25.6 C
Chennai
Wednesday, Jan 22, 2025
kothuparotta1%5B3%5D
சிற்றுண்டி வகைகள்

முட்டை கொத்து ரொட்டி

6 பேருக்கு போதுமானது
தேவையான பொருட்கள்
கோதுமை மா – 500கிராம்
உப்பு – அளவிற்கு
அப்பச்சோடா – 1/2 தே.க

தண்ணீர் – அளவிற்கு
தேங்காய் எண்ணெய் – 1 தம்ளர்
முட்டை – 6
சிறிதாக வெட்டிய வெங்காயம் – 5 மே.க
சிறிதாக வெட்டிய பச்சை மிளகாய் – 4 மே.க
மிளகு துாள் – அளவிற்கு
பெருஞ்சீரகத்துாள் – 1 தே.க

ரொட்டி தாயாரிப்பு

கோதுமை மாவையும் அப்பச்சோடாவையும் கலந்து அரித்து பாத்திரத்தில் இட்டு உப்பும் அளவிற்கு தண்ணீரும் 2 மே.க தே.எண்ணையும் விட்டு கையில் ஒட்டாத பதத்திற்கு நன்றாக அடித்து குழைத்து மெதுமையான பந்து போலாக்கி பாத்திரத்தில் வைத்து 2 மேசைக்கரண்டி தே.எண்ணையை மாப்பசை கலவையின் மேல் வி்ட்டு நன்றாக அதன் மேற்பரப்பு முழுவதும் புரட்டிகொண்ட பின்பு ஈரமான துணியால் மூடி1மணி நேரம் வரை வைத்துக்கொள்க.
பின்பு மாப்பசை கலவையை எடுத்து மீண்டும் மெதுமையாகும் வரை நன்றாக அடித்து 24 சம அளவான உருண்டைகளாகப்பிரித்து 2 உள்ளங்கை களிற்கும் இடையே வைத்து அழுத்தமாக ஒவ்வொரு உருண்டைகளையும் தே.எண்ணையில் தோய்த்தெடுத்து பாத்திரத்தில் அடுக்கி மீண்டும் மூன்று மணி நேரம் வரை வைத்துக் கொள்க.
பின்பு மா உருண்டைகளை ஒவ்வொன்றாக எடுத்து எண்ணை தடவிய தட்டில் வைத்து விரல்களால் மெதுவாக விரித்து தட்டி கொண்ட பின்பு அவ்விரித்த மாப்பசையை தட்டில் திருப்பி திருப்பி விசிறி விசிறிப் போட்டு ரிசு போல மெல்லியதாக வரும் வண்ணம் வீசிக்கொண்டபின்பு அதை முதலில் 2 ஆக மடித்து மீண்டும் மறுபடி வைத்துகொள்க ( விசிறி போல் மடிக்க சிரமமாக இருப்பின் உருளையால் ரிசு போல் மெல்லியதாக உருட்டி மேற்கொண்ட முறையில் மடித்துக் கொள்ளலாம்)
பின்பு தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் 1 தே.கரண்டி எண்ணையை பரவலாக ஊற்றித் தோசைக்கல் முழுவதும் புரட்டி இரண்டிரண்டாக ஒவ்வொருமுறையும் வைத்து இருபுறமும் திருப்பி போட்டு வாட்டி எடுத்து கொள்க
வாட்டிய ரொட்டிகளை சிறு சிறு துண்டுகளாக வெட்டி தனியாக 6 பகுதியாக வைத்து கொள்க
பின்பு முட்டைகளை உடைத்து பாத்திரத்தில் இட்டு வெட்டிய வெங்காயம் பச்சை மிளகாய் உப்பு துாள் மிளகுதுாள் பெருஞ்சீரகப்பொடி என்பவற்றை இட்டு கலந்து நன்றாக அடித்து வைத்து கொள்க.
மீண்டும் தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் 1 தே.க எண்ணையை விட்டு காயவைத்து அடித்த முட்டையில் 2 அல்லது 3 மே.க முட்டை கலவையை விட்டு மெதுவாக பரவி கொண்ட பின்பு சிறிதாக வெட்டிய ரொட்டியின் 1 பகுதியை அம்முட்டையின் மேலிட்டு கூரான விளிம்புடைய 2 கத்தியால் நன்றாக சேர்த்து கொத்தி முட்டையை ரொட்டியோடு நன்றாக சேர்த்து அவிந்து ரொட்டி உதிரும் பதமடைந்ததும் அள்ளியெடுத்து கொள்க. இவ்வண்ணம் மற்றைய பிரிவு ரொட்டிகளையும் தயாரித்து கொள்க .

குறிப்பு – இறைச்சி கொத்து தயாரிப்பதற்கு மேற்கூறிய முறையில் முட்டை கொத்து ரொட்டியை தயாரித்து இறைச்சி மசாலா கறி 3 கரண்டியளவு சேர்த்து கொத்தி பரிமாறி கொள்ளலாம்.
kothuparotta1%5B3%5D

Related posts

சீனி பணியாரம்

nathan

இஞ்சித் தொக்கு

nathan

ஃபுரூட் கேக்

nathan

பச்சைமிளகாய் காரச் சீடை

nathan

சத்து நிறைந்த பீன்ஸ் கோதுமை அடை

nathan

சத்தான மிளகு அடை

nathan

சுவையான சத்தான ஒட்ஸ் வெண்பொங்கல்

nathan

சூப்பரான மங்களூர் பன் ரெசிபி

nathan

வாழை இலை கொழுக்கட்டை

nathan