இன்றைய நவீன வாழ்க்கை முறையில், தவறான உணவுப் பழக்கவழக்கங்களால் நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இதனால், அவர்கள் தங்கள் உணவு மற்றும் பானங்களில் தொடர்ந்து சிறப்பு கவனம் செலுத்த வேண்டியது உள்ளது. அந்த வகையில், நீரிழிவு நோயாளிகள் பீனட் பட்டர் சாப்பிட வேண்டும் என பலர் பரிந்துரை செய்து வருகின்றனர்.
ஆனால், அதே சமயம் இதை சாப்பிடக்கூடாது எனவும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
நீரிழிவு நோயாளிகள் பீனட் பட்டர் சாப்பிடலாமா?
பீனட் சாப்பிடுவதால், தீங்கு ஏதுவும் விளைவிக்காது, ஆனால் அதிகமாக சாப்பிடுவதால், உங்கள் ஆரோக்கியம் மோசமடையக்கூடும்.
அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் பீனட் பட்டரை குறைந்த அளவில் உட்கொள்ள வேண்டும்.
சர்க்கரை நோய் வாழ் நாளில் வரக்கூடாதா? இந்த கசாயத்தை அடிக்கடி குடிங்க…ஓடிடும்!
சர்க்கரை நோயாளிகளை பாதுகாக்கும் பீனட் பட்டர்.. சாப்பிட்டால் என்ன ஆகும்?
சொல்லப்போனால், பீனட் பட்டரில் உள்ள பண்புகள் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த பயனுள்ளதாக கருதப்படுகிறது.
ஆனால், மருத்துவருடன் கலந்தாலோசித்த பின்னரே பீனட் பட்டரை உட்கொள்ள வேண்டும்.
பீனட் பட்டரின் நன்மைகள்
பீனட் பட்டர் இதயத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. மேலும், நீரிழிவு நோயின் அபாயத்தை 30 சதவீதம் வரை குறைக்கும் என நம்பப்படுகிறது.
உங்கள் உடலுக்கு இரும்பு மற்றும் கால்சியத்தை வழங்குவதில் பீனட் பட்டர் முக்கிய பங்கு வகிக்கிறது.