முடிவு
ஆரோக்கியமான இரத்த அழுத்தத்தைப் பராமரிக்க உணவுகள் பெரிதும் உதவுவதாக நிரூபிக்கப்பட்டுள்ளன. எனவே ஆரோக்கியமான உணவுகளுடன், மிதமான அளவில் உடற்பயிற்சிகளையும் செய்து வந்தால், அது உயர் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த உதவும். அதுவும் வீட்டில் இருந்து பணிபுரியும் போது, சரியான தூக்கத்தை வழக்கத்தை மேற்கொள்ள முயற்சித்தால், உடல் ஆரோக்கியமாக நோயின்றி இருக்கும். எனவே உங்களுக்கு உயிரைப் பறிக்கும் திறன் கொண்ட உயர் இரத்த அழுத்த பிரச்சனை வரக்கூடாது என்று நினைத்தால், ஆரோக்கியமான உணவுகளுடன், உடற்பயிற்சி, சரியான தூக்கம் போன்றவற்றை பெற முயலுங்கள்.

Related posts

மூளை எப்படி நினைவுகளை சேமிக்கிறது என்று உங்களுக்கு தெரியுமா -தெரிஞ்சிக்கங்க…

nathan

கட்டாயம் படிக்கவும்! உடலில் எந்த ஒரு அறிகுறிகளும் இல்லாமல் மறைந்து தாக்கும் புற்றுநோய்கள!

nathan

பெண்களை மகிழ்விக்கும் தாம்பத்ய உறவு

nathan

18 வயதிலேயே ஆண்கள் விந்தணுவை சேமித்து வைக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்!!!

nathan

தெரிஞ்சிக்கங்க…குழந்தைகளையும் விட்டு வைக்காத நீரிழிவு

nathan

உதிரப் போக்கின் போது வயிற்று வலியை தவிர்ப்பது எப்படி?

nathan

மருத்துவர் கூறும் தகவல்கள்! உடலில் இரத்த அழுத்தம் குறைவாக இருந்தால் வெளிப்படும் அறிகுறிகள்!!!

nathan

பெண்கள் ருதுவாக குண்டுமணி இலை

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…முதல் குழந்தை தாய்ப்பால் குடிக்கும் போது இரண்டாவதாக கருவுற்றால் என்னென்ன பிரச்சனைகள்?

nathan