25.6 C
Chennai
Wednesday, Jan 22, 2025
201908161
தலைமுடி சிகிச்சை

கட்டுக்கடங்காமல் முடி வளர்வதற்கு 1 ஸ்பூன் கிராம்பு போதும்.தெரிந்துகொள்வோமா?

நம்முடைய முடி அறுபடக் கூடாது. நரம்பு போல உறுதியாக இருக்க வேண்டும். புதிய முடிகள் வளர்வதற்கு தடையாக இருக்கும் இன்ஃபெக்சனை தடுக்க வேண்டும். பொடுகு சுண்டு வராமல் தலை சுத்தமாக இருக்க வேண்டும் என்றால் மிக மிக சுலபமான முறையில் எந்த பேக் போடுவது. இதோடு மட்டுமல்லாமல் என்னுடைய முடி பார்ப்பதற்கு மிகவும் ஷைனிங்காகவும், பவுன்சியாக, சில்க்கியாக அழகாக இருக்க வேண்டும். இதற்கெல்லாம் சேர்த்து செலவு குறைவான சிம்பிளான பேக் உங்களுக்காக.

இந்த பேக் தயார் செய்ய நமக்கு அலோவேரா என்று சொல்லப்படும் கற்றழை தேவை. இயற்கையாகக் கிடைத்த கற்றாழையாக இருந்தால் சிறப்பு. இயற்கையாக கற்றாழை செடியில் இருந்து ஒரு துண்டு கிடைக்கவில்லை என்றால், கடையில் வாங்கிய கற்றாழை ஜெல்லை பயன்படுத்திக் கொள்ளலாம்.

 

இயற்கையாக கிடைத்த கற்றாழை துண்டு இருந்தால் அதை முதலில் சுத்தமான தண்ணீரில் கழுவி விடுங்கள். அதன் பின்பு அந்த கற்றாழையில் இருக்கும் இரண்டு பக்கம் முல்லை மட்டும் நீக்கிவிட்டு கற்றாழையை கத்தியை வைத்து சின்ன சின்ன துண்டுகளாக தோலுடன் வெட்டிக் கொள்ளுங்கள். ஒரு சிறிய பவுலில் நல்ல தண்ணீர் எடுத்து வெட்டி வைத்திருக்கும் கற்றாழையை அதில் போட்டுக் கொள்ள வேண்டும். அதன் பின்பு 1 ஸ்பூன் கிராம்பை அந்த தண்ணீரோடு போட்டு ஒரு மூடி போட்டு 8 மணி நேரம் அப்படியே ஊற விட்டு விடுங்கள்.

 

மறுநாள் காலை இந்த ஜெல்லை தலையில் அப்ளை செய்ய வேண்டுமென்றால் முந்தைய நாள் இரவே இரண்டு பொருட்களையும் தண்ணீரில் போட்டு ஊற வைத்து ஒரு மூடி போட்டு வையுங்கள். மறுநாள் காலை பேக் போடுவதற்கு முன்பு இந்த ஜெல்லை உங்கள் கையைக் கொண்டு நன்றாக பிசைய வேண்டும். (கற்றாழையும் கிராம்பும் தண்ணீரில் ஊறி, தண்ணீரின் நிறம் கிராம்பு நிறத்திற்கு மாறி இருக்கும்.)

 

அப்படியே கொழகொழவென ஒரு ஜெல் உங்களுக்கு கிடைத்திருக்கும். இந்த ஜெல்லை ஒரு பெரிய வடிகட்டியில் ஊற்றி நன்றாக பில்டர் செய்து கொள்ள வேண்டும். ஸ்டீல் வடிகட்டி பெரிய ஓட்டைகளாக இருக்கும் அல்லவா அதில் வடிகட்டி கொள்ளுங்கள். இந்த ஜெல்லை உங்களுடைய தலையில் அப்படியே மண்டை ஓட்டில் இருந்து மயிர்க்கால்களில் இருந்து நுனி முடி வரை அப்ளை செய்து, 15 நிமிடங்கள் ஊற வைக்க வேண்டும். அதன் பின்பு ஷாம்பூ சீயக்காய் கூட போட வேண்டாம். வெறும் தண்ணீரிலேயே உங்கள் முடியை அலசி காய வைத்து பாருங்கள். உங்களுடைய முடியில் நல்ல வித்தியாசம் தெரியும்.

 

உங்களுக்கு இயற்கையான கற்றாழை கிடைக்கவில்லை என்றால் முந்தைய நாள் இரவு தண்ணீரில் வெறும் கிராம்பை மட்டும் ஊற வைத்துவிட்டு, மறுநாள் அந்த தண்ணீரை வடிகட்டி எடுத்து அந்த தண்ணீரில் அலோ வேரா ஜெல்லை சேர்த்து கரைத்து அதன் பின்பு தலைக்கு அப்ளை செய்து கொள்ள வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது. கடையில் ஆலோவேரா ஜெல் வாங்கும்போது கலர் சேர்க்காத ஆர்கானிக் பொருளாக பார்த்து வாங்கி கொள்ளுங்கள். வாரத்தில் ஒருநாள் மட்டும் இந்த பேக்கை பயன்படுத்தவேண்டும். பிறகு ஒரு மாதம் கழித்துதான் மீண்டும் இந்த பேக்கை பயன்படுத்தவேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

தலைமுடி பராமரிக்கும் முறை

nathan

தெரிஞ்சிக்கங்க…ஹென்னாவை தலைக்கு பயன்படுத்துவதால் கிடைக்கும் நன்மைகள்!!!

nathan

சூப்பர் டிப்ஸ்! பொடுகைப் போக்கி முடி வளர்ச்சியை வேகமாகத் துண்டும் முள்ளங்கி…

nathan

சூரியனிடமிருந்து கூந்தலை எப்படி பாதுகாக்கலாம் தெரியுமா?

nathan

இழந்த முடியை மீண்டும் பெற வழிகள்

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…கூந்தல் வளர்ச்சிக்கு உதவும் கறிவேப்பிலை சூப்

nathan

தலைமுடியில் வியர்வை நாற்றம் அதிகம் வீசுதா? சில நேச்சுரல் ஹேர் பெர்ஃப்யூம்கள்!

nathan

உங்களது கூந்தல் அதிகமாக கொட்டுகின்றதா

nathan

கூந்தலுக்கு ஹேர் கலரிங் செய்யும் போது கவனிக்க வேண்டிவை

nathan