வாழைத் தண்டு பல்வேறு விதங்களில் மனிதர்களுக்கு உதவுகின்றது.
சித்த மருத்துவத்தில் இது பயன்படுத்தப்படுகிறது. வாழைத் தண்டு பொதுவாக சிறுநீரகக் கல் பிரச்சனை உள்ளவர்களுக்கு சிறந்த தீர்வாக இருக்குமென்று சொல்வார்கள்.
இது உடல் எடையை குறைப்பதிலும் சிறந்த பங்கு வகிக்கின்றது. இந்த வாழைத் தண்டை சூப் செய்து குடிக்கும் போது அது உடல் எடை குறைத்தல் மற்றும் சிறுநீரகக் கல் முதலியவற்றுக்கு சிறந்த பலனளிக்கும். இந்த வாழைத் தண்டு சூப் எப்படி செய்வது என்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
வாழைத் தண்டு – ஒரு துண்டு
கொத்தமல்லி – 1/2 கட்டு
மிளகுத்தூள் – ஒரு ஸ்பூன்
சீரகத்தூள் – ஒரு ஸ்பூன்
தேவையான அளவு உப்பு
செய்முறை
* வாழைத் தண்டு மற்றும் கொத்தமல்லியை முதலில் நன்றாக நறுக்கி கொள்ளவும்.
* நறுக்கிய வாழைத் தண்டு மற்றும் கொத்தமல்லியை சிறிதளவு தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும்.
* அரைத்த வாழைத் தண்டு மற்றும் கொத்தமல்லியுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து அதை வடிகட்டவும்.
* வடிகட்டியதை 10 நிமிடம் மிதமான வெப்பத்தில் கொதிக்க வைக்கவும்.
* கொதித்தவுடன் அதனுடன் உப்பு, மிளகுத்தூள் மற்றும் சீரகத்தூள் கலந்து இறக்கி பரிமாறலாம்.
* இந்த வாழைத் தண்டு சூப்பை வாரம் இரண்டு முறை வீட்டிலே தயார் செய்து குடித்து வந்தால் உடல் எடை குறைத்தலில் நல்ல முன்னேறம் தெரியும்.
* சிறுநீரகக் கல்லை கரைப்பதற்கும் இந்த சூப்பை அருந்தலாம்.