24.7 C
Chennai
Saturday, Dec 13, 2025
stomach fat 16
ஆரோக்கியம் குறிப்புகள்

உடலில் தேங்கியுள்ள கொழுப்புக்களை வேகமாக கரைக்க உதவும் ஜூஸ்கள்!தெரிந்துகொள்ளுங்கள் !

எடை இழப்பு என்று வரும் போது, அதற்கு பல்வேறு டயட்டுகளை நாம் முயற்சிப்போம். அப்படி மேற்கொள்ளும் டயட்டுகளில் நிச்சயம் ஜூஸ் இருக்கும். பலருக்கு அதிகம் சிரமப்படாமல் உடல் எடையைக் குறைக்க வேண்டுமென்ற ஓர் எண்ணம் இருக்கும். நீங்களும் அப்படி விரும்புபவராயின், குறிப்பிட்ட ஜூஸ்களை உங்களின் அன்றாட உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். ஜூஸ்கள் சுவையானதாக இருப்பதோடு, இவற்றைத் தயாரிப்பதும் எளிது. அதுவும் நற்பதமான ஜூஸ்களை குடித்து வந்தால், அது உடல் எடையை வேகமாக குறைக்க உதவும்.

உங்களுக்கு எந்த ஜூஸ்கள் உடலில் உள்ள கொழுப்புக்களைக் கரைத்து உடல் எடையைக் குறைக்க உதவும் என்பதை தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே உடலில் உள்ள கடினமான கொழுப்புக்களை வேகமாக கரைக்க உதவும் சில ஜூஸ்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றில் உங்களுக்கு பிடித்ததை தினமும் சேர்த்து வந்தாலே நல்ல மாற்றத்தைக் காணலாம். குறிப்பாக ஜூஸ்களை குடித்தால் மட்டும் உடல் எடை குறைந்துவிடாது. அத்துடன் தினமும் உடற்பயிற்சிகளை மேற்கொள்வதோடு, ஜங்க் உணவுகள் மற்றும் எண்ணெயில் பொரித்த உணவுகளைத் தவிர்த்து, ஆரோக்கியமான உணவுகளைத் தேர்ந்தெடுத்து உண்ண வேண்டும்.

குறிப்பு: உங்கள் உணவில் எந்த ஒரு புதிய பொருட்கள் அல்லது ஜூஸ்களை தினமும் சேர்த்துக் கொள்வதற்கு முன், தயவு செய்து ஒரு ஊட்டச்சத்து நிபுணரை அணுகி, அவரிடம் கேட்டுக் கொள்ளுங்கள்.

ஆரஞ்சு ஜூஸ்

பழங்களில் ஆரஞ்சு பழத்தில் கலோரிகள் அதிகமாக இல்லை. எனவே நீங்கள் உங்களின் உடல் எடையைக் குறைக்க நினைத்தால், நற்பதமான ஆரஞ்சு பழத்தைக் கொண்டு ஜூஸ் தயாரித்து தினமும் குடித்து வாருங்கள்.

கேரட் ஜூஸ்

கேரட்டில் கலோரிகள் குறைவு மற்றும் நார்ச்சத்து அதிகமாக உள்ளது. ஒரு டம்ளர் கேரட் ஜூஸை குடித்தால், அது நீண்ட நேரம் பசி எடுக்காமல் வயிற்றை நிரப்பி வைத்திருக்கும். கேரட் ஜூஸ் பித்த நீரின் சுரப்பை அதிகரித்து, உடலில் தேங்கியுள்ள கொழுப்பை கரைக்க உதவி புரிந்து, எடை இழப்புக்கு உதவுகிறது. இன்னும் சிறப்பான பலன் கிடைக்க கேரட் ஜூஸ் தயாரிக்கும் போது, அத்துடன் ஆப்பிள், பாதி ஆரஞ்சு மற்றும் சிறிது இஞ்சி சேர்த்து அரைத்து வடிகட்டி குடியுங்கள். இது உடலில் உள்ள அனைத்து நச்சுக்களையும் வெளியேற்றும்.

அன்னாசி ஜூஸ்

தொப்பையைக் குறைக்க மிகச்சிறந்த வழி அன்னாசி ஜூஸைக் குடிப்பதாகும். ஏனெனில் அன்னாசியில் உள்ள புரோமெலைன் என்னும் நொதி, புரோட்டீனை வளர்சிதை மாற்றம் செய்வதற்கும், அதிகப்படியான வயிற்றுக் கொழுப்பைக் கரைப்பதற்கும் உதவுகிறது. மேலும் புரோமெலைன் கொழுப்புக்களை ஜீரணிக்க மற்றும் பசியைக் கட்டுப்படுத்த லிபேஸ் போன்ற பிற நொதிகளுடன் ஒத்துழைக்கிறது.

பாகற்காய் ஜூஸ்

உடல் எடையைக் கட்டுப்பாட்டில் வைக்கவும், உடலில் உள்ள கொழுப்புக்களைக் கரைக்கவும் பாகற்காய் ஜூஸ் உதவும். பாகற்காயில் கலோரிகள் மிகவும் குறைவு மற்றும் இது பித்த அமிலங்களைச் சுரக்கிறது. சொல்லப்போனால் உடல் எடையைக் குறைப்பதற்கு பாகற்காய் ஜூஸை விட சிறந்தது எதுவும் இருக்காது. 100 கிராம் பாகற்காய் ஜூஸில் 17 கலோரிகள் தான் உள்ளது என்பது தெரியுமா?

வெள்ளரிக்காய் ஜூஸ்

வெள்ளரிக்காயில் நீர்ச்சத்து மற்றும் நார்ச்சத்து அதிகமாகவும், கலோரிகள் குறைவாகவும் உள்ளது. இதனால் அதை உட்கொள்ளும் போது, நீண்ட நேரம் பசி எடுக்காமல் தடுத்து, தேவையில்லாத உணவுகளின் மீதான நாட்டத்தைக் குறைத்து, உடல் எடை குறைக்க உதவும். ஆகவே வெள்ளரிக்காய் கிடைத்தால் அதை வாங்கி சாப்பிடுங்கள். இல்லாவிட்டால் அதைக் கொண்டு ஜூஸ் தயாரித்துக் குடியுங்கள்.

மாதுளை ஜூஸ்

மாதுளை ஜூஸ் எடை இழப்பு முதல் குறையில்லா சருமம் மற்றும் முடியைப் பெறுவது வரை, உடலில் பல மாயங்களை ஏற்படுத்தும். இந்த பழத்தில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், பாலிஃபீனால்கள் மற்றும் லினோலெனிக் அமிலம் போன்றவை எடை இழப்பிற்கும், மெட்டபாலிசத்தை அதிகரிக்கவும் உதவுகிறது. ஆகவே அடிக்கடி மாதுளை ஜூஸை குடித்து, உடலில் உள்ள கொழுப்புக்களை குறைக்க முயலுங்கள்.

நெல்லிக்காய் ஜூஸ்

நெல்லிக்காய் ஜூஸ் செரிமான மண்டலத்திற்கு மிகவும் நல்லது. மேலும் நெல்லிக்காய் உடலின் மெட்டபாலிசத்தையும் அதிகரிக்கும். அதுவும் இதை வெறும் வயிற்றில் உட்கொள்ளும் போது, அது உடல் எடையை வேகமாக குறைக்க பெரிதும் உதவி புரியும்.

Related posts

இந்த தவறுகள் உங்கள் குழந்தைகளை தனிமையில் அழ வைக்கும் என தெரியுமா?

nathan

ஆச்சரியப்படுத்தும் உண்மைகள்…ஆண்களால் புரிந்து கொள்ள முடியாத பெண்களின் 20 பழக்கங்கள்!!!

nathan

உடல் எடையைக் வேகமாக குறைக்க வேண்டுமா : நீங்களும் முயற்சி செய்யுங்கள்

nathan

பெண்களுக்கு வயது அதிகமாகும்போது 5 முக்கியஊட்டச்சத்துக்கள் ..

nathan

உங்க மென்மையான சருமத்திற்கு ஏற்ற மூலிகைகள் தெரியுமா!!!

nathan

பசியால் வரும் உடல்நலக்குறைபாடுகள்

nathan

வயிற்றில் உள்ள கெட்ட கொழுப்புக்களைக் கரைக்கணுமா?

nathan

ஆபத்தான கேன்சரையே குணப்படுத்தும் சக்திவாய்ந்த கடுகு -தெரிந்துகொள்வோமா?

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…பயன்படுத்திய எண்ணெயை மீண்டும் பயன்படுத்துவதால் உடலுக்கு ஏன் ஆபத்து வருகிறது?

nathan