25.6 C
Chennai
Wednesday, Jan 22, 2025
one 706
ஆரோக்கியம் குறிப்புகள்

1ம் எண்ணில் பிறந்தவர்களின் பொதுவான குணங்கள் -தெரிந்துகொள்ளுங்கள் !

எல்லா எண்களுக்கும் இந்த ஒன்றாம் எண்ணே தலைமை வகிக்கிறது. நமது சூரியக் குடும்பத்தின் தலைவனான சூரியன்தான் இதனை ஆட்சி செய்கிறார். இந்த எண்ணில் பிறந்தவர்கள் பழகுவதற்கும், பார்வைக்கம் கம்பீரமானவர்கள். தன்னம்பிக்கை இவர்களிடம் அதிகம் இருக்கும். இவர்கள் மற்றவர்களைக் கடுமையாக வேலை வாங்குவார்கள். ஆனால் அதே சமயம் மனித நேயத்துடனும் அவர்களுடன் நடந்து கொள்வார்கள். மற்றவர்களிடம் எதையும் எதிர்பார்க்க மாட்டார்கள். தங்களின் பிரச்சினைகளைக் கூடத் தாங்களே சமாளித்துக் கொள்ளும் திறமையுடையவர்கள். அடுத்தவர்களுடன் விவாதித்தால் கௌரவம் போய்விடும் என்று நினைப்பவர்கள்.

அரசியல் அல்லது அரசு சார்ந்துள்ள தொழில்கள், உத்தியோகங்கள் இவர்களுக்கு நிச்சயம் ஏற்படும். 1 எண் ஆதிக்கம் நன்கு அமைந்திருந்தால், (பெரும்பாலும்) இவர்கள் அரசியலில் பெரும் செல்வாக்குடன் விளங்குவார்கள். ஆனால் நாணயமான அரசியல்வாதிகள் என்று பெயர் எடுப்பார்கள். (இந்த எண்காரர்கள் மட்டும்தான்). மற்றவர்கள் அரசியலில் ஈடுபட்டால் சுயநலமும், பண வேட்கையும் அதிகமாகக் கொண்டு இருப்பார்கள். அதிகாரம் காண்பிப்பதில் இவர்கள் மிகவும் ஆசை கொண்டவர்கள். மற்றவர்களால் மதிக்கப்படுவார்கள். கடின உழைப்பும், கண்டிப்பான நடத்தையும் இவர்களைத் தலைமை ஸ்தானத்திற்குக் கொண்டு செல்லும்.

 

மனதில் ஊக்கமும், எதையும் தாங்கும் மனோபலமும் கொண்டவர்கள். தோல்வி ஏற்படுவதைத் தாங்கிக் கொண்டு மீண்டும் மீண்டும் மனத் துணிவுடனும், புதிய திட்டத்துடனும் சலிக்காமல் செயலாற்றுவார்கள். புதிய செய்தியினை ஆராய்வதில் மகிழ்ச்சியடைவார்கள். நேர்மையான முறையிலேயே எதையும் அடைய வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள். தாங்கள் உடுத்தும் உடைகள் மற்றும் அணியும் பொருள்கள் மிகவும் மதிப்பாகத் தெரிய வேண்டும் என்று அதற்காகச் செலவு செய்வார்கள். மன மகிழ்ச்சிக்காக தாராளமாகச் செலவு செய்யத் தயங்காதவர்கள்.

 

தாங்கள் உதவுவதைக் கூட வெளிப்படையாகச் சொல்லி விளம்பரம் அடைய ஆசைப்பட மாட்டார்கள். சூரிய புத்திரன் கர்ணன் இவரது ஆதிக்கம் நிறைந்தவர்கள். எதிரியுடன் நேரடியாகப் போரிட்டு வெற்றி பெற வேண்டும் என்று விரும்புவார்களே தவிரக் குறுக்கு வழியைத் தேட மாட்டார்கள். இதனால்தான் சகுனியின் சதித் திட்டங்களை எல்லாம் கர்ணன் எதிர்த்துக் கொண்டே இருந்தான். தங்களின் இரக்க குணத்ததால் பல பிரச்சினைகளையும் சந்திப்பார்கள். ஆனால் நல்ல பெயரும் புகழும் நிச்சயம் அடைவார்கள். ‘‘இவர்தான் எனது நண்பன், இவர்தான் எனது எதிரி’’ என்று எதையும் மறைத்து வைக்காமல் கூறி விடுவார்கள்.

 

மிகுந்த ரோஷமும், எதையும் எடை போடும் குணமும் உண்டு. வாக்குறுதி கொடுத்துவிட்டால் எப்பாடு பட்டாவது அதை நிறைவேற்றுவார்கள். பொதுவாகச் சோம்பேறித் தனமும், பொறாமையும் இவர்களுக்கு பிடிக்காது. அடுத்தவர் பொருட்களையும் சொத்துக்களையும் தீயென வெறுத்து ஒதுக்கி விடுபவர்கள் இவர்களே. படிப்பறிவை விடப் பட்டறிவு (அனுபவம்) அதிகம் உண்டு. இந்த எண் சுறுசுறுப்பையும், படிப்பில் ஆர்வத்தையும் கொடுக்கும். மலை வாசஸ்தலங்களும், பெரும் பயணங்களும் இவர்களுக்கு மிகவும் பிடிக்கும்.

எந்த வாணிகத்திலும், நேர்மையையும், வாக்குறுதியையும் கடைப்பிடிப்பார்கள். இலாபத்திற்காகத் தங்களது மனச்சாட்சியை ஒதுக்க மாட்டார்கள். தேவையானால் பெருந்தன்மையுடன் மற்றவர்களுக்கு விட்டுக் கொடுத்து விடுவார்கள். ஆனால் மற்றவர்கள் அலட்சியம் செய்தால் மட்டும் இவர்களால் தாங்க முடியாது. அவர்களை உண்டு அல்லது இல்லை எனச் செய்து விடுவார்கள். ஆனால் நேர்மையான வழியில்தான் நடப்பார்கள். பிறருக்குத் தீங்கு செய்ய மாட்டார்கள். எப்பேர்ப்பட்ட எதிரியும், நேராக வந்து மன்னிப்புக் கேட்டால், உடனே மன்னிக்கும் மாண்பு படைத்தவர்கள். மீண்டும் அவர்களுக்கு உதவியும் செய்வார்கள். பொதுவாகத் திருமணம் காலம் கடந்தே நடைபெறும்.

 

காதல் விஷயங்களில் ஈடுபாடு ஏற்படும் என்றாலும், ஏமாறாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். மனைவிக்கும், நேரம் ஒதுக்கி, அவளை மகிழ்ச்சியாக வைத்திருக்க வேண்டும். அரசியலில் வெற்றி பெற, ஒரு புகழ்பெற்ற கட்சியோ, அல்லது இயக்கமோ இவர்களுக்குத் தேவை. காரணம் மக்களை ஆசை காட்டி ஏமாற்றும் வித்தைகள் இவர்களுக்குத் தெரியாது. பொதுமக்களுக்கு உண்மையான மனத்துடன் துணிந்து நன்மைகளைச் செய்வார்கள். பொதுமக்களுக்கு உண்மையான மனத்துடன் துணிந்து நன்மைகளைச் செய்வார்கள். மக்களுக்குப் பிடிக்காத செயல்களையும், மக்களின் பிற்கால நன்மைகளுக்காகத் துணிந்து காரியங்களைச் செயல்படுத்துவார்கள். எண்ணின் பலம் குறைந்தால் மேற்சொன்ன பலன்கள் மாறுபடும். சோதிடம், ஆன்மீகம், வைத்தியம் போன்ற கலைகளில் ஈடுபடும் உண்டாகும். தனிமையில் அதிகமாகச் சிந்திக்கவும், செயலாற்றவும் விரும்புவார்கள்.

உடல் அமைப்பு

 

நடுத்தரமாக உயரம், கம்பீரமான பார்வை, எடுப்பான நெற்றியும் உண்டு. நீண்ட தோள்களும் நன்கு வளைந்த புருவமும் உண்டு. உறுதியான பற்கள் உண்டு. ஆண்தன்மை உடைய தோற்றம் உண்டு. நடையில் ஒரு கம்பிரம் காணப்படும். பெண்களாக இருந்தால் ஓரளவு ஆணாதிக்க உடல் அமைப்பும், குணங்களும் உண்டு. கணவனைத் தனது ஆதரவிற்குள் கொண்டு வருவார்கள். அவரை நல்ல வழியில் உயர்த்தி விடுவார்கள். அன்பையும், கடினமாகவே காட்டுவார்கள். நல்ல தலைமுடியும் உண்டு. கண்களில் கூச்சம், பார்வைக் கோளாறுகள் ஏற்பட வாய்ப்பு உண்டு. சதைப்பிடிப்பான தோற்றம் உண்டு. அடிக்கடி தலைவலி ஏற்படும்.

Related posts

உடல்வலி குறைய.. மட் தெரப்பி…

nathan

இத படிங்க அல்சர் வருவதற்கான முக்கிய காரணங்கள் என்ன….?

nathan

சுவையான மட்டன் சில்லி ரோஸ்ட்

nathan

பெண்களே வயிற்றில் இருக்கும் கொழுப்பை சட்டென கரைக்க வேண்டுமா?

nathan

இதோ எளிய நிவாரணம்! குறட்டை பிரச்சனையில் இருந்து விடுபட சில வீட்டுமுறை வைத்தியம்…

nathan

தோசைக்கல்லில் ஓட்டிக் கொள்ளாமல், புண்டு போகாமல் மொறுமொறுவென்று ருசியான முழுமையான‌ தோசை

nathan

இதை படியுங்கள்…திடீரென உடல் எடை கூடுவதற்கு சில காரணங்கள்!!

nathan

தெரிஞ்சிக்கங்க…ஏன் குழந்தை பிறக்கும்போதே அதிக முடியுடன் பிறக்கிறது தெரியுமா?

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க… உடல் பிரச்சனைகளை தீர்க்கும் கல்யாண முருங்கை

nathan