548 potato manchurian
ஆரோக்கிய உணவு

சுவையான சீசுவான் உருளைக்கிழங்கு மஞ்சூரியன்

இதுவரை காலிஃப்ளவர் கொண்டு மஞ்சூரியன் செய்து சுவைத்திருப்பீர்கள். ஆனால் உருளைக்கிழங்கு கொண்டு, அதுவும் சைனீஸ் ஸ்டைலில் மஞ்சூரியன் செய்து சுவைத்திருக்கிறீர்களா? இல்லையெனில், தொடர்ந்து படியுங்கள்.

ஏனெனில் இங்கு சீசுவான் உருளைக்கிழங்கு மஞ்சூரியன் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது.

தேவையான பொருட்கள்:

உருளைக்கிழங்கு – 2
சோள மாவு – 1 டேபிள் ஸ்பூன்
மிளகுத் தூள் – 1 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்

மஞ்சூரியன் செய்வதற்கு…

எண்ணெய் – 3 டீஸ்பூன்
பூண்டு – 1 டேபிள் ஸ்பூன் (பொடியாக நறுக்கியது)
பச்சை மிளகாய் – 1/2 (பொடியாக நறுக்கியது)
பெரிய வெங்காயம் – 2 டேபிள் ஸ்பூன் (பொடியாக நறுக்கியது)
குடைமிளகாய் – 1/4 கப் (பொடியாக நறுக்கியது)
சோயா சாஸ் – 1/4 டீஸ்பூன்
தக்காளி சாஸ் – 1 டேபிள் ஸ்பூன்
சீசுவான் சாஸ் – 1 டீஸ்பூன்
சோள மாவு – 1/2 டீஸ்பூன் (2 டேபிள் ஸ்பூன் நீருடன் கலந்து கொள்ளவும்)
உப்பு – தேவையான அளவு
ஸ்பிரிங் ஆனியன் – சிறிது (பொடியாக நறுக்கியது)

செய்முறை:

முதலில் உருளைக்கிழங்கை நன்கு கழுவி, தோலுரித்து, நீளமாக வெட்டிக் கொள்ள வேண்டும்.

பின்னர் ஒரு பௌலில் உருளைக்கிழங்கு, சோள மாவு, மிளகுத் தூள், உப்பு சேர்த்து, சிறிது தண்ணீர் ஊற்றி கலந்து கொள்ள வேண்டும். பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், உருளைக்கிழங்கை போட்டு, பொன்னிறமாக வறுத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்பு அதே வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பூண்டு சேர்த்து வதக்கி, பின் வெங்காயம், குடைமிளகாய், பச்சை மிளகாய் சேர்த்து 2 நிமிடம் நன்கு வதக்க வேண்டும்.

பிறகு அதில் சோயா சாஸ், தக்காளி சாஸ், சீசுவான் சாஸ் சேர்த்து நன்கு கிளறி, பின் சிறிது தண்ணீர் மற்றும் சோள மாவு கலவையை ஊற்றி, தேவையான அளவு உப்பு சேர்த்து ஓரளவு கெட்டியான பதத்தில் கிளறி விட வேண்டும்.

அடுத்து அதில் உருளைக்கிழங்கை சேர்த்து நன்கு பிரட்டி, மேலே ஸ்பிரிங் ஆனியன் தூவி கிளறி இறக்கினால், சீசுவான் உருளைக்கிழங்கு மஞ்சூரியன் ரெடி!!!

Related posts

குப்பையில் போடும் இந்த காய்கறி தோல்களில் அற்புத நன்மைகள் எவ்வளவு தெரியுமா…?இத படிங்க!

nathan

உங்களுக்கு தெரியுமா அன்றாடம் நாம் உண்ணும் உணவில் ரசம் சேர்ப்பதால் கிடைக்கும் நன்மைகள்!!!

nathan

ரம்ஜான் ஸ்பெஷல் நோன்பு கஞ்சி செய்ய தெரியுமா…?

nathan

குளிர்காலத்தில் மஞ்சளை உணவில் ஏன் அடிக்கடி சேர்த்துக் கொள்ளணும் தெரியுமா?

nathan

Food Poison ஆயிடுச்சா? இதோ எளிய நிவாரணம்! இயற்கை வைத்தியம் இருக்கு!

nathan

இதய நோயால் மரணம் ஏற்படுவதைத் தடுக்கும் அற்புத பானம்!….

sangika

குளிர்சாதன பெட்டி வைக்கப்பட்ட இறைச்சியை சாப்பிடலாமா?

nathan

உங்களுக்கு தெரியுமா கர்ப்பிணி பெண்கள் கட்டாயம் சாப்பிட வேண்டிய உணவு!!

nathan

சோர்வை போக்கும் பீட்ரூட், காரட் பானம்

nathan