26.2 C
Chennai
Sunday, Nov 24, 2024
22 62763a76
ஆரோக்கிய உணவு

சிகப்பு நிற பழங்களை ஏன் சாப்பிட வேண்டும்?தெரிந்துகொள்ளுங்கள் !

ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் ஐந்து பழங்கள் சாப்பிடுவதற்கு பரிந்துரைக்கப்படுகிறது. பல்வேறு வண்ணங்களை கொண்ட பழங்களை உட்கொள்ள முயற்சிப்பது நல்லது.

ஏனென்றால், பழங்களின் நிறங்களை பொறுத்து அவற்றில் உள்ள ஊட்டச்சத்துக்கள் மாறுபடும். அவற்றுள் சிவப்பு நிற பழங்களை ஏன் சாப்பிட வேண்டும் என்பதை பார்க்கலாம்.

ஸ்ட்ராபெர்ரி:
போலேட், போலிக் அமிலம் நிறைந் திருக்கும் இது இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும்.

ஆன்டி ஆக்சிடென்டுகள், வைட்டமின் சியும் கொண்டிருப்பதால் நோய் எதிர்ப்பு மண்டல செயல்பாட்டையும் ஊக்குவிக்கும். கொழுப்பு நீக்கிய பால் மற்றும் தயிருடன் ஸ்ட்ராபெர்ரி பழங்களை கலந்தும் ருசிக்கலாம்.

சிகப்பு நிற பழங்களை ஏன் சாப்பிட வேண்டும்? வாழ்நாள் முழுவதும் நோயின்றி வாழலாம்

செர்ரி:
இந்த பழத்தில் அதிக அளவு நார்ச்சத்து உள்ளது. மேலும் வைட்டமின் சி, பொட்டாசியம் ஆகியவையும் நிரம்பப்பெற்றது.இது ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைத் திருக்க உதவுகிறது. செர்ரி பழங்களை உலர வைத்து ஆண்டு முழுவதும் பயன் படுத்தலாம்.

சிகப்பு நிற பழங்களை ஏன் சாப்பிட வேண்டும்? வாழ்நாள் முழுவதும் நோயின்றி வாழலாம்

திருமண தேதியை வெளியிட்ட நயன்தாரா… எங்கு திருமணம் செய்யப் போகிறார் தெரியுமா?

தர்பூசணி:
இது 92 சதவிகிதம் தண்ணீர் கொண்டது. வெப்பமான கோடை நாட்களில் உடலை நீரேற்றமாக வைத்திருக்க இது சிறந்த தேர்வாக அமையும்.

பீட்டா கரோட்டின், வைட்டமின் சி மற்றும் லைகோபீன் போன்ற ஆன்டி ஆக்சிடென்டுகளும் இதில் அதிகம் உள்ளன.

எல்.டி.எல். என்ற கெட்ட கொழுப்பைக் குறைக்க உதவும். இதன் மூலம் இதய நோய் அபாயத்தை தவிர்க்கலாம்.

மேலும் இது ரத்த நாளங்களின் செயல்பாட்டை மேம்படுத்தக்கூடியது. பக்கவாதம் ஏற்படும் அபாயத்தையும் குறைக்கக்கூடியது.

சிகப்பு நிற பழங்களை ஏன் சாப்பிட வேண்டும்? வாழ்நாள் முழுவதும் நோயின்றி வாழலாம்

மாதுளை:
இந்த பழத்தில் பாலிபினால்கள், ஆன்டிஆக்சிடென்டுகள் அதிகம் உள்ளன. அவை புற்றுநோய் மற்றும் இதய நோய்களை தடுக்கக்கூடியவை.

ஆய்வுகளின்படி, கிரீன் டீ மற்றும் ரெட் ஒயின் ஆகியவற்றை விட மாதுளையில் ஆன்டி ஆக்சிடென்டுகள் மூன்று மடங்கு அதிகம் உள்ளன.

சிகப்பு நிற பழங்களை ஏன் சாப்பிட வேண்டும்? வாழ்நாள் முழுவதும் நோயின்றி வாழலாம்

ராகுவின் பெயர்ச்சியால் பேரதிர்ஷ்டம்! ஒரு வருடத்திற்கு அமோகமாக மாறும் 3 ராசிகள்

கிரேப் புரூட்:
இளஞ்சிவப்பு நிற கிரேப் புரூட் பழத்தில் வைட்டமின் சி போன்ற ஆன்டி ஆக்சிடென்டுகள் உள்ளன. பெக்டினும் அதிகமாக உள்ள இது கொழுப்பைக் குறைக்க உதவுகிறது.

இளஞ்சிவப்பு அல்லது சிவப்பு நிற கிரேப் புரூட் பழத்தில் அதிக லைகோபீன் இருப்பதால் அவற்றை தேர்வு செய்வது சிறந்தது.

காலை உணவுடன் ஒரு கிரேப் புரூட் பழம் அல்லது ஒரு டம்ளர் கிரேப் புரூட் ஜூஸ் பருகலாம். பழ சாலட்டுகளிலும் கிரேப் பழங்களை சேர்த்து உட்கொள்ளலாம்.

மருந்து, மாத்திரை உட்கொள்பவர்கள் டாக்டரின் பரிந்துரையின் பேரிலேயே கிரேப் புரூட் பழத்தை சாப்பிட வேண்டும். ஏனெனில் அது மருந்துகளுடன் எதிர்வினை புரியக்கூடும்.

சிகப்பு நிற பழங்களை ஏன் சாப்பிட வேண்டும்? வாழ்நாள் முழுவதும் நோயின்றி வாழலாம்

ஆப்பிள்:
இதில் பாலிபீனால்கள், வைட்டமின் சி போன்றவை அதிகம் உள்ளன. ஒருவர் அதிக பாலி பீனால்கள் மற்றும் நார்ச்சத்து பெற விரும்பினால், ஆப்பிளின் தோல் பகுதியை நீக்கிவிடுவது நல்லது.

ஆப்பிளில் நார்ச்சத்து மற்றும் வைட்டமின் சி அதிகம் உள்ளது. ஆப்பிள்களில் நார்ச்சத்து அதிகம் இருப்பது பல்வேறு வழிகளில் எடை குறைப்புக்கு உதவும்.

சிகப்பு நிற பழங்களை ஏன் சாப்பிட வேண்டும்? வாழ்நாள் முழுவதும் நோயின்றி வாழலாம்

திராட்சை:
இதில் வைட்டமின் பி, ஏ மற்றும் நிறைய தண்ணீர் உள்ளது. இவற்றில் லுடீன், ஜியாசாந்தைன் போன்ற ஆன்டிஆக்சிடென்டுகள் அதிகம் உள்ளன.

சிவப்பு திராட்சை தோலில் உள்ள பைட்டோ கெமிக்கல் ரெஸ்வெராட்ரோல் என்னும் சேர்மம் பல நாள்பட்ட நோய்களில் இருந்து தற்காத்துக்கொள்ள உதவும்.

சிகப்பு நிற பழங்களை ஏன் சாப்பிட வேண்டும்? வாழ்நாள் முழுவதும் நோயின்றி வாழலாம்

பிளம்ஸ்:
இந்த பழத்தில் ஊட்டச்சத்துக்கள், வைட்டமின்கள், தாதுக்கள், நார்ச்சத்து மற்றும் ஆன்டி ஆக்சிடெண்டுகள் அதிகம் உள்ளன.

பல்வேறு நாள்பட்ட நோய் பாதிப்புகளை உருவாக்கும் அபாயத்தைக் குறைக்க இது உதவுகிறது.

Related posts

ஆரோக்கியத்தைத் தரும் கொத்தமல்லி தோசை

nathan

தெரிஞ்சிக்கங்க…பலருக்கு தெரியாத பேரிக்காயில் நிறைந்துள்ள நன்மைகள்!!!

nathan

எச் சரிக்கை ! உயிருக்கு உலை வைக்கும் பிராய்லர் மீன்கள்! தெரிஞ்சிக்கங்க…

nathan

இரத்தக் குழாய்களில் கொழுப்பு படிவதை தடுக்கும் ஆளி விதை

nathan

ஏன் காலை 9 மணிக்கு முன் எப்போதுமே காபி குடிக்கக் கூடாது?

nathan

சிறுநீரக கோளாறு, உடல் சூட்டை குறைக்கும் சுரைக்காய்

nathan

இதயம்… செரிமானம்… ரத்த சுத்திகரிப்பு… பெரும் பயன்கள் தரும் பெருஞ்சீரக டீ

nathan

ஆரோக்கியம் காக்கும் ஆவாரம்பூ கஷாயத்தின் மருத்துவ பயன்கள்…!!தெரிந்துகொள்வோமா?

nathan

வாயு தொல்லை இருந்து விடுபட பூண்டு களி

nathan