28.1 C
Chennai
Saturday, Nov 16, 2024
10 154
மருத்துவ குறிப்பு

மூக்கடைச்சு இப்படி நமநமன்னு இருக்கா? இதோ வீட்டு வைத்தியம் இருக்கே…

குழந்தை என்று வந்து விட்டாலே அதன் உடல் நலத்தை கவனிக்க அதன் மீது சிறப்பு கவனம் செலுத்த வேண்டியிருக்கும். அதிலும் உங்கள் குழந்தையின் நோயெதிர்ப்பு சக்தி வலிமை இல்லாமல் இருந்தால் அடிக்கடி அவர்களுக்கு ஜலதோஷம், மூக்கடைப்பு போன்ற பிரச்சினைகள் ஏற்படும்.

home remedies to treat baby blocked nose
மூக்கடைப்பு அல்லது மூக்கு ஒழுகுதல் போன்றவை உங்கள் குழந்தையை அசெளகரியமாக இருக்க வைத்து விடும். இதனால் குழந்தைகள் அழுது நமக்கு தொந்தரவு கொடுக்க ஆரம்பித்து விடுவார்கள்.

மூக்கடைப்பு

ஏன் இந்த மூக்கடைப்பு பிரச்சினை உங்கள் குழந்தையின் உணவு மற்றும் தூக்கத்தை கூட கெடுக்க ஆரம்பித்து விடும். இதனால் நம்மாலும் நிம்மதியாக இருக்க முடியாது. குழந்தைக்கு ஒன்று என்றால் நம்மால் தாங்கவும் முடியாது. முதலில் உங்கள் குழந்தைக்கு மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் மருந்து கொடுப்பதை தவிருங்கள். அப்படி நீங்கள் செய்யாவிட்டால் குழந்தைக்கு பக்க விளைவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. இந்த மாதிரியான மூக்கடைப்பு பிரச்சினைக்கு நாம் சில இயற்கை பொருட்களைக் கொண்டே சரிசெய்து விட முடியும்.

 

மூக்கடைப்பு பிரச்சினையின் அறிகுறிகள்

மூச்சு விடும் போது சத்தம் கேட்குதல் அல்லது சிரமப்படுதல்

குறட்டை

மூக்கு ஒழுகுதல்

தும்மல்

மூக்கு ஒழுகுதல்

குழந்தைகள் மட்டும் ஏன் அடிக்கடி இதனால் பாதிக்கப்படுகிறார்கள்?

குழந்தைகள் வளர்கின்ற பருவத்தில் இருப்பதால் அவர்களின் நோயெதிர்ப்பு மண்டலமும் சரியாக வளர்ச்சி அடையாமல் இருக்கும். இதனால் அவர்களுக்கு அடிக்கடி சளி, மூக்கடைப்பு போன்ற பிரச்சினைகள் ஏற்படும்.

சளி

மூக்கடைப்பு ஏற்பட சளி தான் முக்கிய காரணமாகிறது. வித விதமான வைரஸ்கள் உங்களுக்கு அழற்சியை ஏற்படுத்தி இந்த மூக்கடைப்பு பிரச்சினையை ஏற்படுத்துகின்றன. இதனால் அதிகமான சளி மூக்கில் உற்பத்தி ஆக ஆரம்பிக்கிறது.

அழற்சி காரணிகள்

நிறைய அழற்சி காரணிகள் இந்த மூக்கடைப்பு பிரச்சினைக்கு காரணமாகின்றன. குழந்தைகள் சாப்பிடும் உணவு, பூவில் உள்ள மகரந்தம் போன்றவை கூட அழற்சிக்கு காரணமாகலாம். இந்த அழற்சியின் காரணமாக மூக்கில் சளி உற்பத்தியாகி ஒழுக ஆரம்பிக்கிறது. இந்த சளி அப்படியே சுற்றுப்புறத்தில் உளள காற்றால் வறண்டு போய் மூக்கடைப்பு பிரச்சினையை ஏற்படுத்தி விடும்.

சளிக்காய்ச்சல்

இந்த சளித் தொல்லையால் பிறகு குழந்தைகளுக்கு காய்ச்சல் வர ஆரம்பித்து விடும். இந்த இன்புலன்ஷா வைரஸ் குழந்தையின் மூக்கை மட்டும் தாக்காமல் தொண்டை, நுரையீரல் போன்ற பகுதிகளையும் தாக்க ஆரம்பித்து விடும்.

பாலிப்ஸ்

பாலிப்ஸ் அதிகப்படியான சளி தொல்லையை கூறுகிறது. இந்த மாதிரியான நிலையில் குழந்தைக்கு மூக்கிலிருந்து சளி ஒழுக ஆரம்பித்து விடும்.

 

சைனஸ், தொண்டை புண் மற்றும் அடினோய்ட்ஸ்

சைனஸ் என்பது மூக்கில் உள்ள காற்று நிரப்பப்பட்ட பையாகும். தொண்டை, அடினோய்ட்ஸ் போனற லிம்போடிக் திசுக்கள் மீது பாதிப்புகளை ஏற்படுத்த ஆரம்பித்து விடும். இந்த அழற்சி வைரஸால் சைனஸ் பகுதி சளியால் நிரப்பப்பட்டு, தொண்டை புண், அடினோய்ட்ஸ் போன்ற தொந்தரவுகளும் ஏற்பட ஆரம்பித்து விடும். இதனால் உங்கள் குழந்தைக்கு மூக்கடைப்பு போன்ற பிரச்சினைகள் ஏற்படும்.

வீட்டு குறிப்புகள்

இந்த மூக்கடைப்பு பிரச்சினைக்கு சில வீட்டு குறிப்புகள் தீர்வளிக்கின்றன. அதைப் பற்றி இப்பொழுது நாம் பார்க்கலாம்.

குளிர்ந்த ஈரப்பதமூட்டி

முதலில் இந்த மூக்கடைப்பை போக்க அங்கே இருக்கும் காய்ந்த சளிகளை சுத்தம் செய்ய வேண்டும். இதற்கு ஈரப்பதம் அங்கே இருக்கும் வறண்ட சளிகளை போக்க உதவியாக இருக்கும். இந்த சமயங்களில் உங்கள் குழந்தையை ஈரப்பதமான காற்று இருக்கும் சுற்றுவெளி பகுதிக்கு அழைத்து செல்லலாம். அப்படி இல்லையென்றால் உங்கள் குழந்தையின் அறைகளில் குளிர்ந்த காற்று கருவியை பொருத்தலாம். அதே நேரத்தில் ஒரு பக்கெட்டில் வெதுவெதுப்பான நீரை உங்கள் குழந்தை தூங்காத சமயத்தில் வைக்கலாம். இதுவும் உங்களுக்கு ஒரு நல்ல தீர்வளிக்கும். இந்த ஈர்ப்பத சூழ்நிலை உங்கள் குழந்தைக்கு ஏற்பட்டுள்ள மூக்கடைப்பை போக்க உதவும்.

சொட்டு மருந்து

உங்கள் மூக்கடைப்பு பிரச்சினைக்கு சொட்டு மருந்து கூட இடலாம். இதன் ஆன்டி பாக்டீரியல் தன்மை மூக்கடைப்புக்கு காரணமான வைரஸை அழிக்கிறது. இதனால் இருமல் மற்றும் சளியை கூட குணப்படுத்தி விடலாம். இந்த சொட்டு மருந்தை நீங்கள் வீட்டிலேயே தயாரித்தோ அல்லது கடைகளில் வாங்கியோ பயன்படுத்தலாம்.

தயாரிக்கும் முறை

230 மில்லி லிட்டர் வெதுவெதுப்பான நீரில் 1/4 டீ ஸ்பூன் உப்பு சேர்த்து பயன்படுத்தலாம். இதை நன்றாக கலந்து சரியான வெப்பநிலையில் கலக்கவும். இந்த சொட்டு மருந்தை உங்கள் குழந்தையின் மூக்கில் 2-3 சொட்டுகள் விடலாம். இந்த சொட்டு மருந்து சுவாச பாதையில் உள்ள சளியை இளக்கி வெளியேற்றி விடும்.

 

 

தாய்ப்பால்

தாய்ப்பால் குழந்தைக்கு அரும் பெரும் மருந்தாக செயல்படுகிறது என்று ஆய்வறிக்கைகள் தெரிவிக்கின்றன. இந்த தாய்ப்பாலில் உள்ள ஆன்டி பாடிகள், ஊட்டச்சத்துகள் போன்றவை உங்கள் குழந்தையின் வலுமைக்கும், நோயெதிர்ப்பு சக்திக்கும் மட்டுமல்லாமல் உங்கள் குழந்தையின் சளி இருமலுக்கும் மருந்தாக பயன்படுகிறது. குழந்தைக்கு ஏற்படும் மூக்கடைப்பை தாய்ப்பாலை க் கொண்டு இரண்டு வழிகளில் சரி செய்யலாம்.

பயன்படுத்தும் முறை

1. முதலில் குழந்தையின் தலையை சற்று உயரமாக வைத்துக் கொண்டு மூக்கில் இரண்டு தாய்ப்பால் சொட்டுகள் விடலாம். பிறகு குழந்தையை தூக்கி வைத்துக் கொள்ளுங்கள்.

2. மூக்கடைப்பால் குழந்தை சரியாக பால் குடிக்காது. இருப்பினும் பொறுமையாக அவர்களுக்கு தாய்ப்பால் கொடுத்து வாருங்கள். இது உங்கள் குழந்தையை போதுமான நீர்ச்சத்துடனும் ஆரோக்கியமாக வைத்திருக்கவும் உதவும்.

நாசல் அஸ்பியேட்டர்

நாசல் அஸ்பியேட்டர் இப்பொழுது நிறைய வடிவங்களில் கடைகளில் கிடைக்கிறது. நாசல் அஸ்பியேட்டர் எளிதாக மூக்கில் உள்ள சளியை உறிஞ்சி வெளியேற்ற உதவும். இது பார்ப்பதற்கு பல்ப் வடிவத்தில் பெரிதாக சிறிய துளை கொண்டு வடிவமைக்கப்பட்டு இருக்கும். இது சளியை உறிஞ்சி கொள்ள உதவும். ஒரு தடவை பயன்படுத்திய பிறகு வெதுவெதுப்பான நீரில் கழுவி பயன்படுத்துங்கள். உங்கள் குழந்தையின் அஸ்பியேட்டர் கருவியை மற்ற எவருக்கும் பயன்படுத்தாதீர்கள்.

வெதுவெதுப்பான ஜூஸ்

உங்கள் குழந்தைக்கு ஆறு மாதங்கள் தான் என்றால் இந்த முறையை நீங்கள் பின்பற்றலாம். இந்த வெதுவெதுப்பான ஜூஸை கொடுக்கும் போது சளி இளகி தொண்டை யின் வழியாக வெளியேற்றப்பட்டு விடும். அதே நேரத்தில் இது உங்கள் குழந்தையின் நீர்ச்சத்தையும் பாதுகாக்கும்.

 

வெதுவெதுப்பான நீர், லெமன், தேன்

உங்கள் குழந்தைக்கு சளி பிடித்த நேரத்தில் அவர்களை போதுமான நீர்ச்சத்துடனும் வைத்திருக்க வேண்டும். 1 கப் நீருடன் லெமன், தேன் கலந்து கொள்ளுங்கள். 1 கப் நீரை சூடாக்கி அதில் 1/2 லெமன், 1 டேபிள் ஸ்பூன் தேன் சேர்த்து நன்றாக கலக்கவும். இந்த நீரை அரை மணி நேரத்திற்கு ஒரு முறை என உங்கள் குழந்தைக்கு கொடுத்து வாருங்கள்.

கடுகு எண்ணெய், பூண்டு, வெந்தயம்

1/4 கப் கடுகு எண்ணெய், சில பூண்டு பற்கள் மற்றும் வெந்தய விதைகள் போட்டு நன்றாக காய்ச்சி ஆற வைத்துக் கொள்ளுங்கள். இந்த எண்ணெய்யை உங்கள் குழந்தையின் நெஞ்சு, முதுகுப் புறம் தடவி வாருங்கள். மீதமுள்ள எண்ணெயை ஒரு டப்பாவில் அடைத்து வையுங்கள்.

கெகோமில் டீ

உங்கள் குழந்தைக்கு ஆறு மாதங்கள் என்றால் கெகோமில் டீ கொடுக்கலாம். இது சளித் தொல்லையை போக்கும். இந்த டீ சளிக்கு மட்டுமல்லாமல் நிறைய பயன்களை தருகிறது. சீரண சக்தியை அதிகரிக்கிறது, நோய் தொற்றை தடுக்கிறது, நன்றாக தூக்கத்தை தருகிறது.

வெதுவெதுப்பான நீர்

கடினமான சளியை வெதுவெதுப்பான நீரைக் கொண்டு போக்குதல் சிறந்த பலன் தரும்.

மூக்கு ஒழுகுதல் என்பது பெரிய பிரச்சினை ஆகும். இந்த சளி அப்படியே வறண்டு போய் மூக்கை அடைத்து பெரிய தொல்லையை ஏற்படுத்தும். ஒரு காட்டன் பஞ்சை எடுத்து அதை வெதுவெதுப்பான நீரில் நனைத்து மூக்கை சுத்தம் செய்யுங்கள். இப்படி செய்வதன் மூலம் தேவையில்லாமல் மூக்கை குடைவதை தடுத்து காயங்கள் ஏற்படுவதை தடுக்கலாம்.

முதுகை தேய்த்து விடுதல்

உங்கள் குழந்தையின் லேசாக தட்டி விடுதலின் மூலம் நெஞ்சிலிருக்கும் சளியை போக்கலாம். இப்படி தட்டி விடுவது குழந்தையின் இருமல் மூலமாக சளியை வெளியேற்ற உதவும். குழந்தையை மடியில் உட்கார வைத்து குழந்தையின் முதுகில் லேசாக தட்டி இதைச் செய்யுங்கள்.

யூகாப்லிப்ட்ஸ் எண்ணெய்

யூகாப்லிப்ட்ஸ் எண்ணெய் மார்பக சளியை போக்க பெரிதும் பயன்படுகிறது. இந்த ஆயில் குழந்தைக்கு ஏற்படும் தலைவலி, சளி போன்றவற்றை போக்குகிறது. இந்த ஆயிலை அதிகமாக தடவாமல், லேசாக சில சொட்டுகள் தெளிக்கலாம்.

 

தலையணையை வைத்து படுக்க வையுங்கள்

சளி பிடித்த சமயங்களில் உங்கள் குழந்தையின் தலையை சற்று உயரமாக வைத்து தலையணையை வைத்து படுக்க வையுங்கள். தலையணை இல்லாமல் படுக்க வைக்கும் போது மூக்கிற்கு சளி வந்து மேலும் சிரமத்தை உண்டாக்கும். எனவே தலையணையை வைத்து படுக்க வையுங்கள் குழந்தைக்கு செளகரியமாக இருக்கும்.

ஆவி பிடித்தல்

சளி பிடித்த சமயங்களில் ஆவி பிடித்தலும் உங்கள் குழந்தைக்கு நல்ல பலனை தரும். இதை தொடர்ந்து செய்யும் போது சுவாச பாதை சுத்தமாகி சளி வெளியேறி விடும்.

வெதுவெதுப்பான குளியல்

வெதுவெதுப்பான குளியல் எல்லாருக்கும் உதவும். எனவே குழந்தைக்கு சளி பிடித்த சமயங்களில் வெதுவெதுப்பான நீரில் குளிக்க வையுங்கள். இது சளி இளகி வெளியேற உதவும்.

நீராவி அறை

சளியை வெளியேற்ற முதலில் ஈரப்பதத்தை உண்டாக்க வேண்டும். எனவே உங்கள் குழந்தையின் அறையில் நீராவியை உண்டாக்கி விடலாம். நீராவி குளியல் கூட நல்ல பலனை கொடுக்கும்.

பூண்டு மற்றும் சீரக விதைகள்

குழந்தைக்கு ஏற்பட்ட சளியை போக்க சில பூண்டுப் பற்களை வறுத்து அதில் சில ஓம விதைகளை போட்டு வறுங்கள். இந்த வறுத்த வாசனையை குழந்தையை நுகர வையுங்கள். இதை ஒரு துணியில் கட்டி அப்போ அப்போ நுகர செய்யலாம். இதுவும் சளி இருமலுக்கு நல்ல பலன் அளிக்கும்.

துளசி தண்ணீர்

துளிசி சளிக்கு சிறந்த மருந்தாகும். இதன் சாறு வைரஸ் மற்றும் பாக்டீரியா தொற்றை எதிர்த்து போரிடுகிறது.சில துளிசி இலைகளை தண்ணீரில் போட்டு நன்றாக கொதிக்க வையுங்கள். இந்த தண்ணீரை 2 ஸ்பூன் அளவு கொடுத்து வாருங்கள். நல்ல பலன் கிடைக்கும்.

 

வறுத்த மஞ்சள்

மஞ்சள் நமக்கு ஏற்படும் சளி, இருமல், தொற்று மற்றும் காய்ச்சல் எல்லாவற்றையும் போக்கும். எனவே மஞ்சள் கிழங்கை கடைகளில் வாங்கி வறுத்து பொடியாக்கி கொள்ளுங்கள். அந்த பவுடருடன் சில துளிகள் தண்ணீர் அல்லது பால் சேர்த்து குழப்பங்கள். இந்த பேஸ்ட்டை உங்கள் குழந்தையின் மூக்கின் மீது தடவுங்கள். இது உங்கள் மூக்கடைப்பை சிறந்த முறையில் போக்கும்.

எஸன்ஷியல் ஆயில்

எஸன்ஷியல் ஆயில் வெவ்வேறு விதமான நோய்களை குணப்படுத்த பயன்படுகிறது. இருமல், சளி போன்றவற்றை போக்குகிறது. ஷீடர்உட் ஆயில், ரோஸ் மேரி எண்ணெய், கிராம்பு, தைலம் போன்றவற்றை கொண்டு குழந்தைக்கு ஏற்படும் சளியை போக்கலாம்.

மருத்துவரை எப்போது அணுக வேண்டும்

3 வாரங்கள் ஆகியும் உங்கள் குழந்தையின் சளி போக வில்லை என்றால் நீங்கள் மருத்துவரை அணுகுவது நல்லது. கழுத்தை 3-6 மாதங்கள் இருந்தால் உடனே மருத்துவரை அணுகுங்கள். தொடர்ச்சியான இருமல், தொண்டை அழற்சி இருந்தாலும் உடனே மருத்துவரை அணுகுங்கள்.

Related posts

தெரிந்துகொள்வோமா? குழந்தைகளுக்கு வரும் வயிற்று வலிக்கான சில வீட்டு வைத்தியங்கள்!

nathan

சாப்பிட்ட வயிற்றுக்கு இதமளிக்கும் எளிய மருத்துவங்கள் இங்கே…!

nathan

கண் கட்டி மற்றும் விஷத்தை விரட்டும் நெல்லிக்கனியின் அருமை உங்களில் எதனை பேருக்கு தெரியும்?

nathan

வெண்புள்ளி போன்ற நோய்களுக்கு குணம்தரும் கண்டங்கத்திரி!!சூப்பரா பலன் தரும்!!

nathan

மருத்துவர் கூறும் தகவல்கள்! கர்ப்பப்பை பிரச்சினையால் குழந்தை பெற்றுக்கொள்ள முடியவில்லையா? இதோ அதற்கு ஒரே தீர்வு

nathan

இருமல் கொரோனாவின் அறிகுறியா?!’ – சளிக் காய்ச்சலுக்கும் கொரோனாவுக்கும் உள்ள வேறுபாடுகள்

nathan

இதில் நீங்கள் எந்த வகை தலைவலியால் அவஸ்தைப்படுகிறீர்கள்? அதற்கு காரணம் என்ன தெரியுமா?

nathan

ஈறுகளில் இரத்தம் கசிகிறதா? இதோ அதைத் தடுக்க சில கைவைத்தியங்கள் !

nathan

உங்களுக்கு தெரியுமா தைராய்டினால் ஏற்படும் எடை அதிகரிப்பை குறைக்க எளிய வழிமுறைகள்!

nathan