29.6 C
Chennai
Thursday, Mar 12, 2026
1443601005 0056
செட்டிநாட்டுச் சமையல்

செட்டிநாடு மட்டன் குழம்பு விரிவான செய்முறை

செட்டிநாடு மட்டன் குழம்பு செய்வது என்பது பலருக்கும் கடினமான ஒன்றாகும். காரணம் அது மிகவும் துல்லியமான செய்முறை மற்றும் பிரத்யேகமான மசாலா தூள் கொண்டது. ஆனால் அதன் சுவைக்கு வேறு எதுவும் ஈடு இணை இல்லை எனலாம். இந்த சுவையான செட்டிநாடு மட்டன் குழம்பு செய்வது எப்படி என்பதை விரிவாக இங்கு பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

* மட்டன் – 1/2 கிலோ
* சின்ன வெங்காயம் – 20
* தக்காளி – 2
* பூண்டு – 10 பல்
* இஞ்சி பூண்டு விழுது – 1 தேக்கரண்டி
* தேங்காய் துருவியது – 3 மேசைக்கரண்டி
* கசகசா – 1 தேக்கரண்டி
* மசாலா தூள் – 2 மேசைக்கரண்டி
* மல்லித்தூள் – 1 மேசைக்கரண்டி

மசாலா தூள் தயார் செய்வது

* தனியா – 2 மேசைக்கரண்டி
* வரமிளகாய் – 8
* சோம்பு – 1 தேக்கரண்டி
* சீரகம் – 1 தேக்கரண்டி
* பட்டை – சிறு துண்டு
* ஏலக்காய் – 2
* கிராம்பு – 2
இவற்றை எண்ணெய் ஊற்றாமல் வதக்கி, பொடியாக அரைத்துக் கொள்ளவும்.

தேங்காய் விழுது

தேங்காய், கசகசா, ஒரு தேக்கரண்டி சோம்பு சேர்த்து நன்கு விழுதாக அரைத்துக் கொள்ளவும்.

தாளிக்க

* பட்டை – சிறிது
* ஏலக்காய் – 2
* கிராம்பு – 2
* பிரியாணி இலை – சிறிது
* கருவேப்பிலை – சிறிது
* சோம்பு – 1 தேக்கரண்டி

செய்முறை
1443601005 0056
1. மட்டனை கழுவி சிறிய துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.
2. வெங்காயம், பூண்டு, தக்காளி ஆகியவற்றை சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
3. குக்கரில் 2 மேசைக்கரண்டி அளவு எண்ணெய் ஊற்றி அதில் தாளிக்க கொடுத்துள்ள பொருட்களைச் சேர்த்து வதக்கவும்.
4. பின் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
5. நறுக்கி வைத்துள்ள வெங்காயம், பூண்டு, தக்காளி ஆகியவற்றை ஒவ்வொன்றாகச் சேர்த்து வதக்கவும்.
6. பின்னர் மட்டன், மஞ்சள்தூள் சேர்த்து 5 நிமிடங்கள் வதக்கவும்.
7. அதனுடன் அரைத்து வைத்துள்ள மசாலா தூள், மல்லித்தூள் சேர்த்து சிறிது நேரம் வதக்கவும்.
8. இதனுடன் 3 கப் தண்ணீர், தேவையான அளவு உப்பு சேர்த்து மூடி போட்டு மிதமான சூட்டில் வேக வைக்கவும்.
8. ஒரு விசில் வந்த பிறகு, சூட்டை குறைத்து மேலும் 12 நிமிடங்கள் வேக வைக்கவும்.
9. குக்கர் ஆவி அடங்கிய பின்பு, அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுது சேர்த்து மேலும் 5 நிமிடங்கள் கொதிக்க விட்டு இறக்கவும்.

Related posts

சுவையான செட்டிநாடு ஸ்டைல் பன்னீர் குருமா

nathan

சுவையான செட்டிநாடு கோழி உப்பு வறுவல்

nathan

சுவையான செட்டிநாடு வத்த குழம்பு

nathan

செட்டிநாடு புளிக்குழம்பு

nathan

சூப்பரான செட்டிநாடு கத்தரிக்காய் வறுவல்

nathan

செட்டிநாடு மீன் பிரியாணி,tamil samayal tips

nathan

செட்டிநாடு காளான் மசாலா

nathan

செட்டிநாடு உருளைக்கிழங்கு வறுவல் செய்முறை

nathan

சூப்பரான செட்டிநாடு தக்காளி குழம்பு

nathan