விசுவாசம் என்பது நம் ஒவ்வொரு உறவிலும் நாம் அனைவரும் எதிர்பார்க்கும் ஒரு குணமாகும். இது நம்முடைய நண்பர்கள், உடன்பிறப்புகள், கூட்டாளர்கள் என யாராக இருந்தாலும் சரி, விசுவாசம் என்பது அவர்களை நம்புவதற்கும் அவர்களை சார்ந்திருப்பதற்கும் நமக்கு உதவும் ஒன்றாகும்.
விசுவாசமான மக்களை கண்டறிவது என்பது நம் வாழ்க்கையில் மிகவும் தேவையான அதேசமயம் கடினமான ஒன்றாகும். இந்த குணம் அனைவருக்கும் பொதுவானதாக இருந்தாலும் சில ராசிக்காரர்களுக்கு இது மிகவும் அதிகமாக இருக்கும். அதன்படி எந்தெந்த ராசிக்காரர்களுக்கு இந்த குணம் அதிகமாக இருக்கும் மற்றும் எந்த ராசிக்காரர்களுக்கு குறைவாக இருக்கும் என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
கடகம்
இந்த ராசியைச் சேர்ந்தவர்கள் உங்கள் வாழ்க்கையில் உங்களுக்கு நெருங்கிய நபராக இருந்தால், அவர்கள் உங்களிடம் இருந்து எந்த நிலையிலும் பின்வாங்க மாட்டார்கள் என்பதில் நீங்கள் நூறு சதவீதம் உறுதியாக இருக்க முடியும். அனைவரையும் விட மிகவும் விசுவாசமான இராசிகாரர்கள் இவர்கள்தான், இவர்கள் தாங்கள் கொண்டிருக்கும் அனைத்தையும் உங்களுக்கு வழங்குவார்கள்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்கள் எப்போதும் உறவுகளில் சிறந்தவர்கள் அல்ல என்றாலும், விசுவாசம் என்று வரும்போது வரும்போது, நீங்கள் அவர்களை முழுமையாக நம்பலாம். அவர்கள் உங்களை வெறுக்கிறார்களோ அல்லது நேசிக்கிறார்களோ, அவர்கள் எப்போதும் அந்த நிலைப்பாட்டிற்கு விசுவாசமாக இருப்பார்கள்.
ரிஷபம்
பிடிவாதத்திற்கு பெயர் ரிஷப ராசிக்காரர்கள் விசுவாசமான நண்பர்களாகவும், காதலர்களாகவும் அறியப்படுகிறார்கள். அவர்கள் யாரை நேசிக்கிறார்கள் மற்றும் அவர்களுடன் எப்படி நேரத்தை செலவிடுகிறார்கள் என்பதில் அவர்கள் மிகவும் தெளிவாக இருப்பார்கள்.
கன்னி
கன்னி எல்லாவற்றையும் சுத்தமாகவும் உண்மையானதாகவும் வைத்திருக்க விரும்புகிறார். அவர்கள் நம்பிக்கைகளில் விளையாடுவதை விரும்புவதில்லை மற்றும் எந்தவொரு உறவிலும் பொதுவாக நிலையான மற்றும் விசுவாசமானவர்களாக இருப்பார்கள்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்கள் தங்கள் கூட்டாளர்களையும் நண்பர்களையும் தங்களைத் தற்காத்துக் கொள்ளும் விதத்தில் பாதுகாக்கிறார்கள், அதற்காக எதையும் செய்வார்கள். சூழ்நிலை எதுவாக இருந்தாலும் இவர்கள் உங்கள் பக்கத்திலேயே நிற்பார்கள், உங்களுக்கு தீங்கு செய்த எவரையும் கடுமையாக எதிர்ப்பார்கள்.
மிதுனம்
மிதுன் ராசிக்காரர்கள் தீவிரமான விசுவாசமான ராசியாகும், குறிப்பாக நீண்ட கால உறவில். இவர்கள் நம்பகமான கூட்டாளரை அல்லது நண்பரைக் கண்டறிந்ததும், அவர்கள் முற்றிலும் அர்ப்பணிப்புடனும் உறுதியுடனும் மாறிவிடுவார்கள்.
துலாம்
துலாம் ராசிக்காரர்கள் அர்ப்பணிப்பு மற்றும் விசுவாசமாக இருக்க முனைகிறார்கள். இருப்பினும், சில சமயங்களில் அவர்களின் சொந்த வழியில் நிற்பதை அவர்கள் வசதியாக உணர்கிறார்கள். ஆனால் அவர்கள் சரியான நபரைக் கண்டால், அவர்கள் முற்றிலும் விசுவாசமுள்ளவர்களாகவும், உறுதியானவர்களாகவும் இருப்பார்கள்.
மகரம்
மகர ராசிக்காரர்கள் தங்களுடனான முந்தைய உறவுகளிலிருந்து உணர்ச்சிகரமான விஷயங்கள் அனைத்தையும் எடுத்துச் செல்லும் பழக்கம் கொண்டவர்கள். கடந்த காலங்களில் அவர்கள் சந்தித்த இந்த அதிர்ச்சி அனைத்தும் புதிய நபர்களிடம் ஈடுபடுவதற்கும் முற்றிலும் விசுவாசமாக இருப்பதற்கும் அவர்களைத் தடுக்கும்.
மேஷம்
மேஷம் நிச்சயமாக அவர்கள் விரும்பும் மக்களுக்கு விசுவசமாக இருப்பார்கள். இருப்பினும், அவர்கள் மனதை மாற்றும் அல்லது உற்சாகப்படுத்தும் வேறு ஏதாவது ஒன்றைக் கண்டால், அவர்கள் இதயம் சொல்வதைக் கேட்டு அதனை பின்பற்றுவார்கள்.
தனுசு
இவர்கள் எப்போதும் உற்சாகத்தைத் தேடுகிறார்கள், அவர்களால் ஒரே இடத்தில் நீண்ட நேரம் இருக்க முடியாது. ஆகவே, தனுசு மிகவும் விசுவாசமான அல்லது உண்மையுள்ள இராசி அல்ல, ஏனெனில் அவர்களின் சுதந்திர தாகம் அவர்களைக் கட்டுப்படுத்துகிறது.
மீனம்
மீனம் பெரும்பாலும் அவர்களின் மந்திர கற்பனை உலகங்களில் சிக்கி, அவர்களின் உத்வேகத்தால் உந்தப்பட்டு, அவர்களை வித்தியாசமாக சிந்திக்க வைக்கிறது. அவர்கள் ஒரு உறவில் சலிப்பை உணர்ந்தவுடன் அதிலிருந்து விலகி முன்னேறிவிடுவார்கள்.
கும்பம்
அனைத்து ராசிகளிலும் குறைவான விசுவாசம் கொண்ட ராசிகளாக கருதப்படுவது கும்ப ராசிதான். இவர்கள் எப்போதும் தங்களின் உண்மையான குணம் வெளிப்பட்டுவிடுமோ என்ற அச்சத்திலேயே இருப்பார்கள். இவர்கள் எவ்வளவுதான் உங்களிடம் ஆழமாக பழகினாலும் இவர்களின் உண்மையான குணத்தை உங்களால் அறிந்து கொள்ள முடியாது.